நம் நாடு
அன்பிற்கு அடித்தளமும் நமது நாடு
ஆன்மீகப் பிறப்பிடமும் நமது நாடு
இன்பத்தின் இருப்பிடமும் நமது நாடு
ஈகைக்குணம் உள்ளவர்கள் இருக்கும் நாடு
உத்தமர்கள் உறைவிடமே நமது நாடு
ஊக்கத்தில் உயர்ந்தவர்கள் உள்ள நாடு
எத்தனையோ சோதனைகள் கடந்த நாடு
ஏராளம் இயற்கை வளம் கொண்ட நாடு
ஐயத்தை போக்கும் நல் அறிஞர் நாடு
ஒற்றுமையால் அன்னியனை எதிர்த்த நாடு
ஓடி ஒதுங்காத நாடு எதிரி கண்டு
ஒளவையென்ற பெண் அறிஞர் வாழ்ந்த நாடு
அஃது எந்த நாடென்றால் நம் பாரதநாடு.
Post a Comment