Saturday, March 5, 2011

ஆன்லைனில் மூவி எடிட்டிங்



நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது.

நம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 ஜிபி இடம் தருகிறது. 800 எம்பி வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல்களை அனுப்பி மெருகூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV, மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.

உங்கள் வீடியோ பைலை இந்த தளத்தில் அப்லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்டலாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம். பின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோன்றி மறைவது போன்ற எபக்டுகளைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்து முடிந்த பின்னர், மூவியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடிவமைத்து டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோஷியல் நெட்வொர்க் தளங்களிலுல் பதியலாம். அல்லது டிவிடியில் காப்பி செய்திடலாம்.

முதலில் இந்த தளத்தில் நுழைந்தவுடன், உங்களுக்கென உள்ள இமெயில் அக்கவுண்ட் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட் ஒன்று தொடங்க வேண்டும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் ஹோம் வீடியோ பைலை அப்லோட் செய்வது, உங்களுடைய ஷாவினை நீங்களே உருவாக்குவது மற்றும் உங்கள் படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

உங்களுக்கென இந்த தளத்தில் தரப்படும் 10 ஜிபி இடத்தில் உங்கள் வீடியோக்களைப் பதிந்து வைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிரியமான சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பதிந்து வைக்கலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo