Friday, September 17, 2010

போட்டி

1)

1
11
21
1211
111221
312211
13112221
?

அடுத்த எண் என்னவாக இருக்கும் ? (இதற்குப் பாரதியால் கூட பதில் சொல்ல முடியாது. [பாரதியை வரவழைக்க இதுவும் ஒரு வழி])

2)
ஒரு தவளை 10 அடி ஆழமுள்ள கிணற்றினுள் விழுந்து விட்டது. ஒரு நாளில் அதனால் 3 அடிகள் உயரே தாவ முடிந்தால் 2 அடிகள் சறுக்கிவிடுகின்றது.
அப்படியெனில் எத்தனையாவது நாளில் அத்தவளை கிணற்றை விட்டு வெளியேறும்?

3)   சிகரெட் புகை பிடித்தலுக்கு அடிமையானவன். ஒரு நாள் புகைபிடிப்பதற்குக் கையில் காசு ஏதுமில்லை. எனவே மற்றவர் புகைபிடித்துவிட்டுத் தூக்கி எறிந்துள்ள சிகரெட் துண்டுகளைச் சேகரிக்கின்றான். 6 சிகரெட் துண்டுகளைக் கொண்டு 1 சிகரெட் தயாரிக்க முடியும் எனக் கண்டு கொள்கிறான்.

ஒரு நாள் அவனுக்கு 36 சிகரெட் துண்டுகள் கிடைக்கின்றன. அப்படியெனில் அவன் அன்று எத்தனை சிகரெட் புகைத்திருப்பான்?





பதில்:- emot-dance.gif


1
11
21
1211
111221
312211
13112221

1113213211

31131211131221

1

ஒரு ஒன்று => 1 1
இரண்டு ஒன்று => 2 1

ஒரு இரண்டு , ஒரு ஒன்று => 1 2 , 1 1

ஒரு ஒன்று, ஒரு இரண்டு, இரண்டு ஒன்று => 1 1, 1 2, 2 1

மூன்று ஒன்று, இரு இரண்டு, ஒரு ஒன்று => 3 1, 2 2 , 1 1



Posted Image
இதனைப் பாருங்கள், இப்படித்தான் நான் கணக்கிட்டேன். 8வது நாளில் கிணற்றின் விளிம்பிற்கு வந்துவிடாது அத்தவளை?




3) 7 என்பது சரியான விடையாகும்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo