புதுமையான முறையில் எளிதாக வெளிநாட்டு மொழி கற்க்கலாம்.
ஜூலை 6, 2010
வெளிநாட்டு மொழி கற்க்க வேண்டும் என்றால் நமக்குநேரம் கிடைக்க வில்லை என்கிறோம் ஆனால் புதுமையாகவும்
எளிதாகவும் நமக்கு நேரம் கிடைக்கும் போதும் ஆன்லைன் மூலம்
நாம் வெளிநாட்டு மொழியை கற்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்த பதிவு.
உண்மைதான் வேற்று நாட்டு மொழிகளை கற்க்கும் ஆர்வம்
உள்ள நண்பர்களுக்கு உதவுவதற்க்காக ஒரு தளம் உள்ளது.
இந்தத் தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் புதுமையான
முறையில் எளிதாக மொழியை கற்றுக்கொடுக்கின்றனர்.
ஒரு மொழியை பேசவும் எழுதவும் புதுமையான முறையில்
விளையாட்டாகவும் முழுமையாகவும் கற்றுக்கொடுக்கின்றனர்.
இணையதள முகவரி : http://lingt.com
இந்தத் தளத்திற்க்குச் சென்று நமக்கு என்று ஒரு கணக்கு
உருவாக்கிக் கொள்ள வேண்டும் . பின் எந்த மொழியை நாம்
கற்க்க வேண்டுமோ அந்த மொழியை எளிதாக கற்க்கலாம்.பேசவும்
எழுதவும் தனித்தனி பயிற்ச்சி அளிக்கின்றனர்.ஆரம்பத்திலிருந்து
மொழியை எப்படி கற்க்க வேண்டும் என்று நம் கையைப்பிடித்து
பயிற்ச்சி அளிக்கின்றனர். சைனிஸ் மொழியை மட்டும் இப்போது
முழுமையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இதிலிருந்து நாம் எளிதாக
சைனிஸ் மொழியை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ளலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த
தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை எந்த மனிதரையும் குறைவாக மதிப்பிடாதிர்கள் , எல்லா மனிதர்களையும் படைத்தவன் இறைவன். அவன் படைப்பில் எல்லோரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.அமெரிக்காவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? 2.’கார்ல் மார்க்ஸ்’ எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? 3.நீரின் கொதிநிலை என்ன ? 4.மனிதனின் சிறுநீரில் உள்ள அமிலத்தில் பெயர் என்ன ? 5.பாம்புகளே இல்லாத நாடு எது ? 6.கென்யா நாட்டின் ஆரம்ப கால பெயர் என்ன ? 7.இந்தியாவில் 1000 -மாவது வருடத்தைக் கொண்டாடிய நகரம் எது ? 8.ஈபிள் டவர் எப்போது கட்டி முடிக்கப்பட்டது ? 9.சீனப்பெருஞ்சுவரின் நீளம் என்ன ? 10.செஸ் சாம்பியன்கள் எப்போது அங்கீகரிக்கப்பட்டனர் ? பதில்கள்: 1.ஜார்ஜ் வாஷிங்டன், 2.ஜெர்மனி,3.100 டிகிரி செல்சியஸ், 4.யூரிக் அமிலம்,5.அயர்லாந்து,6.மாலிண்டி, 7.கட்டாக், 8.31-3-1889,9.1684 மைல்கள், 10.1886 ஆம் ஆண்டு.
Post a Comment