வித்யாசமான 3D கோணத்தில் புகைப்படங்கள்பார்க்க
07.02.2009.
வித்தியாசமான 3D கோணத்தில்
நமது புகைப்படங்களை பார்வையிட

நமது கம்யூட்டரில் உள்ள புகைப்படங்களை பார்க்க
இந்த 3D சாப்ட்வேர்(MY PICTURES 3D) உதவுகிறது.
போட்டோக்களை நாம் சாதாரணமாக பார்ப்பது
சமயத்தில் போர் அடித்துவிடும். ஆனால் இந்த
சாப்ட்வேரை இன்ஸ்டால் அதன் மூலம்
புகைப்படங்களை பார்த்தால் வித்தியாசமான
அனுபவத்தை உணர்வோம். ஒரு பெரிய அருங்காட்சி
யகம் உள்ளது. அதில் நீங்கள் பார்வையாளராக
செல்கின்றீர்கள். அங்கு உங்கள் புகைப்படங்கள்
சுவரினில் அழகாக காட்சியளிக்கின்றது.
உங்களுக்கு அந்த அனுபவம் எப்படி இருக்கும்.
நீங்கள்அந்த அனுபவத்தை இந்த
சாப்ட்வேர் நிறுவது மூலம் உணர்வீர்கள்.
இந்த சாப்ட்வேர் 2-in-1 ஆக பயன்படுகிறது.
இதில் 24 க்கும்மேற்பட்ட காலரிகள் உள்ளது.
அவைகளை நீங்கள் தனித்தனியே விருப்பப்
பட்டதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இங்குள்ள காலரியை நீங்கள் தேர்வு செய்து
உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து
விட்டால் உங்களுக்கு பிடித்த காலரியில்
உங்கள் புகைப்படங்களை கண்டுகளிக்கலாம்.
காலரியை நீங்கள் சுற்றிப்பார்க்கும் சமயம்
உங்கள் போட்டோக்கள் அங்கங்கே சுவற்றில்
தொங்குவது இந்த சாப்ட்வேரின் சிறப்பு.
நாம் தள்ளி நின்று பார்க்கும் போட்டோவை
நமது அருகில் நமது கம்யூட்டரின் முழு
ஸ்கிரினிலும் காட்டுவது இதன் மற்றும் ஒரு
சிறப்பு. நீங்கள் பார்வையிடும் புகைப்படத்தின்
உயரத்தை மாற்றலாம். நீங்கள் பார்க்கும்
புகைப்படத்தின் வேகத்தை மாற்றலாம்.
உங்கள் மவுஸ் செல்லும் திசையெல்லாம்
கம்யூட்டர் உங்களை அழைத்துச்செல்லும்.
நீங்கள் மவுஸ் நகர்த்தவில்லை யென்றாலும்
கம்யூட்டர் தானாகவே உங்களை அங்கு
அழைத்துச்செல்லும். இந்த சாப்ட்வேரை
நிறுவிய உடன் configure screen saver என்கிற
டயலாக் பாக்ஸ் திறக்கலாமா என கேட்கும்.
ஒகே என பதில் கொடுங்கள். பின்ன்ர்
செலக்ட் பிக்ஸர் அழுத்தி உங்கள் புகைப்படம்
உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.

உங்களை கம்யூட்டர் கீழ்கண்டபடி காலரிக்கு அழைத்து
செல்லும்.


உங்களுக்கு தேவையான காலரியை தேர்வுசெய்யுங்கள்.
Post a Comment