Tuesday, October 12, 2010

உணவு முறைகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்

June 29, 2008
ilamai1.jpgஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
கம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும் பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.
மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.
ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.
இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.
தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.
பால்இ தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.
அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.
எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசிஇ பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
ஆரஞ்சு கொய்யா திராட்சை ஆப்பிள் வாழைப்பழம் முலாம்பழம் பேரீச்சம்பழம் காரட் அன்னாசி காலிபிளவர் முட்டைக்கோஸ் பசலைக்கீரை கொத்துமல்லி முருங்கைக்கீரை பச்சைப் பட்டாணி பால் தயிர் ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.
இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது. குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

தைரியத்தைத் தரும் உணவு முறைகள் !

September 2, 2008
enagry.jpg
உடல் நிலை தொடர்பாகவும் குடும்பச் சூழ்நிலை வேலை கடன் போன்றவை தொடர்பாகப் பிரச்சினை உள்ளவர்களும் இளமையாக வாழ உறுதி கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதுதான் ஒருவர் இளமையாக செயல்துடிப்புடன் வாழ்கிறார் என்பதற்கு அர்த்தம்.
அடிக்கடி தலைவலி வயிற்றுக் கோளாறுகள் இரத்தக் கொதிப்பு பசியின்மை முதலியவைகளில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா?
அப்படியானால் உணவில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் உங்கள் மனமும் உடலும் புதுப்பிக்கப்பட்டு பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் வழி கண்டுபிடித்து விடலாம்.
முதலில் மனக் கவலையை அகற்ற காலையில் ஏதாவது ஒரு பழச்சாறு அல்லது பால் சேர்த்த தேநீர் அருந்துங்கள். மதியமும் இரவு சாப்பாட்டிற்கு முன்பும் பழச்சாறோ அல்லது ஒரு கப் தயிரோ சாப்பிடுங்கள். மற்ற உணவு வகைகளைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அன்னாசிப்பழம் பப்பாளிஇகாராமணி போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள்.
இனிப்புப் பழங்களைக் குறையுங்கள். பேரீச்சம்பழம் தேன் உலர் திராட்சை என்ற கிசுமுசுப் பழம் போன்றவற்றை இனிப்பு தேவை எனில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவில் ஜீனி அதிகம் சேரும்போது குளுகோஸை ஒவ்வொரு செல்லுக்கும் அனுப்பும் குரோமியம் உப்பு இரத்தத்தில் குறைந்து போய் விடுகிறது. அதே நேரத்தில் இரத்தத்தில் குளுகோஸ் அளவும் உயராமல் பார்த்துக் கொள்ளும் தன்மையுடையது குரோமியம். எனவே தினமும் பத்து பாதாம் பருப்புகளோ அல்லது ஒரு கப் கொண்டைக் கடலையோ தவறாமல் சாப்பிடுங்கள். உடல்நலப் பிரச்னைகளையும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் இந்த இரண்டு உணவுகளும் மிக உறுதியாகக் கட்டுப்படுத்திவிடும். நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். பிடிவாத குணமுள்ள குழந்தைகளுக்குத் தினமும் பாதாம் பால் தயாரித்துக் கொடுப்பது மிகவும் சிறந்த மருந்தாகும்.
உடலில் சேரும் விஷப்பொருட்கள் உடனுக்குடன் அகன்றால் மனம் தெளிவாக இருக்கும். எனவே ஓட்ஸ்மீல் சோயா மொச்சை வேர்க்கடலை இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பட்டாணிகூட நல்லது. முட்டைக்கோஸ் சூப் கூட சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் பான்தோனிக் அமிலம் குறையாமல் இருக்கும். பான்தோனிக் அமிலம் அளவு உடலில் குறையாமல் இருப்பதால் மனம் அமைதியாக இருக்கும். உடலிலும் விஷப் பொருட்கள் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பதால் உடல் நோய்கள் படிப்படியாகக் குணமாக ஆரம்பிக்கும்.
அட்ரீனல்களும் தைராய்டு சுரப்பிகளும் சீராக இயக்க போதுமான அளவு அஸ்கார்டிக் அமிலம் தேவை. எலுமிச்சம் பழ ஜூஸ் சாப்பிடலாம். முருங்கைக்கீரை கொய்யா சோயா மொச்சை போன்றவை தினமும் இடம்பெற்றால் உடலுக்குத் தேவையான வைட்டமின் நு தங்கு தடையின்றிக் கிடைத்து உடலும் உள்ளமும் அமைதிபெற்று நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்.
பணப்பிரச்னையாலும் உடல்நலப் பிரச்னையாலும் இரத்தம் கெட்டியாகி மாரடைப்போ பக்கவாதமோ ஏற்படலாம். எனவே சுக்குக் காப்பி அருந்தி வரவும். உணவில் இஞ்சி வெள்ளைப்பூண்டு தவறாமல் சேர்க்கவும். முலாம்பழ ஜூஸ் தினமும் அருந்தவும். இல்லையெனில் 50 கிராம் வெங்காயத்தை ஜூஸாக அருந்தி வரவும். இதனால் இரத்தம் கெட்டியாகாமல் ஓடிக்கொண்டே இருக்கும். வெள்ளை இரத்த அணுக்களும் சுறுசுறுப்பாக இருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
பிடிக்கவில்லை போரடிக்கிறது என்று வெறுக்காமல் காரெட் ஜூஸ்இ சாத்துக்குடி ஜூஸ் போன்றவற்றை மூன்று தடவையாவது அருந்திவாருங்கள்.
காபி தேநீர் முதலியவற்றைக் குறையுங்கள். மது மருந்து முதலியவற்றைத் தவிருங்கள். இதனால் மனநலமும் உடல் நலமும் பாதுகாக்கப்பட்டு விரைந்து குணமாவீர்கள்.
வாரம் மூன்று நாள் மீன் உணவு சாப்பிடுங்கள்.
மேற்கண்ட உணவுமுறைகளால் உடலும் மனமும் புதுப்பிக்கப்பட்டு விடுவதால் உடல் மனம் தொடர்பான எல்லா விதமான பிரச்னைகளும் அகல எளிதாக வழி பிறக்கும். தைரியமாக நம்பிக்கையுடன் வாழ்வீர்கள்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo