Monday, December 6, 2010

அருள்மிகு விநாயகர் போற்றி


திருச்சிற்றம்பலம்


நட்சத்திரம்..................... நாள்சேர்
பெயர்.............................பெயர்க்காக

செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!

ஓம் அத்தி முகனே போற்றி
" அரியின் மருகா போற்றி
" அருளாம் ஆழி போற்றி
" அறுமுகன் துணைவா போற்றி
" இடைமுடை வயிற்றோய் போற்றி
" இண்டைச் சடையோய் போற்றி
" உத்தமக் களிறே போற்றி
" உமைதிரு மகனே போற்றி
" உயிர்க்குயிராய் இருப்பாய் போற்றி
" எண்குணச் செல்வா போற்றி 10

ஓம் எண்ணிய ஈவாய் போற்றி
" எமையாள் பவனே போற்றி
" எய்ப்பில் வைப்பே போற்றி
" ஏழைபங் காளா போற்றி
" ஐங்கர அமுதே போற்றி
" ஐந்தொழில் புரிவோய் போற்றி
" ஒப்பிலா மணியே போற்றி
" ஒருகைக் கற்பகமே போற்றி
" ஔ¢நிறை வௌ¢யே போற்றி
" ஔ¢ர்முக இறைவா போற்றி 20

ஓம் ஒற்றை மருப்பா போற்றி
" ஓமேனும் உருவே போற்றி
" ஓங்காரப் பொருளே போற்றி
" ஓதிய மறையே போற்றி
" அ·காப் பொருளே போற்றி
" கண்ணுள் மணியே போற்றி
" கருணையங் கடலே போற்றி
" கவளமா களியே போற்றி
" கழியவரு பொருளே போற்றி 30

ஓம் கற்பகக் களிறே போற்றி
" காராணப் பொருளே போற்றி
" கீதக்கிண் கிணியாய் போற்றி
" குடவயிற்று வரதா போற்றி
" குணக் குன்றே போற்றி
" கைம்மா முகனே போற்றி
" கௌவைத் துணையே போற்றி
" சக்தி தலைப்பிள்ளை போற்றி
" சாய்மறைச் செவியாய் போற்றி
" சித்தி விநாயகர் போற்றி 40

ஓம் சிந்தா மணியே போற்றி
" சிவஞானச் செல்வா போற்றி
" சிவானந்த ஔ¢யே போற்றி
" சுருதி விளக்கே போற்றி
" செல்வக் கணேசா போற்றி
" செழுஞ் சுடரே போற்றி
" சைவக் குருவே போற்றி
" சொல்லும் பொருளே போற்றி
" ஞானக் குன்றே போற்றி
" தண்டைக் காலாய் போற்றி 50

ஓம் தத்துவப் பொருளே போற்றி
" தமிழ்நுகர் செவியாய் போற்றி
" தாமரைக் கரத்தாய் போற்றி
" தாழ்தடக் கையனே போற்றி
" தீங்குதீர்ப் பவனே போற்றி
" தெய்வசிகா மணியே போற்றி
" தொப்பை யப்பா போற்றி
" தொளைபடு கரமலை போற்றி
" நந்தா மணியே போற்றி
" நந்தி மகனே போற்றி 60

ஓம் நம்பும் துணையே போற்றி
" நான்மறை விநாயகா போற்றி
" நீறணி பவனே போற்றி
" நுகருமா ரமுதே போற்றி
" நூறாப் பெயரோய் போற்றி
" நெற்றிக் கண்ணாய் போற்றி
" நொந்தவர்க் காவாய் போற்றி
" பவளக் குன்றே போற்றி
" பாரதம் தீட்டியோய் போற்றி
" பிணிக்கு மருந்தே போற்றி 70

ஓம் பிரணவ ஔ¢யே போற்றி
" புகர்முக வேழா போற்றி
" பூங்கமலப் பாதனே போற்றி
" பூமகள் மருகா போற்றி
" பெற்றோர் மகிழ்வே போற்றி
" பேரானந்த நிறைவே போற்றி
" பொள்ளா மணியே போற்றி
" பொன்றாக் குன்றே போற்றி
" மகா கணபதி போற்றி
" மங்கள மூர்த்தி போற்றி 80

