உங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம்.
செப்டம்பர் 7, 2010
நம் அனுமதி இல்லாமல் சிடி / டிவிடி டிரைவ் பயன்படுத்துவதை தடுக்கபள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து இடங்களிலும் சிடி/டிவிடி
டிரைவ் லாக் செய்து வைக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இன்றைய சிறப்பு பதிவு.
கணினியில் சிடி / டிவிடி டிரைவ் லாக் செய்வதற்கு பதிலாக சிலர்
டிரைவ் மாட்டாமலே இருக்கின்றனர். இந்தப்பிரச்சினைக்கு எளிதான
வழி ஒன்று உள்ளது. சிடி / டிவிடி டிரைவ் திறப்பதற்கு கடவுச்சொல்
கொடுத்து வைக்கலாம், லாக் செய்து வைக்கலாம் நமக்கு தேவைப்படும்
போது திறக்கலாம். இதற்கு உதவுவதற்காகவே ஒரு மென்பொருள்
உள்ளது. இங்கே சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்
Download
படம் 2
படம் 3
இன்ஸ்டால் செய்து முடித்தபின் பின் வரும் வழிமுறையை செய்து
மொழியை ஆங்கிலமாக மாற்றிக்கொள்ளவும்.மென்பொருளை
நிறுவியதும் வலது பக்கத்தின் டாஸ்க்பார்-ல் சிடி படம் இருப்பதை
சொடுக்கவும் வரும் திரை படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. அதில்
படம் 2 , படம் 3 ல் இருப்பது போன்று செய்யவும். இனி மொழி
ஆங்கிலத்தில் மாறிவிடும் இப்போது நாம் சிடி/டிவிடி டிரைவ் -ஐ
லாக் மற்றும் அன்லாக் (lock , Unlcok) எளிதாக் செய்து கொள்ளலம்
படம் 3-ல் மேல் இருக்கும் set Password என்பதை அழுத்தி
கடவுச்சொல் கொடுத்தும் வைத்துக்கொள்லலாம். கண்டிப்பாக
இந்தத்தகவல் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சிந்தனை நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் இறைவன் அதற்கு பதில் நமக்கு பல உதவிகள் செய்கிறான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ? 2.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ? 3.ஒமன் தலைநகரம் எது ? 4.பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ? 5.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ? 6.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ? 7.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ? 8.இத்தாலியின் தலை நகர் எது ? 9.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ? 10.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ? பதில்கள்: 1.பாரத ரத்னா, 2.ஜப்பான், 3.மஸ்கட்,4.ரோமானியர்கள், 5.15 ஆண்டுகள், 6.ஏப்ரல் 29 -ம் தேதி, 7.1752-ல், 8.ரோம்,9.ஜீ.வீ.மாவ்லங்கர்,10.ஆனை முடி.
இன்று செப்டம்பர் 7சிறப்பு தினம் : பிரேசில் விடுதலை நாள் விடுதலை நாள் : செப்டம்பர் 7 ,1822 தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதும் ஆகிய நாடாகும். உலகிலேயே ஐந்தாம் பெரிய நாடு பிரசில். பிரசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.கால்பந்து ஆட்டம் மிகவும் புகழ் பெற்ற பிரேசில் விடுதலை பெற்ற நாள்
Post a Comment