Friday, April 1, 2011

கணினியில் ட்ரைவ்வை மறைப்பது எப்படி?



முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.

முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.

அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo