Friday, August 26, 2011

சாக்லெட் உண்டு தலையணையில் படுக்கும் வினோத மீன்!(வீடியோ & படம்

இலங்கையில் காலி மாவட்டத்தில் உள்ள கிராமத்து வீடு ஒன்றில் செல்லப் பிராணியாக அதிசய மீன் ஒன்று வளர்க்கப்படுகின்றது. இம்மீனால் இருபது நிமிடங்கள் வரை நீருக்கு வெளியில் தரையில் தொடர்ச்சியாக நடமாட முடியும். இம்மீனுக்கு மிகவும் பிடித்தமான சாப்பாடு சொக்கலேட். வீட்டில் வளர்க்கப்படுகின்ற மற்றொரு செல்லப் பிராணியான பூனைக் குட்டி இம்மீனோடு நட்பு பாராட்டுகின்றது. இம்மீன் தரையில் நிற்கின்றபோது பூனைக் குட்டி துன்புறுத்துவது இல்லை. இம்மீன் மீது வீட்டில் உள்ள சிறுவர்கள் மிகவும் பிரியமாக நடக்கின்றார்கள். தலையணை மேல் கிடத்தி மடியில் வைத்து ஓராட்டுகின்றார்கள். இந்த மீனுக்கு பிடித்தமான உணவு சொக்லேட் என்ற போதிலும் இந்த மீன் சாப்பிடாத உணவே இல்லையாம். சோறு, மீன், மரக்கறி, பழங்கள் மற்றும் பலவித இனிப்புப் பண்டங்களையும் சாப்பிடுமாம்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo