Saturday, June 11, 2011

பிரபலமான இடங்களை முழுவதுமாக இணையத்தில் பார்க்கலாம்



தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரண்மனைகள், கோட்டைகள், கோயில்களை நீங்கள் இணையத்தின் வாயிலாக ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும் . இந்த வசதியின் மூலம் உங்களின் சுற்றுலாவை கச்சிதமாக திட்டமிடமுடியும்.
இந்த வசதியினை
என்ற இனையதளம் இலவசமாக வழங்குகிறது.
நீங்கள் உங்களுக்கு வேண்டிய  இடத்தை தேர்வு செய்தவுடன் தோன்றும் படத்தில் “LINKS” என்ற லிங்க் இருக்கும் அதை அழுத்தியவுடன். உங்களுக்கு அந்த இணையத்திற்கு உண்டான தனி லிங்க் கிடைக்கும் .இதற்கு எந்த ஒரு மென்பொருளும் தேவை இல்லை என்பது சிறப்பு

Leia mais...

இலவசமாக PNR status ஐ உங்கள் மொபைலில் பெறுங்கள்



PNR STATUS  என்பது மின்தொடர் வண்டியில் உங்களின் ஒதுக்கீடு தொடர்பான தகவலை தருவதாகும். இதை இணையத்தின் மூலமாக அறியலாம். ஆனால் தற்போது அதை உங்கள் மொபைலுக்கும் SMS அனுப்பும் வசதி இணையத்தில் உள்ளது. இந்த சேவையின் மூலம் உங்கள் PNR status பற்றி SMS கள் உடனுக்குடன் கட்டணம் இல்லாமலேயே  உங்கள் தொலைபேசில் பெறலாம்  ..[..]இதற்கு www.mypnrstatus.com
என்ற இணையத்தில் உங்கள் மொபைலின் நம்பரை பதிவு செய்து உங்கள் PNR நம்பரை கொடுத்தால் போதும் .

Leia mais...

நீங்கள் உங்களுடைய Printer ஐ Google Cloud Print கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம்



கூகுள் Cloud Print  எந்த வகையான application  (web, desktop, mobile) ஆகா இருந்தாலும் எந்த Printer-லிருந்து  பிரிண்ட் செய்யலாம் .நாம் print செய்கையில் cloud-aware printers களுடன் Online -ல் இணைக்கப்பட்டுள்ளது . பின்பு cloud-aware தேர்ந்தெடுக்கப்பட்ட நமது கணினிக்கு பிரிண்ட் கட்டளை அனுப்பப்பட்டு print  செய்யப்படுகிறது. இது தற்போது சோதனை பதிப்பில் (BETA VERSION)மட்டும் தான் வெளி வந்துள்ளது
நாம் Browser print preview enable செய்ய வேண்டும்

Leia mais...

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?



MNP-India
அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.
STEP 1:
முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.
STEP 2:
இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
STEP 3:
தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.
STEP 4:
அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code
STEP 5:
தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.
STEP 6:
அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)
STEP 7:
உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.
STEP 8:
அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.
STEP 9:
இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.

Leia mais...

இலவச DropBox வழியே உங்களின் கோப்புகளை எந்தக் கணினியிலும் பயன்படுதுங்கள்.


இலவச DropBox வழியே உங்களின் கோப்புகளை எந்தக் கணினியிலும் பயன்படுதுங்கள்.

நீங்கள் அலுவலகம், வீடு, நண்பரின் வீடு என எங்கு சென்றாலும் ஏதேனும் ஒரு கணிப்பொறியைப் பயன்படுத்தும் நபரா?
ஏதேனும் ஒரு ஃபைல், புகைப்படம் உங்களின் வீட்டுக் கணினியில் இருக்கும் அதை தினமும் Modify செய்து மின்னஞ்சல் அல்லது Pendrive  மூலம் இங்கும் அங்கும் கொண்டுசென்று பயன்படுத்தும் நபரா?
உங்களுக்கு தேவையான ஃபைல் எந்த இடத்திலும் கிடைக்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது. அது தான் DropBox .
இதை உங்களின் கணினியில் நிறுவி DropBox எனும் ஒரு ஃபோல்டரில் உங்களின் எந்த ஃபைல், புகைப்படத்தையும் போட்டு வைக்கலாம்.  இப்போது DropBoxஐ உங்களின் laptopஇலும் நிறுவுங்கள். உங்களின் அனைத்து DropBox install செய்யப்பட்ட கனினிகளிலும் உங்களின் ஃபைல், புகைப்படங்கள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு பின்வரும் வீடியோவைக் காணவும்.

Leia mais...

மனித உடம்பினை நீங்களே அறுத்துப் பாருங்கள் Google ன் உதவியுடன்



google body browser
See the human organs and the bone structure of human body using google labs. டாக்டர் மட்டும் தான் மனித உடம்பினை அறுத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. நீங்களும் அறுத்துப் பர்க்காலாம். இதற்கு சுடுகாட்டிற்கோ இல்லை பிணவரைக்கோ (mortuary) செல்ல வேண்டியதில்லை. Google Labs இந்த வசதியை உங்களுக்கு இணையத்திலேயே இலவசமாக தருகிறது. உடம்பின் அமைப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து முப்பரிமான வடிவில் கொடுத்துள்ளது. இதை ஒவ்வொரு பகுதியாக நாம் இருமுறை Click செய்து தேர்வு செய்வதன் மூலம் தனியாகப் பார்க்கலாம். இதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது வீடியோவுடன் கொடுக்கப் பட்டுள்ளது.

Leia mais...

இந்திய மொழிகளை கணிணி மொழியாக உருவாக்கும் அமைப்பு


ildc
எத்தனையோ இந்திய மொழிகள் உள்ளன. ஆனால் அவை ஒரு சில மட்டுமே கணினியில் உபயோகப்படுத்தக் கூடியதாக உள்ளது. இன்றைக்கு உங்களுக்கு ஒரு புதிய தகவல். இது இந்திய மொழிகளை கணிணி எழுத்துக்களாக உருவாக்கும் அமைப்பு பற்றியது. ILDC – Indian Language Data Centre. இந்த அமைப்பானது இந்திய மொழிகளை தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்களை உருவாக்கி வருகிறது. இது இலவசமானது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு NHM writer போன்ற மென்பொருள்கள் தமிழில் தட்டச்சு செய்ய உதவுகின்றன.
மேலும் வரும் ஜுன் 24 ம் தேதி தமிழ் எழுத்துக்கள் மற்றும் மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வழிமுறையை கொடுக்கவுள்ளது // Tamil Software Tools and Fonts CD 2010 are available for download from 24th June,2010.//
மேலும் தெரிந்து கொள்ள http://www.ildc.in/ இந்த இணையத்தை பார்க்கவும்.
உங்களுக்கு இது போன்று ஏதேனும் தகவல் தெரியுமாயின் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவும்.

Leia mais...

மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்

மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்

ttttt
திருடர்களை கண்டுபிடிக்க அவர்களின் அடையாளத்தை வைத்து உருவத்தை வரைவார்கள் அதைப் போன்று தான் இதுவும். தலை, கண் , முடி, மூக்கு, வாய், மீசை….என அணைத்து உறுப்புகளும் நிறைய வடிவங்களில் கொடுக்கப் பட்டுள்ளது, அதை எடுத்து உங்கள் கற்பனைக்கு தகுந்தாற்போல் மனித முகங்களை உருவாக்குங்கள் B-) .
நீங்கள் உருவாக்கிய முகங்களை சேமிக்க இரண்டு வழி உண்டு.

ஒன்று Ctrl + PrntScr அல்லது வெறும் Prntscr  (print screen) என்ற பட்டனை அமுக்குவதன் மூலம். முழு கணிணி திரையையும் நிழற்படமாக (image) ஆக எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அதை Microsoft paint, word, powerpoint. என்று எதில் வேணும் என்றாலும் CTRL + V  என்ற இரு பட்டன்களை அமுக்குவதன் மூலம் நீங்கள் உருவாக்கிய முகங்களை சேமித்துக் கொள்ளலாம்.

இன்னொரு வழி http://flashface.ctapt.de/ இந்த இணையதலத்திலேயே Print face என்றொரு வசதி உள்ளது. இதன் மூலம் உங்களிடம் பிரிண்டர் (Printer) இருந்தால் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் Loadface என்றொரு வசதி உள்ளது, இதை பயன்படுத்தி வேறு ஒருவர் செய்த முகங்களையும் காணலாம்.
http://flashface.ctapt.de/

Leia mais...

Tuesday, June 7, 2011

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…

altவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

Titel

Seiteninhalt

Leia mais...

வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

altமுழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம்.
அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.

Free Video Cutter.
இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.alt



இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.

மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும்.

http://www.box.net/shared/9g13mxjeux

Leia mais...

உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்

altஇதற்கு தேவையானது இரண்டு சாப்ட்வேர்கள் (software)
1.VidCoder
Download: http://vidcoder.codeplex.com/
2.My MP4Box (இந்த சாப்டுவேருக்கு .Net framework 3.5 தேவை )
Download:  http://my-mp4box-gui.zymichost.com/download.html
.Net framework 3.5
Download: http://www.softpedia.com/get/Others/Signatures-Updates/Microsoft-NET-Framework-Pre-Release.shtml
Step1:  வீடியோ கோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் (select the file)alt





VidCoder  சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவவும்

பிறகு உங்களுடைய DVD யை உங்கள் கணினியில் செலுத்தவும் .
VidCoder சாப்ட்வேர் மூலம் VIDEO_TS என்ற போல்டரை (folder) உங்கள் DVD யில் இருந்து தேர்வு செய்யவும்.
Step2: DVD யில் இருந்து MP4 ஆக மாற்றுதல்
VidCoder ல்,  Ctrl + T அழுத்தவும் இல்லையேல்
File –> Enque Multiple Titles என்பதை menu வில் தேர்வு செய்யவும்
பிறகு DVD யில் அனைத்து titles களையும் தேர்வு செய்து queue சேர்க்கவும் .
உங்களுக்கு தானாகவே encoding ஐ தேர்வு செத்து இருக்கவும் அதுவே conversion செய்ய சிறந்ததாக இருக்கும்.
இல்லையேல் உங்களுக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம்
பிறகு Encode என்ற button ஐ அழுத்தவும்.
உங்களின் கணினியின் திறனை பொருத்தும் வீடியோவின் நீளத்தைப் பொருத்தும்
நேரம் எடுத்துக் கொள்ளும்.
Step3: இணையத்திற்கு (ex: youtube) ஏற்றவாறு மாற்றுதல் :alt


MyMP4Box software மூலம் vidcoder software Mp4 ஆகா மாற்றிய கோப்புகளை தேர்வு செய்து நமக்கு தகுந்தாற்போல் எவ்வளவு நேரம் வேண்டுமோ அதை கட்டத்தினுள் கொடுத்தால். இந்த மென்பொருள் தானாகவே விடியோவை பகுதிகளாக பிரித்து கொடுத்துவிடும் .
இதன் பயன்பாடு என்னவெனில் நீங்கள் வீடியோவை youtube ல் ஏற்றும் பொழுது பதினைந்து (15 mins) நிமிடத்திற்கு மேல் இருக்கும் வீடியோவை எடுத்துக் கொள்ளாது . எனவே நீங்கள் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியும்.TechTamil.com

Leia mais...

போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்


altஇயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும்,
அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.
ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டிalt



இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும் மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது, நண்பர்களின் குருப் போட்டோவினை இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.

Leia mais...

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?

altஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் alt


முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
 
பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்


ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil

பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது

Leia mais...

YOUTUBE - வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்

altYOU TUBE தளத்தில் இருக்கும் வீடியோவை நேரிடையாக தரவிறக்கம் செய்ய அந்த தளத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. YOU TUBE வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளை நாட வேண்டும். இவ்வாறு நாம் YOU TUBE தளத்தில் இருந்து பதிவிறக்கும் வீடியோக்கள் அனைத்தும் .flv பைல் பார்மெட்டில் இருக்கும். இந்த வீடியோ பைலானது .flv பைல் பார்மெட்டை சப்போர்ட் செய்யக்கூடிய பிளேயர்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற வீடியோ பிளேயர்களில் .flv வீடியோவை பார்க்க முடியாது. இந்த .flv வீடியோ பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்து மற்ற வீடியோ பைல் பார்மெட்டாக மாற்ற பல இலவச வீடியோ கன்வெர்ட்டர்கள் இணையத்தில் கிடைக்கிறன. அவை எதுவும் சிறப்பானதாக இல்லை.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

alt
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயானது மென்பொருளை தரவிறக்கம் செய்து போது சேர்ந்தே தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு கீயை பயன்படுத்தி Register செய்து கொள்ளவும்.
 
alt
Convert என்னும் பொத்தானை அழுத்தி .flv வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பார்மெட்டை தேர்வு செய்து கொள்ளவும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோவை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல், YOU TUBE வீடியோவையும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

 
alt

Leia mais...

PDF to Word கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்

altமைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம்.
அந்த நேரத்தில் குறிப்பிட்ட வேர்ட் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து வேர்ட் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
alt
சுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். YCUKF-HV9HY-DGY2X-WL735 இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2011 ஏப்ரல் 25 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
alt
பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
alt
இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் வேர்ட் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $29.95 ஆகும்.
 

Leia mais...

Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

altஅதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

alt


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்

Leia mais...

பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite

altபவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம். கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும் கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
alt
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும்.
alt
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும்.


கன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents > authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools > Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
alt
இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.
alt
இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்.
 

Leia mais...

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள் ( All file open

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.
PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும்.  மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.

Supported File Types

Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb)


Web Pages (.htm, .html)


Photoshop Documents (.psd)


Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff)


XML Files (.resx, .xml)


PowerPoint® Presentations (.ppt, .pptx)


Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv)


Microsoft® Word Documents (.doc, .docx)


7z Archives (.7z)


SRT Subtitles (.srt)


RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)


Icons (.ico)


Open XML Paper (.xps)


Torrent (.torrent)


Flash Animation (.swf)


Archives (.jar, .zip)


Rich Text Format (.rtf)


Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)


Apple Pages (.pages)


Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)


Comma-Delimited (.csv)


Outlook Messages (.msg)


PDF Documents (.pdf)


vCard Files (.vcf)

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo