திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.
திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.
''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை
அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு
மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.
அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று
ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு
இருக்கிறது.
இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான்.
ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம்
சொல்லி தப்பிக்க முனைவார்கள்
இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)
"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."
இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.
இன்னும் ஒரு மந்திரம்:
"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."
இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக
பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து
காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )
உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.
Post a Comment