Monday, January 28, 2013

கால்குலேட்டர்கள்


கால்குலேட்டரில் எவ்வளவோ வகைகள் இருந்தாலும் சில கால்குலேட்டர்கள் சில அப்ளிகேஷன்கள் பயன்படுத்த மட்டுமே உதவும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் சுமார் 75 கணக்குகள் சுலபமாக போடலாம்.500 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவைபடும் கணக்கு விவரத்தை  தேர்வு செய்யவும்.
 நான் பிறந்த நாள் முதல் இன்றுவரை எவ்வளவு வயதாகின்றது என்பதனை அறிந்துகொள்ள Birthday Calculator கிளிக் செய்துள்ளேன். இதில் நமது பிறந்த தேதி,மாதம்.வருடம் தட்டச்சு செய்து இதில் உள்ள Calculate கிளிக் செய்தால்நொடியில் உங்களுக்கு உங்களது வயது மாதம் தேதி.எவ்வளவு மாதங்கள் கடந்துள்ளது.எவ்வளவு நேரம் ஆகிஉள்ளது.எவ்வளவு நாட்கள் கடந்துள்ளது எவ்வளவு வாரம் எவ்வளவு மாதம் என அத்தனை விவரங்களும் நமக்கு துல்லியமாக கிடைத்துவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதனைப்போல நாம் வங்கியில் செலுத்தும் டெபாஸிட்டுக்களுக்கான கூட்டுவட்டி எனப்படும் Compound Interest சுலபமாக கணக்கிடலாம்.இதில் நமது வைப்பு தொகை,வருட வட்டி.எவ்வளவு வருடம் என அனைத்தையும் தட்டச்சு செய்து இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதனைப்போலவே வண்டி லோன்.அறிவியல் கால்குலெட்டர்.கணித கால்குலேட்டர்.என பலவிதமான கால்குலெட்டர்கள் கொடுத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo