C , C++ , PHP புரோகிராம் – களை இனி ஆன்லைன் மூலம் இயக்கலாம்.
ஆகஸ்ட் 17, 2010
புரோகிராம் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கலாம்ஆனால் அதற்குரிய மென்பொருள் நாம் செல்லும் இடம் எல்லாம்
இன்ஸ்டால் செய்ய வேண்டுமே என்று பலர் இன்னும் இந்ததுறையை
இன்னும் தொடமல் இருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு நற்செய்தி
இனி C , C++ , PHP புரோகிராம் – களை ஆன்லைன் மூலம்
இயக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சி, சி++ போன்ற மொழி புரோகிராம்களை நாம் ஆன்லைன் மூலம்
எளிதாக இயக்கிப் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://codepad.org
படம் 2
போல் எந்த மொழி என்பதையும் அதற்கான புரோகிராமையும்
தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை அழுத்தவும்.
(உதாரணமாக நாம் ஒரு C புரோகிராமை கொடுத்திருக்கிறோம்)
அடுத்து வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது. இதில்
நம் புரோகிராமை இயக்கி வரும் Output ம் சேர்த்தே கொடுக்கிறது
இதன் பின் நாம் புரோகிராமை எடிட் செய்ய வேண்டுமானாலும்
செய்து மறுபடியும் இயக்கிப் பார்க்கலாம். இன்று முன்னனியில்
இருக்கும் C, PHP, Ruby, Python, C++ போன்ற மொழிகளை
நாம் ஆன்லைன் மூலம் இயக்கலாம் எந்த மென்பொருளும்
தேவையில்லை கண்டிப்பாக இந்த செய்தி புரோகிராமருக்கும்,
கணினி மொழி படிக்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை உதவி செய்யும் போது இவரால் நமக்கு திருப்பி உதவி செய்ய முடியுமா என்று எண்ண வேண்டாம் ஏனென்றால் பலன் எதிர்பார்த்து நாம் செய்யும் உதவி சிறப்பாக இருக்காது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பசுமைப்புரட்சிக்கு காரணமாக பயிர் எது ? 2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ? 3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ? 4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ? 5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ? 6.’ஆசியாவின் வைரம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ? 7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ? 8.வேர் இல்லாத தாவரம் எது ? 9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ? 10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன? பதில்கள்: 1.கோதுமை,2.மேற்கு வங்காளம், 3.உதடுகள், 4.அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது, 5.கழுகு, 6.இலங்கை,7.48 நாட்கள், 8.இலுப்பை, 9.பஞ்சாப் நேஷனல் பேங்க்,10.கொல்கத்தா
இன்று ஆகஸ்ட் 17பெயர் : ஷங்கர், பிறந்த தேதி : ஆகஸ்ட் 17, 1963 இந்தியத் திரைப்பட இயக்குநர்,இவருடைய படங்கள் தொழில் நுட்பம் , பிரம்மாண்டம் , அதிரடியான சமூகக் கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.வரும் காலத்தில் இந்தியாவின் பெருமையை உலகநாடுகளுக்கு எடுத்துச் செல்வதில் இவரின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
Post a Comment