Sunday, February 28, 2010

பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய-Easy wa...

முதலில் Excel ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதன்
கீழ்புறம் பார்தால் உங்களுக்கு இந்த மாதிரி பக்க எண்
கிடைக்கும்.


அதில் உள்ள முதல் Sheet 1 மீது கர்சர்வைத்து ரைட்
கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன்
ஆகும்.


அதில் Rename என்பதை தேர்வு செய்து தமிழிலோ -
ஆங்கிலத்திலோ உங்கள் பெயரை தட்டச்சு
செய்யுங்கள். அதுபோல் இதர Sheet 2,Sheet 3,Sheet 4,
ஆகியவற்றில் உங்கள் மனைவிபெயர், மகள்,
மகன் பெயர்களை தட்டச்சு செய்யுங்கள். இறுதியாக
உள்ள Sheet-ல் உங்கள் திருமண நாள் தட்டச்சு
செய்யுங்கள்.


சரி . அடுத்து இப்போது தேதிக்கு வருவோம் . முதலில் உள்ள
A1 காலத்தில் உள்ள செல்லைதேர்ந்தேடுங்கள். பின்
உங்களுடைய பிறந்த தேதியை அதில் பதிவிடுங்கள்.
அடுத்து உள்ள A2 செல்லில் அன்றைய தேதியை
பதிவிடுங்கள். உங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய
வயதை தெரிந்துகொள்ள விரும்பினால் A2 செல்லில்
=now( ) என பதிவிடுங்கள்.

இப்போது நீங்கள் Enter தட்டினால் உங்களுக்கு அன்றைய
தேதி வரும்(உங்கள் கம்யூட்டரில் என்ன தேதி உள்ளதோ
அந்த தேதி வரும்)

சரி வயதை கணக்கிட என்ன செய்வது?
அடுத்து கர்சரை ஏதாவது ஒரு செல்லில் வைத்து
கீழ்கண்ட பார்முலாவை தவறில்லாமல் தட்டச்சு
செய்யவும்.
=DATEDIF(A1,A2,"y") & " years, " & DATEDIF(A1,A2,"ym") & " months, " & DATEDIF(A1,A2,"md") & " days"
மீண்டும் ENTER தட்டவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு
விடை கிடைக்கும்.

இப்போது உங்கள் வயது - மாதம் - நாட்கள் வந்து விட்டதா?
இதில் A2 செல்லில் நீங்கள் தேதியை குறிப்பிட்டால் அந்த
தேதிவரை விடையும் =now( ) என பதிவிட்டால் நாட்கள்
தினம்தினம் கூடிக்கொண்டே செல்வதை காணலாம்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரது பெயரையும் ஒரு
Excel Work Book-ல் பதிவிட்டு அந்த புத்தகத்துக்கு
பெயர் ஒன்று வைத்து உங்கள் டெக்ஸ்டாப்பில்
வைத்துவிடலாம். தேவைபடும் சமயம் அதை
கிளிக் செய்து நாட்களை பார்த்துக்கொள்ளலாம்.
ஜனனகாலம் முதல் இன்று வரை உள்ள உங்கள்
வயதை தெரிந்துகொண்டீர்கள். உங்கள் மரண
தேதியை அறிய ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo