நம் கணினியின் கோப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
நம் கணினியின் கோப்புகள் சில நேரங்களில் வெளியே எங்காவது நாம்
கணினி பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது தேவைப்படலாம் அப்படி
தேவைப்படும் நேரங்களில் நம் கணினியின் கோப்புகளை எந்த நாட்டில்
இருந்தாலும் எந்தப்பகுதியில் இருந்தாலும் பயன்படுத்தலாம் எப்படி
என்பதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் -ல் நம் கணினியில் உள்ள அத்தனை தகவல்களையும்
சேமித்து வைத்து பின் இண்டெர்நெட் உதவியுடன் எந்த இடத்தில்
இருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை பயன்படுத்தலாம்
கூகுளின் டாக்ஸ் போல நாம் எங்கே நம் கோப்பு தேவைப்பட்டாலும்
பயன்படுத்தலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.
இணையதள முகவரி : https://www.sugarsync.com
ஆடியோவில் இருந்து வீடியோ வரை நம் கணினியில் இருக்கும்
அத்தனை வகையான கோப்புகளையும் நாம் சேமிக்கலாம்.
இந்தத் தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு கணக்கு உருவாக்கிக்
கொள்ளவேண்டும் பின் நம் கணினியின் தகவல்களை பதிவேற்றம்
செய்ய வேண்டியது தான். 2GB வரை இலவசமாக இடம் தருகின்றனர்
நம் கோப்புகளுக்கு பாதுகாப்பும் கொடுக்கின்றனர். மேலும் இடவசதி
வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
இலவசமாக இடவசதி கொடுக்கும் பல நிறுவனங்கள் நம் கோப்புகளை
பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றன ஆனால் இந்தத் தளத்தில்
நாம் பதிவேற்றம் செய்யும் நம் கணினியின் தகவல்களை நாம்
மட்டும் தான் பயன்படுத்த முடியும். கூகுள் டாக்ஸ் -ல் சில
வகையான கோப்புகள் மட்டும் தான் பயன்படுத்த முடியும் ஆனால்
எல்லா வகையான கோப்புகளையும் நாம் இங்கு பதிவேற்றம் செய்து
நமக்கு தேவையான இடத்தில் தரவிரக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்
வின்மணி சிந்தனை காலையில் நாம் எழுந்ததும் இறைவனுக்கு நன்றி சொல்லிப் பழக வேண்டும் அன்றைய பொழுது நல்லதாகவே இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவில் முதன் முதலாக தீயணைப்பு படை எங்கு அமைக்கப்பட்டது ? 2.கீரிஸ் நாட்டின் பழைய பெயர் என்ன ? 3.அதிக வயதில் இந்திய ஜனாதிபதி ஆனவர் யார் ? 4.1979-ல் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி எங்கு நடந்தது ? 5.டெல்லியின் முதல் பெண் மேயர் யார் ? 6.சஹாரா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது ? 7.கிரேட் விக்டோரியா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது ? 8.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் கேட்ச் பிடித்தவர் யார் ? 9.உலகிலே அதிக மக்களால் பேசப்படும் மொழி எது ? 10.கண்தானத்திற்கான வங்கி எப்போது தொடங்கப்பட்டது ? பதில்கள்: 1.மும்பையில், 2.ஹெல்லாஸ்,3.ஆர்.வெங்கட்ராமன் (76 வயதில்) 4.இங்கிலாந்து, 5.அருணா ஆஸஃப் அலி, 6.ஆப்பிரிக்கா, 7.ஆஸ்திரேலியா,8.ஆலன் ஹில்,9.சீன மொழி, 10.1944-ம் ஆண்டு
இன்று ஆகஸ்ட் 4பெயர் : பராக் ஒபாமா பிறந்த தேதி : ஆகஸ்ட் 4, 1961 அமெரிக்காவின் 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மக்களாட்சிக் கட்சி வேட்பாளராவார். தற்போது இவர் மேலவையிலும் இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராக உள்ளார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
Post a Comment