Wednesday, November 17, 2010

கன்னிசாமி கவனம் சாமி

கன்னிசாமி கவனம் சாமி
கார்த்திகையில் மாலை போட்ட கன்னிசாமி
மார்கழியில் கட்டும் தாங்கி கன்னிசாமி
 மனிகன்ன்டனை பார்கபோறாய்  கன்னிசாமி

அச்சகோவில் ஆண்டவனை கன்னிசாமி
 அச்சம்மின்றி தரிசிப்பாய் கன்னிசாமி
ஆரியங்காவு  ஈசனை  கன்னிசாமி
  ஆனந்தமாய்  தரிசிப்பாய் கன்னிசாமி

எரிமேனி நாதனைய  கன்னிசாமி 
ஏகாந்தமாய் தரிசிப்பாய் கன்னிசாமி
காளைகட்டி நாதனையே கன்னிசாமி
கண்குலீர தரிசிபாய் கன்னிசாமி

அழுத நதியிலே கன்னிசாமி
  ஆனந்தமாய் நீராட்டு  கன்னிசாமி
அழுத்தாமல ஏற்ரதிலே  கன்னிசாமி
அழுதுகொண்டு  ஏறுறையே கன்னிசாமி

கரிமலை ஏற்ரதிலே கன்னிசாமி
 கண்ணீரை சிந்துரையே  கன்னிசாமி
பம்பா நதியிலே கன்னிசாமி
பாவங்களை போக்கிடுவாய் கன்னிசாமி

நீலி மலை ஏற்ரதிலே கன்னிசாமி
நிக்காம ஏறவேண்டும் கன்னிசாமி
சபரி பிடதையே கன்னிசாமி
 சந்தேஷமாக காணவேண்டும் கன்னிசாமி

சரம் குன்றியளிநேலே  கன்னிசாமி
அம்புசரம் இடவேண்டும் கன்னிசாமி
18 படுயிலே கன்னிசாமி
பதறாமல் ஏறவேண்டும் கன்னிசாமி

கருப்பு சாமியே கன்னிசாமி
கலங்காமல் தரிசிப்பாய் கன்னிசாமி
காந்தமல ஜோதியே கன்னிசாமி
கண்குளிர தரிசிப்பாய் கன்னிசாமி

 தள்ளாடி தள்ளாடி

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து  நாங்க 
சபரிமளைநோக்கிய  வந்தொமைய்யா

கார்த்திகை நல்லநாளில்  மாலையும் போட்டுக்கிட்டு
காலையிலும் மாலையிலும்  சரணங்கள் சொல்லிக்கிட்டு

இருமுடியை கட்ட வேண்டி  இன்பமாக பாடிகிட்டு
ஈசன்மகனே  உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு

பேட்டைகளும் துள்ளிக்கிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
 நாங் வேடிக்கையாக  வந்தொம்மைய்யா

காணாத காட்ச்சி  எல்லாம் கன்னாரா  கண்டுகிட்டு
காடு மலையெல்லாம்  கால் நடையா  நடந்துக்கிட்டு

பம்பையிலே  குளித்துவிட்டு  பாவங்களை துளைத்துவிட்டி
பக்தர்களெல்லாம்  குடிநின்று  பஜனைகன் பாடிகிட்டு

படியேறி போகும்போது பக்கம் ஒரு காய் உடைத்து
பாலனே உன்னை பார்த்து பார்த்து சொக்கிகிட்டு 

நெய்யிலே குளிக்கும் போது நேரிலே பார்த்துக்கிட்டி
ஜய்யப்ப  சரணம்  என்று அற்பெடுது  பாடிக்கிட்டி


 

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo