Wednesday, July 6, 2011

எல்.எல்.ஆர். (Driving License LLR) பெற ஆன்லைனில் பதிவு துவக்கம்

வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் எல்.எல்.ஆர். (ஓட்டுனர் பழகுனர் உரிமம்) பெற ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விண்ணப்பதாரர் சரியான பதில் அளித்தால் உடனடியாக அவருக்கு எல்.எல்.ஆர். கிடைக்கும்.
இதற்காக விண்ணப்பதாரர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து தங்களது பெயர், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்வதால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்கும் வகையில், மாநிலத்திலேயே முதன்முதலாக வேலூரில் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடி பதிவு செய்யும் வசதி நேற்று தொடங்கப்பட்டது. வட்டாரப்போக்குவரத்து அலுவலர் தரணி முன்னிலையில், கலெக்டர் ராஜேந்திரன் ஆன்லைனில் எல்.எல்.ஆர். பெறும் வசதியை தொடங்கி வைத்தார்.
இந்த புதிய வசதியால் எல்.எல்.ஆர். தேவைப்படுவோர், வெப்சைட்டில் தங்களது பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அலுவலகத்துக்கு வந்து, எல்.எல்.ஆர். பெறுவதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு, ரேஷன்கார்டு, வயது சான்று ஆகியவற்றை சரிபார்த்ததும் உடனடியாக ஆன்லைனில் தேர்வு முடித்ததும் எல்.எல்.ஆர். பெறலாம்.
இதுகுறித்து தரணி கூறுகையில், ‘பயிற்சி பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும் தற்போது இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் பொதுமக்களும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம்
http://transport.tn.nic.in/transport/transportTamMain.do
என்ற வெப்சைட்டில் பதிவு செய்து கொண்டு எல்.எல்.ஆர். பெறலாம்’ என்றார்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo