Tuesday, June 7, 2011

YOUTUBE - வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்

altYOU TUBE தளத்தில் இருக்கும் வீடியோவை நேரிடையாக தரவிறக்கம் செய்ய அந்த தளத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. YOU TUBE வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளை நாட வேண்டும். இவ்வாறு நாம் YOU TUBE தளத்தில் இருந்து பதிவிறக்கும் வீடியோக்கள் அனைத்தும் .flv பைல் பார்மெட்டில் இருக்கும். இந்த வீடியோ பைலானது .flv பைல் பார்மெட்டை சப்போர்ட் செய்யக்கூடிய பிளேயர்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற வீடியோ பிளேயர்களில் .flv வீடியோவை பார்க்க முடியாது. இந்த .flv வீடியோ பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்து மற்ற வீடியோ பைல் பார்மெட்டாக மாற்ற பல இலவச வீடியோ கன்வெர்ட்டர்கள் இணையத்தில் கிடைக்கிறன. அவை எதுவும் சிறப்பானதாக இல்லை.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

alt
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயானது மென்பொருளை தரவிறக்கம் செய்து போது சேர்ந்தே தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு கீயை பயன்படுத்தி Register செய்து கொள்ளவும்.
 
alt
Convert என்னும் பொத்தானை அழுத்தி .flv வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பார்மெட்டை தேர்வு செய்து கொள்ளவும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோவை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல், YOU TUBE வீடியோவையும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

 
alt

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo