Thursday, September 9, 2010

கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்

மே 11, 2010
நம் இணையதளத்திற்க்கு சில நேரங்களில் ஏதாவது வித்தியாசமான
பின்னோட்டம் வருவது உண்டு அப்போது அது என்ன மொழி என்று
தெரியாமல் கோழி கிறுக்கியது போல் இருப்பதால் அதை குப்பைக்கு
நகர்த்தி விடுவதும் உண்டு ஆனால் கூகுள் உதவியுடன் அதை நாம்
எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் அந்த மொழியை
எப்படி ஆங்கில மொழிக்கு எளிதாக மாற்றலாம் என்பதைப்
பற்றித்தான் இந்த பதிவு.

சில இணையதளங்களில் முக்கியமான செய்தி வேற்று மொழிகளில்
வெளிவந்திருக்கும் ஆனால் அது என்ன மொழியில் இருக்கிறது
என்று தெரியவில்லையா உடனடியாக நாம் என்ன மொழி என்று
கண்டுபிடிக்க கூகுளில் ஒரு வசதி உள்ளது. கூகுளின் மற்றோரு
சேவையான கூகுள் மொழிமாற்றியில் நாம் எளிதாக எளிதாக
எந்த மொழியையும் கண்டுபிடிக்கலாம். கூடவே அந்த மொழியை
ஆங்கில மொழிக்கு மாற்றலாம். இதற்க்கு உதவும் கூகுளில்
இணையதள முகவரி : http://translate.google.com
இதில் நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் காப்பி செய்து
படம் 1 -ல் காட்டியபடி உள்ள கட்டத்திற்க்குள் கொடுத்து விட்டு
Enter பொத்தானை அழுத்தியதும் நாம் எந்த மொழியை
கொடுத்திருக்கிறோம் என்றும் அதை எந்த மொழிக்கு மாற்ற
வேண்டும் என்றும் காட்டும் தற்போது அனைத்து மொழிகளையும்
எளிதாக கண்டுபிடிக்கிறது ஆனால் மற்ற மொழியில் இருந்து
தமிழ் மொழிக்கு மாற்றுவது மட்டும் இப்போதைக்கு துனை
செய்யவில்லை. கண்டிப்பாக இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
நல்ல மனமும் நோய் இல்லாத வாழ்வும் ,அளவான
பணமும் கொடு என்று கடவுளிடம் வேண்டுதல்
செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.லேசர் செயல்பாட்டின் இடைநிலை அணுக்களின் நேரம் என்ன?
2.மைஸீலியம் என்ன வகை நோயாகும் ?
3.மின்கடத்தாப்பொருளின் வேறு பெயர் என்ன ?
4.ஜமைக்காவின் தலைநகர் எது ?
5.ஈர்ப்பு விதியால் புகழப்பட்டவர் யார் ?
6.சிவபெருமானின் வாகனம் எது ?   
7.கலைவானர் என்.எஸ்.கே நடித்த கடைசி திரைப்படம் ?
8.மீயொலி உண்டுபண்ணும் பிராணி எது ?
9.கத்ரி கோபால்நாத் இசைக்கும் கருவி எது ?
10.இந்தியாவின் மிகப்பெரிய மக்னீசியம் தொழிற்ச்சாலை
   எங்குள்ளது ?
பதில்கள்:
1.10 விநாடி,2. பாக்டீரியா நோய், 3. மின்காப்பு பொருள்
4.கிங்ஸ்டன்,5.ஐன்ஸ்டீன்,6. ரிஷபம், 7.அம்பிகாபதி,
8. வெளவால் 9.ஸாக்ஸோபோன்,10.சேலம்
இன்று மே 11 
பெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,
பிறந்த தேதி : மே 11, 1895
இந்திய தத்துவ மெய்யறிவாளர்களுள்
முக்கியமானவர்.உலகளவிலும் முக்கியமான
தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக
மதிக்கப்படுகிறார்.பல நாடுகளிலுள்ள மக்களைச்
சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும்
நிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும்
எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன்
கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள
முடியும் என்று கூறி வந்தார்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo