தமிழனின் மறதியை பயன்படுத்திக் கொண்டு வரலாற்றின் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவை பொறுத்தவரை சிந்துவெளி நாகரீகம் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு.அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.
குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சி என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்
49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள்.பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
ஆதாரங்கள் .............
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு,ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.
பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.
ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.
அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இன்னொரு விடையம்... உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே... இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது... அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.
கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்
குமரியில் கடல் கொண்ட இடம் 49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள். கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் மேற்கு எல்லை ஆஸ்திரேலியா. கிழக்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கு எல்லை அண்டார்டிகா.
ஒரு காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. நாளாவட்டத்தில் கடல் கொண்டு அவற்றை பிரித்திருக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக மனிதயியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களுக்கும் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடிகளுக்கும் பல ஒற்றுமைகளை கூறுகிறார்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.
எனவே ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும்இ உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்திருக்கிறது.
குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு அதன்கோடு ஆண்டுகோடு இடைகோடு மெக்கோடு நெட்டன்கோடு திருவிதாங்கோடு பரகோடு வெள்ளைக்கோடு கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்கா மடகாஸ்கர் மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும்இ ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.
1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘லெமூரியா கண்டம் ‘ இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகயாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.
தொல்காப்பியம்
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்
1. பழந்தமிழ் (Ancient Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil
2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil
3. தற்காலத் தமிழ் (Modern Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil
ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil
முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.
திராவிட மொழிக் குடும்பம்
மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.
தமிழ்மொழியின் பெரும்புகழ்
திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.
இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.
தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு
உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.
வரலாற்றுச் சான்றுகள்
வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.
தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்
மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.
ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்
ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.
சார்லஸ் டார்வின்
இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.
இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :
சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.
மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.
உலகில் ஆழமாக பதிந்த அபூர்வங்கள்.............
குமரிக் கண்ட ஆய்வில் பரிமாணங்கள்.
இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில்..........
வரலாறு:கி.மு 14 பில்லியன்பெரும் வெடியில் உலகம் தோன்றியது.கி.மு 6 - 4 பில்லியன்பூமியின் தோற்றம்.கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.கி.மு. 470000இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.கி.மு. 360000முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.கி.மு. 300000யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.கி.மு. 100000நியாண்டெர்தல் மனிதன்கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.கி.மு. 75000கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.கி.மு. 50000தமிழ்மொழியின் தோற்றம்.கி.மு. 50000 - 35000தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.கி.மு. 35000 - 20000ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.கி-மு. 20000 - 10000ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )கி-மு. 10527முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.கி.மு. 10527 - 6100பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.கி.மு. 10000கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.கி.மு. 6087கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.கி.மு 6000 - 3000கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.கி.மு. 5000உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.கி.மு. 4000சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.கி.மு - 4000கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.கி.மு - 3200சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.கி.மு - 3113அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.கி.மு - 3102சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.கி.மு - 3100 - 3000ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.கி.மு - 2600எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.கி.மு - 2387இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.கி.மு - 2000 - 1000காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.கி.மு - 1915திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.கி.மு. - 1900வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.கி.மு. 1500முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.கி.மு. - 1450உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.கி.மு. - 1316மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.கி. மு. 1250மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.கி. மு . 1200ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.கி. மு. 1000உலக மக்கள் தொகை 50 மில்லியன்.கி. மு. 1000-600வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.கி. மு. 950அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.கி. மு. 950வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.கி. மு. 925யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.கி. மு. 900இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.கி. மு. 850பின்இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.கி. மு. 776கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)கி. மு. 750பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.கி. மு. 700சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.கி. மு. 623- 543கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.கி. மு. 600லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.கி. மு. 600கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.கி. மு. 599 - 527மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.கி. மு. 560பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.கி. மு. 551-478கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.கி. மு. 500கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.கி. மு. 478இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.கி. மு. 450ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.கி. மு. 428 - 348சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.கி. மு. 400கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.கி. மு. 350 - 328உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)கி. மு. 328 - 270மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)கி. மு. 326அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.கி. மு. 305சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.கி. மு. 302சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.கி. மு. 300சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.கி. மு. 300கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.கி.மு. 273-232மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.கி.மு. 270-245சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.கி.மு. 251புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்கி.மு. 245-220சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.கி.மு. 221புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.கி.மு. 220 - 200கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.கி.மு. 220-180குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.கி.மு. 200முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.கி.மு. 200தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.கி.மு. 125-87ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.கி.மு. 87-62செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சிகி.மு. 62-42யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)கி.மு. 42-25பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.கி.மு. 31உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.கி.மு. 25-9இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.கி.மு. 9-1கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.கி.மு. 4ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.