விண்டோசில் விரும்பிய எழுத்துக்களை கொண்டுவர
இதே விண்டோவில் நாம் விரும்பிய எழுத்துக்களை வேண்டிய நிறங்களை கொண்டுவந்தபின் வந்த விண்டோவினை பாருங்கள்:-
சரி..இந்த எழுத்துக்களை எப்படி நமது கம்யூட்டரில் கொண்டுவருவது...இதற்கு சாப்ட்வேர் எல்லாம் தேவையில்லைங்க..ஒரு சின்ன மாற்றம் செய்தால் போதும்.முன்பு சொன்னது மாதிரி டெக்ஸ்டாப்பின் காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்காவதாக உள்ள Appearance டேபை கிளிக் செய்து அதில் உள்ள Advanced கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Item என்கின்ற விண்டோவில் உங்கள் கணிணியில் உள்ள அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் தேவையானதை தேர்வு செய்து( நான் மெனு என்பதனை தேர்வு செய்துள்ளேன்)அதன் எழுத்துரு - வண்ணம் - அளவு -தேர்வு செய்து ஓ,கே.தரவும் . .
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ஐட்டத்தின் எழுத்துக்களும் வண்ணங்களும் அளவுகளும் மாறி உள்ளதை காணலாம்.மாற்றுவதற்கு முன் உள்ள படம் கீழே:-
மாற்றியபின் வந்த படம் கீழே:-
அதைப்போலவே டூல் டிப் என்றால் என்னவென்று தெரியுமா ?
நம்மில் பலபேருக்கு தெரியாது.ஆனால் நாம் தினமும் அதை பார்க்கின்றோம்.ஏதாவது போல்டர் - டிரைவ் அருகே நாம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் ஒரு சிறிய விண்டோ தோன்றும். அதில் அந்த போல்டரின் விவரம் வரும்.கீழே உள்ள படத்தினை பாருங்கள். எளிதாக புரியும்.
இதில் காலியிடம் - மொத்த இடம் ஆகிய தவல்கள் அடங்கிய விண்டோதான் டூல் டிப் ஆகும். இதையும் நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதுமட்டும் இல்லாமல் விண்டோ - ஸ்கோரல் பார் -என மொத்தம் 18 ஐட்டங்களின் எழுத்துக்களை - அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
Post a Comment