Saturday, September 18, 2010

விடுகதை

குடிக்க உதவாது, குளத்தில் தங்காது,
கைகளால் தொடாத நீர், கண்களுக்கு
மட்டுமே விருந்தாகும்-
அது என்ன?

குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து
கொண்டே போகும் அது என்ன?

கருப்பாய் இருந்தாலும் சுவையாய்
இருப்பேன்- நான் யார்?

=============================
விடைகள்:

கானல் நீர்
ஊசி நூல்
நாவல் பழம்



விடுகதை

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?
2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?
6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது,
அது என்ன?
8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு,
அது என்ன?
9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்,
அவன் யார்?
10. மழை காலத்தில்  பிடிப்பான், அவன் யார்?
——————————————————————-
விடை:
10. காளான்
09. எறும்பு
08. பாய்
07. மின்விசிறி
06. பூட்டும் திறப்பும்
05. கோலம்
04. சங்கு
03. அணில்
02. கண்
01. கடல்


விடுகதை

1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்
அவன் யார்?
2. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள்
அவள் யார்?
3. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலை
யைச் சீவினேன்.
மறுபடி நடந்தான். அவன் யார்?
4. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?
5. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக்
கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
6. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான்.
அவன் யார்?
9. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான்.
அவன் யார்?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை.
அது என்ன?
————————————————————————–
விடைகள்:
1. தென்னைமரம்
2. நிலா
3. பென்சில்
4. அகப்பை
5. அப்பளம்
6. தீக்குச்சி
7. கண்ணீர்
8. அருவி
9. தொலைபேசி
10. செருப்பு

ஆடு…புலி…புல்லுக்கட்டு…

ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில்
இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து
வர வேண்டும்.
அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.
புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத்
ன்றுவிடும்.
புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி
ஆட்டைக் கொன்று விடும்.
இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை
சேர்க்கனும்னா
எப்படிக் கொண்டு போவது?
______________________________________________
விடை
1.முதல்ல ஆட்டைக் கூட்டிட்டுப் போய் அக்கரைல
விட்டுட்டு வரணும்.
2. செகண்ட் ட்ரிப்ல புல்லுக் கட்டு அந்தப் பக்கம்
போகணும்.
3. திரும்பி வரப்போ ஆட்டை இந்தப் பக்கம்
கொண்டு வரணும்.
4. மூணாவது ட்ரிப்ல புலியை  அந்தப் பக்கம்
கொண்டு போகணும்.
5. நாலாவது ட்ரிப்லே ஆட்டை அந்தப் பக்கம்
கொண்டு போக வேண்டியதுதான்!

அறிவுப் புதிர்கள் 41-50

விடுகதைகள்
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண்
கலங்கும் அது என்ன?
2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?
5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
6. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?
8. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
9.நித்தம் கொட்டும், ஆனால் சப்தம் இல்லை, இது என்ன?
10. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான்
-இவன் யார்?
விடைகள்:
10. கொட்டாவி
9.கண் இமை
8. முட்டை
7. மழை மேகம்
6. அகப்பை
5. தண்ணீர்
4. சிலந்தி
3.தேங்காய்
2. தபாற் பெட்டி
1.வெங்காயம்

விடுகதை

(1) அணில் ஏறாத கொம்பு
அது என்ன கொம்பு ?
(2) தாடிக்காரன் மீசைக்காரன்
கோயிலுக்குப் போனால்
வெள்ளைக்காரன்-அது என்ன?
(3) தொப்பையனுக்கு ஒரு வாசல்
தோழனுக்கு இரண்டு வாசல்-அது என்ன?
(4) சுட்ட குருவி
ஊர்மேலே போகுது
அது என்ன?
(5) கருப்பு சட்டைக்காரன்
காவலுக்கு கெட்டிக்காரன்
அவன் யார்?
******************************************
விடை; 1) மாட்டுக் கொம்பு
2) தேங்காய்
3) சட்டை
4)பலகாரம்
5) பூட்டு

எதிர் நீச்சல்-

(1) ஆயிரம் பேர் பார்க்க
ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல்
கன்னத்தைக் கடிக்கிறாள்
கள்ளியவள்-அது என்ன?
2)  உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?
(3) கவி பாடும் கட்டழகி
காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?
(4) உழைப்பால் மலரும் பூ
உடனடி உலரும் பூ- அது என்ன ?
விடை (1) திரைப்படம் (2) பல்  (3) குயில் (4) வியர்வை
நூல்; வேடிக்கையான விடுகதைகள்
தொகுப்பு; ஜெகதா

வேடிக்கையான விடுகதைகள்

(1) ஆயிரம் பேர் பார்க்க
ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல்
கன்னத்தைக் கடிக்கிறாள்
கள்ளியவள்-அது என்ன?
2)  உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?
(3) கவி பாடும் கட்டழகி
காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?
(4) உழைப்பால் மலமும் பூ
உடனடி மலரும் பூ- அது என்ன ?
**************************************
விடை (1) திரைப்படம் (2) பல்  (3) குயில் (4) வியர்வை
நூல்; வேடிக்கையான விடுகதைகள்
தொகுப்பு; ஜெகதா

விடுகதை

விடுகதைக்கு விடை சொல்லுங்க‌‌ள் 
விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் கிவிட்டதா? இதோ ந்துவிட்டது
உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு விடைகளைத் தெரிந்து
கொள்ளு‌‌ங்கள்.

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண் சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
நீங்கள் யோசித்திருந்த விடைகள் ரிதானா ன்பதை சோதித்துக் கொள்ளு‌‌ங்கள்.

1. தீக்குச்சி

2. தபால் தலை

3. கடல் அலை

4. சாமரம்

5. வெங்காயம்

6. செல்பேசி

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo