Tuesday, March 22, 2011

அதிக நேரம் கணினியில் செலவிடுகிறீர்களா?


இன்றைய வாழ்க்கை முறையில் காதலியை தவிர்த்தாலும் கணினியை தவிர்க்க முடியாத சூழல். ஆனாலும் அதிக நேரம் கணினியில் செலவிடும் போது என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்று அறிய வரும்போது அதிர்ச்சி தருகிறது.

கண் பாதிப்பு: இமைக்காமல் அதிக நேரம் கணினித் திரையயே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம்(glucoma), மற்றும் விழி உலர்வு நோய்(dry eye syndrom) க்கு காரணமாகிறது. குறிப்பாக கிட்டப் பார்வை (short sight) உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. அதிக வெளிச்சமான் திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் ஆபத்தை மெல்ல நாம் உணருமுன் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும்.கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி இதெல்லாம் இதன் முன்னெச்சரிக்கை.
  • கணினினி திரை வெளிச்சத்தை மிதமாக வைத்துக்கொள்ளவும்.
  • கணினி இருக்கும் அறையில் ஓரளவு வெளிச்சம் இருக்க வேண்டும்.
  • அடிக்கடி கண்ணை இமைப்பது நல்லது.
  • இடையிடையே கண்ணை முழுவதுமாக மூடி கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.
  • அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி தூர உள்ள பொருளை காட்சியைப் பார்க்க வேண்டும்.
  • மானிட்டருக்கு பின் புறம் ஜன்னல் இருந்தால் நல்லது.
  • குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள உலர்ந்த குளிர் காற்று கண் உலர்வுக்குக் காரணமாகும்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo