கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.
ஆகஸ்ட் 24, 2010
கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான தகவல் தான் இந்தப்பதிவு கீபோர்ட்-ல் எந்த
கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் தட்டச்சு செய்யலாம்.
படம் 1
படம் 2
அவரது மடிக்கணினியில் இரண்டு கீ (பொத்தான்) வேலை
செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீயைப் பயன்படுத்த
முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக
தேடிய போது சில மென்பொருட்கள் கிடைத்தது. கூடவே அதிசயமான
ஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா
என்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல்,
ஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start – > Run
சென்று OSk என்று கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட்
ஒன்று நம் கண்முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய
வேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால்
போதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.
படம் 3
கண்டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும்
அவர்களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கும்
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்? 2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? 3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ? 4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? 5.பாம்புகளே இல்லாத கடல் எது ? 6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ? 7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ? 8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ? 9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ? 10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ? பதில்கள்: 1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ, 5.அட்லாண்டிக் கடல்,6. காரியம் , களிமண், மரக்கூழ், 7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில், 10.கேரளா.
இன்று ஆகஸ்ட் 24பெயர் : வே. இராமலிங்கம் , மறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972 தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
சிந்தனை பகையாளியாக இருந்தாலும் உதவி என்று நம்மிடம் வரும்போது நாம் கண்டிப்பாக உதவ வேண்டும். எனென்றால் நாம் இந்த பூமிக்கு வந்த விருந்தாளிகள்.
Post a Comment