Sunday, August 28, 2011

கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலை உருவாக்க - Doro PDF


பிடிஎப் பைல்கள்ளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும், சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகிறன. இவ்வாறு உருவாக்கப்படும் பிடிஎப் பைல்களையே உடைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இதனை தடுக்க என்னவழி என்றால் இவ்வாறு நாம் உருவாக்கும் பிடிஎப் பைல்களுக்கு என தனியாக பூட்டு உருவாக்கினால் மட்டுமே தடுக்க முடியும். அது எதுமாதிரியாக இருந்தால் சரிவரும் என்று யோசித்தேன் அதற்கு சரியான வழி கடவுச்சொல் இடுவது மட்டுமே சரியான வழி ஆகும். நீங்கள் கூறலாம் கடவுச்சொல்லையும் உடைக்க வழிதான் இருக்கிறது என்று, அது உண்மைதான் ஆனால் அது 99% முடியாத விஷயம் ஆகும். நாம் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையற்றதாக இருந்தால் மட்டுமே, கடவுச்சொற்களை எளிதில் உடைக்க முடியும். பிடிஎப் பைல்களை உருவாக்க இலவச மென்பொருள்கள் பல உள்ளன. கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைல்களை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு  ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றுதான் Doro PDF மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் நீங்கள் கடவுச்சொல்லுடன் பிடிஎப் கோப்பாக உருவாக்க நினைக்கும் கோப்பினை திறக்கவும். பின் File > Print என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செயதவுடன் தோன்றும் விண்டோவில் Printer என்னும் ஆப்ஷனில் Doro PDF Writer என்பதை தேர்வு செய்து பின் OK என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encryption என்னும் டேப்பினை தேர்வு செய்து குறிப்பிட்ட கடவுச்சொல்லை உள்ளிடவும். கடவுச்சொல்லானது எண் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருப்பின் சிறந்தது. கூடவே பெரிய எழுத்துக்கள் இருப்பது சிறந்தது. கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது பிடிஎப் கோப்பானது கடவுச்சொல்லுடன் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த Doro PDF மூலம் அனைத்து விதமான கோப்புகளையும் கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?




நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.






C     - Common
O     - Oriented
M    - Machine
P     - Particularly
U     - Used for
T     - Trade
E     - Education and

R     - Research

COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?







































































































































































































































































































































































































































































































முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Friday, August 26, 2011

குழந்தை பிறப்பில் சுவாரஸ்யமான சம்பவங்கள்


வெவ்வேறு வண்ண இரட்டையர்கள்
இது சாதாரணமாக நடப்பதில்லை,இரண்டு தடவை பிறந்த இரட்டையர்களும் வெவ்வேறு நிறத்தில் பிறந்தனர்
உலகின் மிக அதிக வயதில் கர்ப்பம் தரித்தவர்.
இவர் தனது 70 வது வயதில் குழந்தையை பெற்றெடுத்தார்.
மிக இளம் வயதில் குழந்தை பெற்றவர் 
இவர் தனது 5 வயதில் முதல் குழதையை பெற்றெடுத்தார் ,பின்னர் 33 வயதில் தனது கடைசி பிள்ளையை பெற்றெடுத்தார்
குறை மாதத்தில் பிறந்த மிகவும் குறைந்த எடையுள்ள குழந்தை 
4.5 குறை மாதத்தில்,482 g மட்டும் எடையுடன் பிறந்து உயிர் பிழைத்த குழந்தை
ஒரே மாதிரியான நான்கு குழந்தைகள் 
ஒரே மாதிரியாக பிறந்த நான்கு குழந்தைகள்,இவர்களை வைத்து பெற்றோர் நிறைய பணம் சம்பாதித்தனர்,அதை அறிந்த இவர்கள் பின்பு பிறந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தனர்.
விசித்திரமானது….
Charles Vance மில்ளீர் என்பவர் அதிகமாக பணம் சம்பாதித்தார், aanal அதை அனுபவிப்பதற்கு அவர்க்கு குழந்தைகள் இல்லை..அதனால் தன் வக்கீல்களிடம் 10 வருடத்துக்குள் யார் அதிகமாக குழந்தை பெற்று கொள்ளிரார்களோ அவர்களுக்கு தனது பணத்தை கொடுத்து விடும் படி கூறினார்…..யாருக்கு போச்சோ …….

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….


சாவின் விழும்பில்…

இந்த கொடூரமான படத்தில் சூடான் பஞ்சத்தின் போது மோசமான நிலைமைகள் விளக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் இந்த படத்திற்காக பரிசு வென்றார். ஆனால் அவர் படத்தை எடுத்த மூன்று மதத்தில் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
ஓமய்ற சான்செஸ் துயரங்கள்

Omayra சான்செஸ் இறப்பதற்கு முன் பிராங்க் ஃபூரியர் இந்த 13வயதான பெண்ணின் கடைசி தருணங்களை படமாக்கினார்.கொலம்பியாவில் ,நிவேடா டெல்ரூயிஸ் எரிமலை வெடிப்பு சிக்கி பலர் இறந்தனர்.இவர் வீட்டில் சேற்றில் சிக்கி இவர் இறந்தார்.இரண்டு நாட்கள் மூன்று இரவுகள் குப்பைகள் கீழ் புதைக்கபட்டு இருந்தார் . மீட்ப்புக்குழுவினரின் உபகரணங்கள் வர தாமதம் ஏற்ட்பட்டதால் இந்த மரணம் ஏற்ட்பட்டது,இறப்பதற்கு முன் பதிரிகையலர்களிடம் பேசிவிட்டு,புன்னகையுடன் இறந்து போனார்.
எரியும் துறவி 

Thích குவாங் Đức வியட்நாம் புத்த மதத்தினர் மீதான அடக்குமுறை எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஜூன் 1963 11 அன்று ஒரு பிஸியாகசாய்கான் சாலை குறுக்குவெட்டில் தன்னைத்தானே எரித்துக்கொண்டார்.
போபால் விஷ வாயு சம்பவம் 1984
போபால் விஷ வாயு சம்பவம் , உலகின் மோசமான தொழிற்சாலை பேரழிவு, ஆலையில் இருந்து வெளிப்பட்ட வாயு மற்றும் பிற நச்சு காற்று 500,000 பேர் வரை கொன்றது.
1980 – உகாண்டா பட்டினி
போர் பயங்கரம்-1968

ஒரு கைதியை ,தென் வியட்நாமியபோலீஸ் தலைமை அதிகாரி சுடும் கட்சி
சுனாமிக்கு பிறகு 
 264 614share304

சாக்லெட் உண்டு தலையணையில் படுக்கும் வினோத மீன்!(வீடியோ & படம்

இலங்கையில் காலி மாவட்டத்தில் உள்ள கிராமத்து வீடு ஒன்றில் செல்லப் பிராணியாக அதிசய மீன் ஒன்று வளர்க்கப்படுகின்றது. இம்மீனால் இருபது நிமிடங்கள் வரை நீருக்கு வெளியில் தரையில் தொடர்ச்சியாக நடமாட முடியும். இம்மீனுக்கு மிகவும் பிடித்தமான சாப்பாடு சொக்கலேட். வீட்டில் வளர்க்கப்படுகின்ற மற்றொரு செல்லப் பிராணியான பூனைக் குட்டி இம்மீனோடு நட்பு பாராட்டுகின்றது. இம்மீன் தரையில் நிற்கின்றபோது பூனைக் குட்டி துன்புறுத்துவது இல்லை. இம்மீன் மீது வீட்டில் உள்ள சிறுவர்கள் மிகவும் பிரியமாக நடக்கின்றார்கள். தலையணை மேல் கிடத்தி மடியில் வைத்து ஓராட்டுகின்றார்கள். இந்த மீனுக்கு பிடித்தமான உணவு சொக்லேட் என்ற போதிலும் இந்த மீன் சாப்பிடாத உணவே இல்லையாம். சோறு, மீன், மரக்கறி, பழங்கள் மற்றும் பலவித இனிப்புப் பண்டங்களையும் சாப்பிடுமாம்

மனித தலையுடன் அதிசய பாம்பு!(வெளிவரதா புதிய படங்கள்)


அண்மையில் மனிதத்தலையுடனான பாம்பு என்று செய்தி பல்வேறு இணையத்தளங்களிலும் காணொளியுடன் வெளியிடப்பட்டிரந்தது. இது மலேசியாவில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த பலரும் இது ஒரு கிராபிக் வேலை என விமர்சித்தனர்.

இருந்தாலும் இது உண்மைதான என்பதை இன்றும் கூட உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. எனினும் இந்த மனிததலையுடனும் இரண்டு கைகளுடனும் காணப்படும் இந்த விசித்திரமான பாம்பு ஒரு மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவே அறிய முடிகிறது. அத தொடர்பான புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் குறித்த பாம்பை பார்வையிடுவதை காணலாம். மற்றும் இது மலேசியாவில் என வெளிவந்த செய்திகள் பெய்யானவையே என தோன்றுகிறது. காரணம் இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படங்களில் சீனா அல்லது யப்பான் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதோடு படங்களில் இருப்பவர்களும் அந்நாட்டைச்சேர்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்


Wednesday, August 24, 2011

Animated கண் கட்டு வித்தை-வீடியோ


Saturday, July 30, 2011

60 வயதுக் குழந்தையைப் பிரசவித்த 92 வயதுப் பாட்டி

92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கின்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென்பகுதியைச் சேர்ந்தவர். குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மையில் ஒரு கல் குழந்தையைத்தான் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமந்து வந்திருக்கின்றார்.




வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் எடுக்க வெண்டும் என்று வைத்தியர்கள் அந்நாட்களில் சொல்லி இருக்கின்றனர். ஆனால் வறுமை காரணமாக இவர் பேசாமல் இருந்து விட்டார்.
இறந்த சிசு வயிற்றுக்குள் கல்லைப் போல் ஆகி விட்டது. இது மிகவும் அரிதாக ஏற்படக் கூடிய நோய்.
முட்டை கருப்பைக்குள் வெளியில் தங்கி விடுகின்ற அதே சமயம் மகப் பேறு தோல்வி அடைகின்றபோது இந்நோய் ஏற்பட்டு விடுகின்றது.

Tuesday, July 26, 2011

உங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க



 நாம் எழுதும் ஏதாவது ஒரு பதிவு ஏதோ பத்திரிகையிலோ அல்லது புத்தகத்திலோ வந்தால் எவ்வளவு சந்தோசப்படுவோம். நம்முடையை அனைத்து பதிவுகளையும் அப்படியே ஒன்றாக புத்தகமாக வெளியிட்டால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நம் பதிவுகள் அனைத்தையும் எப்படி நாம் புத்தகமாக உருவாக்குவது என்றே இங்கு காணபோகிறோம்.
இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.பின்பு Dassboard- Settings - Site feed - Full- Save Settings -என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.


இந்த சேவையை நமக்கு ஒரு வலைத்தளம் செய்கிறது. இந்த தளத்தில் நம் புத்தகத்தை உருவாக்கும் வரை இலவசமே. ஆனால் அதை டவுன் லோட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் க்ளிக் BLOG2PRINT செய்யவும்.

இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் இதில் உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுத்து Print My Blog என்ற அருகில் இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுடைய பிளாக் ஸ்கேன் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.
  • Include Posts: இந்த இடத்தில் உங்களுக்கு எத்தனை பதிவுகள் புத்தகமாகக வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்ளவவும். (ALL POSTS செலக்ட் செய்ய வேண்டாம் சில சமயம் சரியாக இயங்கவில்லை.)
  • Labels: இதில் உங்கள் பதிவுகளை நீங்கள் உங்கள் labels வகையில் வகை படுத்தலாம்.
  • Comments: நம் பதிவை படித்துவிட்டு வாசகர்கள் கூறும் கமென்ட் ஆக்டிவேட் செய்ய.
  • Page Template: இந்த இடத்தில் நீங்கள் Compact செலக்ட் செய்வதே சிறந்தது.
  • Order of Posts: உங்களின் பதிவுகள் வரிசை படுத்த.
அடுத்து COVERS என்ற பகுதி இருக்கும். இதில் உங்கள் புத்தகத்தின் அட்டை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

அடுத்து உள்ள DEDICATION என்ற இடத்தில் உங்கள் புத்தகத்தின் ஏதேனும் முன்னுரையை கொடுத்து கீழே உள்ள CREATE MY BOOK என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்கள் புத்தகம் தயாராகி கொண்டிருக்கிறது. சிறிது நேரம் காத்திருக்கவும். முடிவில் உங்கள் புத்தகம் தயாராகி வரும்.
தேவைபட்டால் நீங்கள் அங்கே கொடுக்கபட்டிரும் விலை பட்டியலில் சொடுக்கி உங்கள் புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts
டே தலையே சுத்துது, யார் கிட்ட கத்துகிட்ட கொஞ்சம் அட்ரஸ் கொடு நம்ம தமிழ் நடிகர்களுக்கு யூஸ் ஆகும்.

நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய



இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.
நமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:
  • இதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.

  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.
  •  உங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும். 
  • ஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும். 
FRIENDS:

  • இந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.

  • நண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது. 

இந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை.

ஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய



கணினி இல்லாமல் எதுவும் இல்லை என்று உள்ள இந்த காலக்கட்டத்தில் தினம் தினம் புது புது வைரஸ்கள் உருவாகி நம் கணினியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த வைரஸ்களை தடுக்க எவ்வளவு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரசும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்ததாக உள்ளது. ஆகையால் நம் பைலை எப்படி ஒரே நேரத்தில் 15+ ஆன்ட்டிவைரசில் ஸ்கேன் செய்வது என்று காணலாம்.
ஆனால் நம் கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட  ஆன்டிவைரஸ் நிறுவ சில நிறுவனங்கள் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நாம் ஒரே ஒரு ஆன்டிவைரஸ் மட்டுமே நம் கணினியில் நிறுவ முடிகிறது. ஆகையால் ஒரு ஆன்டிவைரசில் மட்டுமே நம் பைல்களை ஸ்கேன் செய்து வந்தோம்.
  • குறிப்பாக நமக்கு இமெயில் வரும் பைல்கள் நம்பக தன்மை வாய்ந்ததா என்று இந்த முறையில் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த குறையை போக்க நமக்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Choose file என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்ய விரும்பும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து அதற்கு கீழே உள்ள Submit file என்பதை கிளிக் செய்யுங்கள்.உதவிக்கு கீழே உள்ள பதத்தை பார்த்து கொள்ளவும்.
  • அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த பைல் வைரஸ் ஸ்கேன் ஆகி ஒவ்வொரு ஆன்டி வைரசிற்கு நேராக அதான் முடிவுகள் வரும்.

மேலே படத்தில் உள்ளதை போல அனைத்து ஆன்டிவைரசிலும் Found nothing என்று முடிவு வந்தால் உங்கள் பைல் 100% பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் இந்த பைலை தைரியமாக உபயோக படுத்தி கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் கிளிக் http://virusscan.jotti.org/enசெய்யவும்

கூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க



ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுவது என்றால் கூட சென்னையில் எந்தெந்த கடையில் ஐஸ்க்ரீம் விற்கிறார்கள் என அறிந்து சாப்பிடும் காலம் இது. இதற்காக நமக்கு உதவி செய்வது தான் இந்த google places. நம்மில் நிறைய பேர் சொந்தமாக தொழில் செய்கின்றனர். இதில் சிறிய தொழில் முதல் பெரிய நிறுவங்களை கூட நடத்து கின்றனர்.அப்படி போன்றவர்களுக்கான பயனுள்ள பதிவு  இது.
கூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை வெளியிடுவதன் மூலம் உங்களின் நிறுவனத்தின் வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். இது ஒரு இலவச சேவை ஆகும்.   
  • முதலில் தாங்கள் இந்த கூகுளின் தளத்திற்கு செல்லுங்கள் Google Places இந்த லிங்கில் செல்லுங்கள்.
  • உங்களின் ஜிமெயில் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளேனுளைந்து கொள்ளுங்கள்.
  • add a new business என்ற இடத்தில் க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். 
  • அதில்  உங்களுடைய நாட்டையும் மற்றும் உங்களின் போன் எண்ணையும் கொடுத்து கீழே உள்ள FIND BUSINESS INFORMATION என்பதை க்ளிக் செய்யவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதலில் வருவது BASIC INFORMATION என்ற பகுதியாகும்.
  • இதில் ஸ்டார் குறி போட்டுள்ள விவரங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
  • மற்றதை உங்களுக்கு தேவையென்றால் நிரப்பி கொள்ளலாம்.
  • இதில் PHOTOS என்ற பகுதியில் உங்களின் நிறுவனத்தின் படத்தினை கூட சேர்த்து கொள்ளலாம்.
  • இதே முறையில் நீங்கள் ஏதேனும் வீடியோவினை கூட சேர்த்து கொள்ளலாம்.
  • இதில் நீங்கள் தகவலை கொடுக்க கொடுக்க வலது பக்கத்தில் அந்த விவரங்கள் வருவதை காண்பீர்கள்.
  • இப்படி உங்களுக்கு தேவையாங்க தகவல்களை கொடுத்த பின் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். இது முக்கியமான பகுதி உங்களுக்கு PIN நம்பர் கூகுளில் இருந்து கொடுப்பார்கள். அதை பெற்று கொள்ளும் வழியை தேர்வு செய்து (SMS, PHONE CALL) கீழே உள்ள FINISH என்பதை க்ளிக் செய்யவும்.
  • நீங்கள் PHONE தெருவு செய்து இருந்தால் அடுத்த வினாடியே கூகுளில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதில் உங்கள் அக்கௌன்ட் PIN நம்பர் கொடுக்கப்படும்.
  • அதை பெற்று கொண்டு உங்கள் நிறுவனத்தை இனி நீங்கள் கூகுள் வரைபடத்தில் சேர்த்து விட்டீர்கள்.

இந்திய ரூபாய் குறியீட்டை டைப் செய்வது எப்படி?


நமது இந்திய அரசாங்கம் சமீபத்தில் இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டை
’`’ அறிமுகப்படுத்தியது, ஆனால் அதனை நாம் கணினிகளில் உபயோகிப்பதற்கான வழிமுறைகள் மிகவும் குறைவு, இப்பொழுது நாம் அதனை எவ்வாறு கோப்புகளிலும் வலைத்தளங்களிலும் டைப் செய்வது என்று காண்போம்.

இதனை செய்வதற்கு உங்கள் கோப்புகளில் ஒரு முறையையும் வலைத்தளங்களில் வேறு வழியையும் பின்பற்ற வேண்டும்.

வழி-1: ஃபொராடியன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு புது எழுத்துருவினைக் கொண்டு நாம் நமது டாக்குமெண்டுகளில் இந்த குறியீட்டினை உபயோகிக்கலாம், இந்த எழுத்திருவினை தரவிறக்க இங்கே செல்லவும் Download Rupee Foradian.

இதனை தரவிறக்கி நிறுவிய பிறகு(Installation) உங்கள் word processing apllication(note pad, ms word etc.)ஐ திறந்துகொண்டு அதில் Rupee foradian எழுத்துருவை செலக்ட் செய்து கொள்ளவும்.

பின் உங்கள் விசைப்பலகையில் இந்த பட்டனைத் தட்டவும் ’ ~ ’.இப்பொழுது உங்கள் கோப்பில் ரூபாய்க்கான குறியீடு வந்திருக்கும்.
(NOTE:நீங்கள் ஷிப்ட் ஆல்ட் விசைகள் எதையும் அழுத்த தேவையில்லை)

நீங்கள் இதையே காப்பி செய்து வலைத்தளங்களிலும் பயன்படுத்தலாம். இந்த குறியீட்டிற்கான ஜாவாஸ்கிரிப்ட் இருந்தாலும் அதனை இன்னும் சோதித்துப் பார்க்காததால் அதனை இன்னொரு பதிவில் எழுதுகிறேன். 

பிடித்திருந்தால் தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, மற்ற திரட்டிகளோட ஓட்டுப்பட்டைய இணைக்கிறதுல சிறிய தொழில்நுட்ப கோளாறு இருக்கு,Our Engineers are sincerly working on it. 
எனக்கு ஒரு சந்தேகம் நம்ம அரசாங்கம் அறிமுகப்படுத்துன இந்த குறியீடு உங்களுக்கு கையில எழுதுறதுக்கு இல்ல கணினில எழுதுறதுக்கு இலகுவா இருக்கா?

கணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத்து வைக்க

நாம் சில முக்கியமான பைல்களை நம் கணினியில் பாதுகாக்க பல முறைகளை கையாளுவோம் அந்த வகையில் இந்த முறையும் சிறந்த முறையே அதாவது ஏதேனும் ஒரு போட்டோவின் பின்புறத்தில் நம்முடைய முக்கியமான பைல்களை மறைத்து வைக்கலாம். சாதரணமாக அந்த பைலை ஓபன் செய்தால்  போட்டோ மட்டுமே தெரியும் அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் பைல்கள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள பைல்களை பார்க்க முடியும்.

  • இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் பைல்களை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் கொள்ளுங்கள்.
  • இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை டவுன்லோட் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.  
  • அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.  அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg பைலை தேர்வு செய்து இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே பைலை கூட தேர்வு செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.
  • அந்த OK பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் உங்களுடைய பைல்கள் மறைக்க பட்டது என செய்தி வரும் அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் பைலை சாதரணமாக ஓபன் செய்து பாருங்கள்.
  • வெறும் படம் மட்டுமே தெரியும்.  பின்னால் இருக்கும் நம் பைல்கள் யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் பைல்களும் தெரியும் அதை நாம் உபயோகித்து கொள்ளலாம்.
  • இது போல் நம் பைல்களை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராமல் நம் ரகசிய பைல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.


  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo