இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி
April 29, 2010
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில்சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட்
வேகத்தை அதிகரிக்கலாம்.
படம் 1
படம் 2
படம் 4
அனைவருக்காகவும் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் எளிய
முறையைப் பற்றி இனி பார்க்கலாம். முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்
எளிய முறைகளைகளை இரண்டு அல்லது மூன்று முறை படித்துப்
பார்த்து விட்டு பின்பு செய்யவும். முதலில் படம் 1-ல் காட்டியபடி Start
பொத்தானை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து
படம் 2-ல் காட்டியபடி அதில் gpedit.msc என்று கொடுத்து ok பொத்தானை
அழுத்தவும். அடுத்து திரையில் படம் 3-ல் காட்டியபடி தோன்றும் இதில்
Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து
Network என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து QoS Packet Scheduler
என்பதை தேர்ந்தெடுத்ததும் வலது பக்கத்தில் தெரிவதில்
Limit Reservable bandwidth என்பதை தேர்ந்தெடுத்து Double click
செய்யவும் படம் 4-ல் இருப்பது போல் தோன்றும் அதில் நாம் Enable
என்பதை தேர்வு செய்யவும் கூடவே அதில் இருக்கும் Bandwidth என்பதில்
22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
அடுத்து கணினியை ஒருமுறை Restart செய்யவும். இப்போது உங்கள்
கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
அதிகரிக்கப்பட்டிருக்கும்.
வின்மணி சிந்தனை அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை இல்லாமல் சென்றுவிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ? 2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ? 3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ? 4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ? 5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது? 6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? 7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ? 8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ? 9.சூரியனின் வயது ? 10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ? பதில்கள்: 1.1964,2. தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை, 5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள், 9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து
இன்று ஏப்ரல் 28பெயர் : உ.வே.சாமிநாதையர், பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942 பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
Post a Comment