Monday, January 28, 2013

தமிழ் ஆங்கிலம் convetar


பொதுவாக நாம் தமிழ் ஆங்கிலம் மற்றும் சிலர் இந்தி அறிந்துவைத்திருப்பார்கள். புதிய மொழியில் வார்த்தைகள் இருந்தால்அதனை மொழிபெயர்க்க தெரியாது. இந்த கூகுள் வழங்கும் டிரான்ஸ்லேட்டரில் நாம் சுமார் 60 மொழிகளை சுலபமாக மொழிமாற்றம் செய்துகொள்ளலாம். 4 எம்.பிகொள்ள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் நாம் தட்டச்சு செய்யவேண்டிய மொழியையும்  மொழிமாற்றம்செய்யவேண்டிய மொழியையும் தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள விண்டோவில் வார்த்தைகளை தட்டச்சு செய்யவும். நான் தமிழ்கம்யூட்டர் என்பதனை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துள்ளேன். பிறகு இதில் மேல்புறம் உள்ள டிரான்ஸ்லேட் பட்டனை கிளிக் செய்யவும்.சில நொடிகள் காத்திருக்கவும்.

மொழிமாற்றம் செய்த வார்த்தை நமக்கு கீழே உள்ள விண்டோவில் கிடைககும்.Swap Language என்கின்ற வசதி கொடுத்துள்ளார்கள். நாம் நமது மொழியை உல்டாவாக மாற்றிக்கொள்ளலாம்.இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இந்த சாப்ட்வேரினை பற்றி மேலும் அறிந்துகொள்ள இதன் இணையதள முகவரி கான இங்கு கிளிக் செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo