Friday, April 16, 2010

போட்டோஷாப் பாடங்கள் -6

போட்டோஷாப் பாடங்கள் -6

(FREE TRANSFORM TOOL)


போட்டோஷாப் பாடங்கள் -6

நாம் இதுவரை போட்டோஷாப் பாடம் 5 வரையிலும்

அதில் மார்க்யூ டூலில் உள்ள Free Transform பற்றியும்

பார்த்துவருகின்றோம். இதுவரை பாடங்கள் பார்க்காத

வர்களுக்காக கடந்த 5 பாடங்களின் இணைப்பை இங்கு

பதிவிட்டுள்ளேன்.

பாடம்-1 பாடம்-2 பாடம்-3 பாடம்-4 பாடம்-5


இன்று மாடலுக்காக மகாபலிபுரம் கடற்கரை கோயிலை

எடுத்துள்ளேன்.இதில் முதலில் மார்க்யூ டூலால் செல்க்ட்

செய்யவும். பின் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும்.

அதில் Free Transform Tool செல்க்ட் செய்யுங்கள்.

Free Transform Tool -ல் நாம் அதனுடைய உப டூல்களை

பயன்படுத்தாமல் படத்தை வேண்டிய பயன் பாட்டுகளுக்கு

சுருக்கிக்கொள்ளலாம். இந்த படத்தில் Free Transform

Tool மட்டும் பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள

சதுரத்தில் கர்சரை தள்ள படமானது வலமிருந்து இடமாக

சுருங்குவதை பாருங்கள்.



இந்தப்படத்தை பாருங்கள். இதில் நடுவில் உள்ள சதுரத்தில்

கர்சரை வைத்து தள்ள படமானது வலப்புறம் இருந்து இடப்புறம்

செல்வதைக்காணலாம்.



இதைப்போலவே படமானது கீழிருந்து மேல்நோக்கி

செல்வதை பாருங்கள்.


இதைப்போலவே படங்களை மேலிருந்து கீழாகவும்

இடமிருந்து வலமாகவும் மாற்றலாம்.



இந்த டூல்களின்பயன்பாடுகளை நினைவில் வைத்துக்

கொள்ளுங்கள்.பின்னர் போட்டோஷாப்பில் பணி

புரிகையில் நமக்கு உபயோகப்படும்.

சரி பாடத்திற்கு வருவோம். நீங்கள் படத்தை

தேர்வுசெய்து மார்க்யூ டூலால் செலக்ட் செய்தபின்

உங்களுக்கு வழக்கபடி Transform Tool -ல் உள்ள அனைத்து

டூல்களும் தெரியவரும் . அதில் சென்றவாரம் நாம்

Scale Tool பற்றி பார்த்தோம். இனி அடுத்து உள்ள Rotate

Tool பற்றி பார்ப்போம். இனி Scale Tool க்கு அடுத்துள்ள

Rotate Tool செலக்ட் செய்யுங்கள்.


உங்களுக்கு முன்பு பார்த்தமாதிரி படத்தை சுற்றிலும்

கோடுகளும் - சிறிய சதுரங்களும் கிடைக்கும்.

இப் போது கர்சரை அங்கு எடுததுச்சென்றால்

கர்சரானது வளைந்த அம்புக்குறியுடன் தோன்றும்.

இனி நீங்கள் படத்தை உங்களுக்கு வேண்டிய அளவில்

திருப்பிக் கொள்ளலாம்.(படமானது வண்டியின்

ஸ்டேரிங் மாதிரி திருப்புவதை காணலாம்)



அடுத்து உள்ள Tool - Skew ஆகும். அதை யும் வழக்கபடி

தேர்வுசெய்து கொள்ளுங்கள்.


Skew Tool ஆனது படங்களை விருப்பபடி சாய்துக்

கொள்வதற்கு பயன் படுகின்றது. படத்தை பாருங்கள்.


இதில் மூலையில் உள்ள சதுரத்தை நீங்கள்

கர்சரால் இழுக்கையில் கர்சரானது நீங்கள் படுக்கை

வாட்டத்தில் இழுத்தால் படுக்கை வாட்டத்திலும்

(Horizontal) ,உயர வாட்டத்தில் இழுத்தால் உயர

வாட்டத்திலும் (Vertical) படம் நகரும். ஆனால்

நீங்கள் இழுக்கும் சதுர மூலைமட்டுமே நகரும்.

மற்ற பக்கங்கள் நகராது.

அடுத்து உள்ள து Distort Tool. இதன் உபயோகம் பற்றி

பார்ப்போம்.


இது படத்தை நான்கு மூலைகளிலும் இருந்து

இழுத்து சிறப்பு தோற்றங்களை உருவாக்கலாம்.

கோட்டிற்கு வெளியில் செல்லும் போது படமானது

விரிவாகவும் கோட்டிற்கு உள்செல்லும்போது

படமானது சுருங்கியும் வரும்.



மூலையில் உள்ள சதுரத்தை நாம் கர்சரால்

இழுக்க படமானது நம் இழுப்புக்கு ஏற்றவாறு

வருவதை காணலாம்.


அடுத்து உள்ளது Prespective Tool. அதைப்பார்ப்போம்.


இந்த டூலை பயன்படுத்தி படத்தின் மூலையில்

உள்ள சதுரத்தை உள்புறம் இழுக்க படமானது நீங்கள்

இழுக்கும் திசையில் சுருங்குவதை காணலாம்.

படமானது V-Shape -ல் உருவாவதை காணலாம்.


கீழ்புறம் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே...

பக்கவாட்டில் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே.
மேல்புறம் படத்தை சுருக்கினால் வரும் படம் மேலே...

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

JUST FOR JOLLY PHOTOS

பதிவுகளை படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்

Leia mais...

போட்டோஷாப் பாடங்கள்-5


அதில் உள்ள சிவசிவ என்கிற பெயர்பலகையை மட்டும்

மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.





பின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன். 




உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Free Transform கிளிக் செய்யுங்கள். 

இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்த சிவசிவ

என்கிற பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-

அதன் நான்கு மூலைகளில் சிறிய சதுரமும்- அதிலுள்ள

இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் 

ஆக மொத்தம் உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும்.

செய்து பாருங்கள். 8 சதுரங்கள் உங்களுக்கு வருகின்றதா?

8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி

பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். 

இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால்

பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா? அதுபோல்

அனைத்து சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.



உங்களுக்கு சிவசிவ பெயர்பலகை எவ்வளவு பெரியதாக

மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம் கீழ் 

மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள

சதுரத்தின் மூலையை தாண்டி எடுத்துச்செல்லுங்கள்.

படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து 

இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.



இதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்


மேலிருந்து கீழாகவும்  நகர்த்தி வைக்கலாம்.


அடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை

பார்ப்போம். மார்க்யூ டூலால் படத்தை தேர்வு செய்து

பின் கர்சர் வைத்து கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள்

தேர்வு செய்ததும் உங்களுக்கு File,.Edit ,Image  போன்ற

கட்டளை டூல்கள் உள்ள Menu Bar கீழ் Option Bar பார்த்தால்

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.



இதில் X  - AXIS,  Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % ,<-ANGLE, 

 H-HORIZONTAL,  V-VERTICAL , என அளவை மாற்றக்கூடிய

கட்டங்கள் இருக்கும். அதில் x-axis அளவை மாற்றினால்

படம் x-axis-ல்(பக்க வாட்டில்-படுக்கை வசத்தில்)

 நகர்வதை பார்க்கலாம். அதுபோல் y-axis அளவை 

மாற்றினால் படம் y-axis-ல் மேல்நோக்கி நகர்வதை

 காணலாம். அதுபோல் width உள்ள % அளவை 

மாற்றினால் படம் அகலத்தில் மாறுவதை காணலாம்.




இதில் மேலே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். 

width %  மாற்றியபின் கீழே உள்ள படத்தில் நந்தியை

பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள..



அடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம்

செய்வதின் மூலம் படத்தை நமக்கு தேவையான கோணத்தில்

மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal Degree,

Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம்.

சரியான அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்

கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க -மவுஸால் தேர்வு

செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக

மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம்.

Scale மூலம் படத்தை மாற்றாமல் மவுஸாலேயே

படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

பதிவு நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

பாடத்தை படியுங்கள். பதிவு பிடித்திருந்தால் ஓட்டு

போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

Leia mais...

Thursday, April 15, 2010

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4


போட்டோஷாப் பாடங்கள் -4

இதுவரை போட்டோஷாப் பாடங்கள் 3 வரை

பார்த் தோம் . இதுவரை முன் பாடங்களை

படிக்காதவர்கள் முன்பதிவை படித்துவிட்டு

இதை தொடரவும். முன்பதிவை படிக்கா

தவர்களுக்காக மூன்று பாடங்களையும்

இங்கே பதிவிட்டுள்ளேன்.




போட்டோஷாப்பில் ஒருபடம் நாம்

மாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி

DUBLICATE எடுத்துவைக்க சொல்லி

யிருந்தேன். நண்பர் ஒருவர் DUBLICATE

எப்படி எடுப்பது என கேட்டிருந்தார்.

அதனால் DUBLICATE எப்படி எடுப்பது என

முதலில் பார்ப்போம்.

உங்களுக்கு தேவையான படத்தை

முதலில் திறந்துகொள்ளுங்கள்.

நான் இந்த பிரம்மா படத்தை தேர்வு

செய்து திறந்துள்ளேன்.



இப்போது மேல் புறம் பார்த்தால் உங்களுக்கு

FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT... என

வரிசையாக இருப்பதில் IMMAGE -ஐ

தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு வரிசையாக

கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.



அதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு படத்தின் மீது கீழ்கண்டவாறு

ஒரு விண்டோ திறக்கும்.


அதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ - அல்லது

புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள் விரும்பும்

பெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து OK

கொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு

தோன்றும்.







இதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை

மூடிவைத்துவிட்டு காப்பி யில்( நிஜத்தின் நிழலில்)

என்னவேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள்

உங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள்.

பிடிக்கவில்லையென்றால் அதை கான்செல்(cancel)

செய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை

பிரதி(Dublicate) எடுத்துக்கொள்ளுங்கள்.

பிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற நான்கு -ஐந்துமுறை

முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும்.

இனி பாடத்திற்கு வருவோம். சென்ற பதிவுகளில்

மார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள

பிற வசதிகளையும் இப்போது பார்ப்போம்.

இதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse,

Feather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது

Save Selection..இதன் உபயோகம் நமக்கு இப்போது

தேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம்.

அடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு

செய்யுங்கள். நீங்கள் மார்க்யூ டூலால் தேர்வுசெய்த

பகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும்

பகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.



இதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன்

ஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.


நான் கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன்.

இது படத்தை சுற்றி ஒரு கேர்டு போட்டவாறு நமக்கு

படம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில்

நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு,

கட்டம் கட்டி காண்பிக்க இது பயன்படுகிறது. பிரபல

மானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில்

அவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி

யுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம்

செய்யலாம்.


அடுத்து நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர்

என்றால் என்ன? போட்டோஷாப்பின்

உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி

பின்னர்வரும் பாடங்களில் விரிவாக

பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது?

மிகவும் சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை

ஒரு முறை அழுத்துங்கள் . உங்களுக்குக்கான

லேயர்ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்.


சரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால்

தேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து

வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்


நீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில்

சென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்.


அதைப்போலவே லேயர் வழி கட்.(Layer via Cut)


இதை தேர்வு செய்தாலும் உங்களுக்கு முன்பு

சொன்னவாறே லேயரில் படம் தேர்வாகும்.


அடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால்

உங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.


அதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.


உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம்

ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதிய லேயர்

ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.


லேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக

பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில்

Free Transform பற்றி பார்க்கலாம். பதிவின்

நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

இங்குள்ள கோயிலின் சிற்பங்கள் தேரில்

பொருத்துவதற்காக வைத்துள்ளவை.

பதிவை படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

Leia mais...

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3



போட்டோஷாப்பில் இன்று மூன்றாவது பாடம்.

முதல் இரண்டு பாடங்கள் படிக்காதவர்கள்

இரண்டு பாடங்களையும் படித்துவிட்டு

தொடர்ந்து இந்த பாடம் படிக்கவும். புதியவர்

களுக்காக முதல் இரண்டு பாடங்கள் கீழே:-



போட்டோஷாப் முதல் பாடம்-1
போட்டோஷாப் இரண்டாம் பாடம்-2

சென்ற வார பதிவுகளில் Morquee Tools

பற்றி பார்த்தோம். இப்போது இந்த

மார்க்யு டூலை தேர்வுசெய்து மேலும்

பல வசதிகளை பெறுவது பற்றி பார்ப்போம்.

இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில்

பார்த்தீர்களே யானல் உங்களுக்கு File,Edit,Image

பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில்

செலக் ஷன் டூல்கள் 4 இருக்கும். அந்த டூல்கள்

தான் இவை:-



இதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில்

இதை பார்த்தோம். சதுரமாகவோ - செவ்வகமாக வோ

படம் இருந்தால் தேர்வு செய்துவிடுகின்றோம். ஆனால்

அதுவோ செவ்வகம் நெடுக்கு வசத்திலும் - படுக்கை

வசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன

செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக

உள்ளAdd to Selection Tool உதவுகிறது.

இப் போது இந்த படத்தைபாருங்கள்.


இந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம்

மட்டும் வேண்டும்.ஆனால் New Selection Tool-ல்

தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும்.

ஆனால் Add Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம்.

முதலில் New Selection மூலம் கோபுரம் மட்டும்

தேர்வு செய்யுங்கள்.



அடுத்து Add Selection Tool மூலம்

பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்.





இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட்

செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.




இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில்

ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர்

நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது?

அதற்கு இந்த Subtract Selection Tool உதவும்.

முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த

டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும்

தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி

மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.


முன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட்

செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி

நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.



வரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம்

நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது

Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும்

தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.



இப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட்

செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.



இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல்

Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்.


இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை

பாருங்கள்.



இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து

விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால்

நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன்

மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும்.

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

மீண்டும் போட்டோஷாப் பாடம் அடுத்தவாரம் பார்க்கலாம்.

புகைப்பட மாதிரிக்காக நான் எடுத்த

கங்கைகொண்ட சோழபுரம்

கோயிலின் புகைப்படம் பயன்படுத்தியுள்ளேன்.

வாழ்க வளமுடன்,

Leia mais...

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.


சென்ற வாரம் போட்டோஷாப் பாடம் -1

பதிவிட்டிருந்தேன். சென்ற வாரம்

பாடத்தை தவற விட்டவர்கள்இதைபடித்தபின் பாடத்தை தொடரவும்.



சென்ற வாரம் Marquee tool பார்த்தோம்.

மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும்.

அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.


உங்களுக்கு மேற்கண்ட வாறு சாரளம் ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் உள்ளது Deselect. ஆதாவது நாம்

தேர்ந்தேடுத்த Marquee Tool தேவையில்லை என்றால்

இதை செலக்ட் செய்யவும். நாம் தேர்ந்தேடுத்தது

மறைந்து விடும். அடுத்து உள்ள Select Inverse.

நாம் தேர்ந்தேடுக்கும் பாகத்தை தவிர மற்ற

இடங்கள் செலக்ட் ஆகும். உதாரணத்திற்கு

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள படத்தில்

கண்ணை மட்டும் Rectangle Marquee Tool ஆல்

செலக்ட் செய்துள்ளேன்.


அடுத்து அதில்

வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்

கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள

Select Inverse தேர்வு செய்யவும். இப்போது

உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை

மட்டுமில்லாது படத்தை சுற்றியும்

உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு

ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி

செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன்

செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே

கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.


(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும்

மறைத்துப்பார்திருப்பீர்கள். அதை இவ்வாறு

தான் செய்வார்கள்.)

அடுத்து Feather பாடம். Feather என்றால் இறகு

என்று பொருள்ஆகும். இறகை பார்த்திருப்பீர்கள்.

அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம்

செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும்.

அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம்

கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது.

முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள்.

முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-

தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும்.

வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும்.

உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம்

ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும்

Redius Pixel அளவை தேர்வு செய்யவும்.

இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு

படத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை

காண்பிர்கள்.

நான் இங்கு சூரியனின் படம் தேர்வு செய்து



அதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 80 வைத்துள்ளேன்.

படத்தை பாருங்கள்.



நாம் 80 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.





அதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ்



அளவு 20 வைத்து படம் தேர்வு செய்துள்ளேன்.



வித்தியாசத்தை பாருங்கள்.




மேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல

பயிற்சி எடுத்தால் தான் அடுதது இதன்

மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு

உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன்பயன்களையும் பின்னர்பார்க்கலாம்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் பாடம்

முடித்துக்கொள்கின்றேன்.நன்றாக

பயிற்சி எடுங்கள் -மீண்டும் அடுத்தவாரம்

பாடங்கள் படிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo