Wednesday, August 22, 2012

புதிர் பூங்கா

1. பாபுவிற்கு இன்று என்ன கிழமை என்ற சந்தேகம் ஏற்பட்டது. :lol:
அப்போது அவரது நண்பர்கள் :confused_smile: உடையாரும் சுகந்தும் அங்கே வந்தார்கள்.

இங்கே உடையார்& சுகந் தைப்பற்றிக் கூறியாகவேண்டும்..

உடையார், திங்கள் , செவ்வாய், புதன் கிழமைகளில் எப்போதும் பொய்யே பேசுவார் :o .

சுகந், வியாழன்],வெள்ளி, சனிக் கிழமைகளின் பொய்தான் பேசுவார் :( .

பாபு முதலில் உடையாரிடம் இன்று என்ன கிழமை என்று கேட்டார்.
அதற்கு உடையார், "நேற்று எனது பொய்பேசும் தினங்களில் ஒன்று" என்றார்.

அடுத்தாற்போல் சுகந்திடம், இன்று என்ன கிழமை என்று கேட்டார்.
அவரும் "நேற்று எனது பொய் பேசும் தினங்களில் ஒன்று "என்றார்.

இப்போது பாபுக்கு இன்று என்ன கிழமை என்று புரிந்துவிட்டது :spam .
உங்களுக்குப் புரிந்தால் கூறுங்களேன்.!!!



2.உங்களுக்கெல்லாம் ஒரு சவால்...

"ஏனென்றால்" என்ற சொல்லை வைத்துக்கொண்டு ஓர் வசனம் அமைக்க வேண்டும் . ஆனால் "ஏனென்றால்" என்ற சொல் மூன்று இடத்தில் வரவும் வேண்டும். .. 
அறிஞர் அண்ணாவிடம் இப்படித்தான் கேட்கப்பட்டது... Because என்ற வார்த்தையினை தொடர்ச்சியாக மூன்று முறைகள் பயன்படுத்தி ஒரு வாக்கியம் அமைக்கமுடியுமா? என்று... உடனே பதிலளித்தாராம்....

No sentence will begin with because; because, because is a conjunction.

அதே போன்றதுதான் இதுவும்...


3.9, 9, 9, 9, 5, 5, 5, 5, 3, 3, 3, 3, 1, 1, 1, 1.

இந்த 16 எண்களில் ஏதாவது 6 எண்களின் கூடுதல் = 21

அந்த 6 எண்கள் எவை?..

ஒரு விதியைக் கவனிக்கவேண்டும்; 
  • ஒற்றை எண்களை இரட்டை எண்கள் வரும் ( இக்கணக்கில் ஆறு தடவை - 6 ஒரு இரட்டை எண் ) தடவைக்கு கூட்டினால் விடை இரட்டை எண்ணாக அமையும். எ.கா: 5+5+3+3+9+3 = 28 ; 1+1+1+3+3+9 = 18
  • ஒற்றை எண்களை ஒற்றை எண்கள் வரும் தடவைக்கு கூட்டினால் விடை ஒற்றை எண்ணாக அமையும். எ.கா: 1+3+3+5+5 = 17
  • இந்த விதிக்கு விதிவிலக்குகளும் உண்டு; (3+3+3+3+3 )
இதன்படி 9, 9, 9, 9, 5, 5, 5, 5, 3, 3, 3, 3, 1, 1, 1, 1. ஆகியவற்றின் ஆறு எண்களின் கூட்டல் மூலம் ஒற்றை எண் விடையாக ஒருபோதும் வராது.

ஆனால் வேறு முறைப்படி செய்யலாம்,
கேள்வியில் கூட்டல் என்று கேட்கவில்லை, எனவே கூடுதல் வேறு கூட்டல் வேறு என்று எண்ணினால்:
1 + 
5.5 + 5.5 + 9 = 21 (உபயோகிக்கப்பட்ட எண்கள்: 1,5,5,5,5,9)
(1*3)+3+3+3+9 = 21
1+1+3+5+9+(3-1) = 21
 போன்றனவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

ஒருபோதும் ஆறு ஒற்றை எண்கள் சேர்ந்து 21 எனும் ஒற்றை எண் வரவே வராது!!!!

4. ஒரே ஒரு சொல்
அதற்கு இத்தனை குறிப்புக்கள்.
வாருங்கள் கண்டுபிடிப்போம் அந்தச் சொல்லை.

1)முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும் 

2)முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம்

3)பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்

4)பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம்

5)சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி

6) தொடர் இரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்று 

18 446 744 073 739 551 615
5.சதுரங்கப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற வீரனொருவனுக்கு, மன்னன் பரிசளிக்க விரும்பினான். அகங்காரத்துடன் வீரனின் விருப்பத்திற்கேற்ப எதைக்கேட்டாலும் பரிசளிப்பதாகக் கூறினான். வீரனோ அதிபுத்திசாலி. "எனக்குப் பொன்னோ மணியோ வேண்டாம். சதுரங்கப் பலகையில் உள்ள முதற்கட்டத்திற்கு 1 தானியமும், இரண்டாவது கட்டத்திற்கு 2 தானியங்களும், மூன்றாவது கட்டத்திற்கு 4 தானியங்களும் என்ற கணக்கில், 64 கட்டங்களுக்கும் அதற்கு முந்தைய கட்டத்தைப் போல் இரண்டு மடங்கு தானியங்கள் மட்டும் தந்தால் போதும்" எனக்கேட்டான்.

மன்னனும், "இவ்வளவுதானா? யாரங்கே தானியக் களஞ்சிய அதிகாரியைக் கூப்பிட்டு இவ்வீரன் கேட்கும் அளவிற்கு தானியங்கள் கொடுக்கச்சொல். இறுதியில் எனது அன்பளிப்பாக இருநூறு மூட்டைகள் அதிகமாகவும் கொடுக்கச் சொல்" என்றான் செருக்குடன்.

பல மணி நேரங்கள் கழிந்தும் பரிசு வந்து சேராததைக் கண்டு, தானே தானியக்களஞ்சியத்திற்குப் புறப்பட்டுச்சென்ற மன்னன் அதிர்ச்சியடைந்தான். பல வீரர்கள் தானியங்களை எண்ணி எண்ணி களைப்படைந்திருப்பதைக் காண்கிறான்.

அந்தத் தொகைதான் எத்தனை இருக்கும்? உங்களில் யாரேனும் கணக்கிட்டுச் சொல்ல இயலுமா?

1 + 2 + 22 + 23 +.................................+263 இதுதான் சரி 
 என வருகின்றது.


6. இந்த இடத்தில் ஆறுகள் இருக்கும். ஆனால், தண்ணீர் இருக்காது. நகரங்கள் இருக்கும். ஆனால், கட்டடங்கள் இருக்காது. காடுகள் இருக்கும். ஆனால், மரங்கள் இருக்காது. அங்கு மலைகள் இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தாண்டலாம். இவை எல்லாமே நமது பூமியில் உண்மையில் உள்ளவைதான். அப்படி என்ன இடம் அது? 

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo