உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்.
ஆகஸ்ட் 11, 2010
முதன்மையான உலகச்செய்திகள் முதல் அனைத்து செய்திகளையும்வீடியோவுடன் பார்க்க பயனுள்ள தளம் ஒன்று உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
அரசியல் செய்தி முதல் விளையாட்டு செய்தி வரை, பங்கு வர்த்தகம்
முதல் பொழுதுபோக்கு செய்திகள் வரை அனைத்தையும் வீடியோவுடன்
ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம். CNN முதல் BBC வரை
அனைத்து செய்திகளின் வீடியோவையும் நல்ல தரத்துடன் பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் அனைத்தின் வீடியோவையும் உடனடியாக
தளத்தில் காண முடிகிறது. மக்களால் அதிகமான பேர் பார்க்கப்பட்டு
பிரபலமான வீடியோ முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு
தொலைக்காட்சி சேனலில் நாம் சென்று பார்க்கும் செய்தியைவிட
இந்த தளத்தின் மூலம் நாம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து
செய்திகளின் வீடியோவையும் பார்க்கலாம்.
இணையதள முகவரி :http://www.newsy.com
வின்மணி சிந்தனை நம்மிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் ஒன்றும் தெரியாத புதுத் துறையில் கூட நாம் ஜொலிக்கலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகின் மிக நீளமான நதி எது ? 2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ? 3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது ? 4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன ? 5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ? 6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ? 7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ? 8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ? 9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்? 10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ? பதில்கள்: 1.நைல் நதி,2.1870,3.பூவரசம் பூ,4.ஸுமென் தஸாவல்ட்டா, 5.அண்டார்டிக்கா,6.குதுப்மினார் -240அடி,7.குல்மார்க்(காஷ்மீர்) 8.ஜெர்ஸொப்பா - மைசூர், 9.மானுவல் ஓரோன், 10.லைகா என்னும் நாய்.
இன்று ஆகஸ்ட் 11PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்பெயர் : ஜாக்சன் பாலக் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 11, 1894 ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர் ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக் கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக இருந்தார்.பல வண்ணங்களை பயன்படுத்தி கோழி கிண்டுவது போல் கிறுக்கி ஒரு தத்ரூபமான ஒவியத்தை உருவாக்குபவர்.
Post a Comment