ஓம் மணி விளக்கே போற்றி
" மததாரைக் கடவுளே போற்றி
" மதியளிப் பவனே போற்றி
" மதோற் கடனே போற்றி
" மழஇளம் கன்றே போற்றி
" மறை முதலெ போற்றி
" மாங்கனி பெற்றாய் போற்றி
" மாதவக் குன்றே போற்றி
" முக்கட் கணபதி போற்றி
" முதல்வரு பொருளே போற்றி 90

ஓம் மும்மத வாரியே போற்றி
" மூல முதல்வா போற்றி
" மூவரின் முதலாய் போற்றி
" மூவேறு உருவே போற்றி
" மேலாம் பதமே போற்றி
" மொழிவார்க் கருளே போற்றி
" மோதகச் செங் கையனே போற்றி
" மௌலி தரித்தோய் போற்றி
" யானைதிறை கொண்டாய் போற்றி
" வல்லபை கணவா போற்றி 100

ஓம் விக்கின விநாயகா போற்றி
" வித்தைக் கிறைவா போற்றி
" வெண்தந் தத்தவா போற்றி
" வேட்கை தணிவிப்பாய் போற்றி
" வேத கணபதி போற்றி
" வேதச் சுடரே போற்றி
" வினைவேர் அறுப்பாய் போற்றி
" விநாயகா போற்றி போற்றி 108

Leia mais...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் ஐயப்பா சரணம் (2 தடவை மெல்லிய குரலில்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே

நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே உன்னை
பார்க்க வேண்டியே தவமிருந்து (2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஈரும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஈறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஈற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாட பலம் தா தூக்கிவிடையா ஏற்றிவிடையா
தேக பலம் தா பாட பலம் தா (மெல்லிய குரலில்)

தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாட பலம் தா என்றல் அவரும்
பாட்டை தந்திடுவார் நல்ல
பாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திருவார்
சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும்
சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்

அந்த பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி

சரணம் சரணம் அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ (6)



ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா

ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா

ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா

ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா

ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா

ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனம் சரணம் ஐயப்பா

ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா

ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா

ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா

ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா

ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா

ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா

ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா

ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

தெரிந்தும்
தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து
காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல்
வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம்
அடக்கி ஆறும் ஓம் ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம்
ஐயப்பா!

Leia mais...

பக்தி பாடல்கள்

முருகன் பாடல்கள்

நீயல்லால் தெய்வமில்லை
எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)
பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
___________________________________________________

கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

(கந்தன்)

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தனேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து சொந்தம் கொண்டாடிடுவாள்

(கந்தன்)

மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம் தெய்வம் துணை தாருமடா

(கந்தன்)
பாடல்: கந்தன் திருநீரணிந்தால்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
___________________________________________________

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா

(உள்ளம்)

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா

(உள்ளம்)

பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா

(உள்ளம்)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா

(உள்ளம்)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

(உள்ளம்)
பாடல்: உள்ளம் உருகுதய்யா முருகா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
ராகம்: பீம்ப்ளஸ்
___________________________________________________

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ

(கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ

(கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

(கற்பனை)

பாடல்: கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்



கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!
(கற்பூர)
புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!
(கற்பூர)
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!
(கற்பூர)
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!
(கற்பூர)
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!
(கற்பூர)
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!
(கற்பூர)
அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!
(கற்பூர)
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!
(கற்பூர)
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!
(கற்பூர) 






கண்ணன் பக்தி பாடல்கள்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வாண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (2)
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (2)
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (2)
(புல்லாங்குழல்)
பாடல்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
குரல்: டி எம் சௌந்தரராஜன் 

மந்திரங்கள் மற்றும் பக்தி பாடல்கள்

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்
எழுதியவர்: ஔவையார்



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

கந்த சஷ்டி கவசம்...

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

ஸ்ரீ காயத்ரி மந்திரம்


ஸ்ரீ காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

காயத்ரி மந்திரம்:-

"ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை :-

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

Leia mais...

Monday, November 29, 2010

முனுகன்னு தேங்க

முனுகன்னு தேங்க  அதில் நேய்யநிரைப்பி வச்சி

அனந்த அஞ்சுமலை ஏறி  அய்யன் பதம் பணிந்திடனும்

ஏற்றிடு ஏற்றிடு எங்களைமேலே
  நம்பிகைவச்சொம் உன் அருள்மேலே 
வேண்டிட வேண்டிட வந்தருள்வாயே மோகனசுந்தரனே

தாங்கும் இருமிடிதான் அது அய்யன் திருவடிதான்
விதிபாராம் குறைச்சிடும்தான்  நம்ம பாவம் மறஞ்சிடும்தான்

சொல்லுங்க சொல்லுங்க அய்யனின் நாமம்
சொல்லிட சொல்லிட வந்திடும் யோகம்
கல்லென்ன முல்லென்ன காடென்ன மேடென்ன  அய்யன் இருக்கையிலே

கரிமலை ஏறி நாமயிரங்கிடும் பொது நம்ம
ஆரிகரந்தானே வந்து கைகொடுப்பானே

அய்யனின் சக்தியை வந்திங்க பாரு
சொன்னது சொன்னது சத்தியம் பாரு

நாளென்ன பொழுதென்ன வினைஎன்ன
 செய்யும் அய்யன் இருக்கையிலே

துயபதினெட்டு படியில் பாதம் படும்போது
வரும் துன்பம் நொடியினிலே நம்மை   விட்டுப்பரக்குதையா

கற்பூர ஆரத்திகாட்சியை பாரு சத்திய  
மூர்த்தியின் கீர்த்தியை பாரு

கந்த மலைமேலே நம்ம சாந்தமகராச அனந்த
வானவெளியிலே ஒரு ஜோதியாய் வந்தனே

ஆயிரம் ஆயிரன் சூரியன் இங்கே 
பாருங் பாருங்க ஐயனை அங்கே

பாத்திட்ட பாத்திட்ட  கண்களும் கோடி தந்திடு என்னய்யனே

Leia mais...

குருசாமி சபரிமல

 கன்னிசாமி
குருசாமி  சபரிமல எங்கிருக்கு சொல்லுங்க சாமி
முதல் முதல மாலைக்கிபோறேன்  கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
மலையால  தேசத்திலே  கன்னிசாமி மலைமேலே
 
வீற்றிருப்பார்  மனிகண்டசாமி
  கன்னிசாமி
குருசாமி அஞ்ஜிமலை  எப்படிதான் போகுனுனு சொல்லுங்க சாமி
முதல் முதல மாலைக்கிபோறேன்  கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
விரதமிட்டு  போகுனுமே கன்னிசாமி வீரமணிகண்டனையே
வேண்டுனும் சாமி
  கன்னிசாமி
குருசாமி விரதமுமே  எத்தனைநாள்  தெரியலசாமின்
முதல் முதல விரதம் காதத்   கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
நாற்பதுநாள் விரதமுமே கன்னிசாமி  ஏற்பதையே
செய்யவேணும் கேளுங்க சாமி
  கன்னிசாமி
குருசாமி  என்ன உடை உடுத்தவேண்டும்  சொல்லுங்க சாமி
முதல் முதல அணிய போறேன் கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
நிலவண்ண வெட்டி துண்டு கன்னிசாமி  வேற்றுடம்பு 
துளசிமாலை சூடுனும் சாமி
  கன்னிசாமி
குருசாமி வேறென்ன  செய்யா வேண்ண்டும் சொல்லுங்கசாமி
முதல் முதல மாலைக்கிபோறேன்  கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
போதையுடன் களியாட்டம் கன்னிசாமி
பொறுப்புடனே நீக்கவண்டும்  கன்னிசாமி

பாதணிய அணியவேண்டாம் கன்னிசாமி
நடைபாதை கல்லும் முள்ளும்
கன்னிசாமி
குருசாமி உருவத்திலே மாறுதல் என்ன  சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
முடிதிருத்தம் செய்யவேண்டாம் கன்னிசாமி
முனிவரைபோல  மாரவேன்ன்டும் கன்னி சாமி
கன்னிசாமி
குருசாமி எப்படிதான் புறப்படுனும் சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
இருமுடிதான் கட்டுனுமே கன்னிசாமி எல்லோருமே
புறப்படணும்  கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி மலை ஏறி செய்வது  என்ன சொல்லுங்கா சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
சரணம் மிட்டுபாடுனுமே கன்னிசாமி பேட்டைதுள்ளி
ஆடனுமே கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி புனித நீரில் குளிக்கனுமா சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
பம்பையிலே நீராடி கன்னிசாமி
பக்திமயமாகவே ஆக வேண்டும்  கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி மலை ஏறி செய்வதென்ன  சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
சரம் கொத்தி வெடிபோட்டு கான்னிசாமி
சரணம் சொல்லி நடக்கணுமே  கேளுங்க சாமி
கன்னிசாமி
குருசாமி சாமி பாதம் காண்பது எப்போ  சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
18 படியேறி  கன்னிசாமி  பரவசமாய்
கானுவோமே பாருங்கசாமி

Leia mais...

Saturday, November 27, 2010

pallikattu

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு சாமி அய்யப்ப
கல்லுமுள்ளு காலுக்குமேத்தை சரணம் அய்யப்ப

குருவீரமணி சாமி பாடியபாட்டி  
அது அகலவில்லையே நெஞ்சை விட்டு

அச்சங்கோவில் அரசெசரணம்
ஆரியங்காவு ஆயாசரணம்

பந்தலனாட்டின் பாலகன் அய்யா
மங்கலருபா பம்பாவச 

சாமியே அய்யாப்போ அய்யப்போ  சாமியே

பம்பாகரையே தொட்டில் உனக்கு
பம்பாதீபம்  ராத்திரிவிலக்கு

ஹரிவாராசனம் செவியில் தாலாட்டு
குருவேநிந்துருவதனம் காட்டு

கல்லிடும் குன்றே காண்க அழகே
சின்முத்திரையே சங்கரந்தியே

அலுதானதியே மலையே மேடே
வான் புலி ஏறும் குருவே சரணம்

சந்தானம் வைத்தால் சனி அண்டாது
பந்தளம் என்றால் பயன் அண்டாது

சரணம் விழித்தால் கொலான்டாது
சபரிபக்ததை துன்பம் அண்டாது

வாவர் தோலா வில்லாளி வீரா
மோகினிருபா வீரமநிகன்ன்டா

சரம்கொத்தியாளில் சத்தியம் நீயா
நறுமனபுங்க வனமால்பவனே

கர்புரதீபம் உனக்கேயப்பா
மங்கள மேளம் உன்க்கேயப்பா

பதினெட்டு படிகளில் பூஜை உனக்கே
கதியென நின்றோம் கத்தருல்வாயே

முத்திரை தேங்காய் நிரம்புது உனக்கே
நெய்யும் மெய்யும் உச்சிஎருமே

கானகம்  வளர்ந்த ஹரின் புத்திரா 
நின் பாதம் பற்றியே கானகம் வந்தோம் 

 மேலும்  மேலும் உயர வைத்திடு
நாளையும் தொலையும் சாதகமாக்கு

வெல்லும் தமிழை என்வசமாக்கு
சொல்லும் சொல்லை சாத்தியமாக்கு

கார்த்திகை விரதம் கவசமகுமே
நாம் தோலும் தெய்வம் சபரினாதனே

பத்து பன்னிரெண்டு தென்னங்கன்னு தோப்பே
சுத்தி சுத்தி உன்சன்னதிவருவேன்

Leia mais...

Friday, November 26, 2010

sannathiyil kattum katti

  சபரியில் வாழும் சிவகரி பால
சரணம் சொல்லும் நாவில் வாவ
மலை முடியில்  வாழும் மாதவ செல்வா
மாலை அணிந்த மார்பில் நீ வா
கரிமலையாலும்  கானகவாச
கருநீல ஆடையில் குடிபுக நீவ
தினசரிபுஜையில்  தரிசனம் நீதா

குருவீன் குருவே அய்யப்ப  உன் திருவடி சரணம் ஐயப்பா

கண்ணிமுலையின் காவல் தெய்வமே
கண்ணிமார்களின் பூஜையில் நீவா
பொன்னம்பலத்தில் மின்னும் விளக்கே
எங்கள் வீட்டு ஜோதியில் நீவா
காந்தமலையில் தவழும் மனமே
சந்தானம் அணிந்த சிந்தனையில் நீவா
நீலி மலையின் நித்யவாசமே
நீல ஆடையில் நித்தமும் நீவா


தவசியகவே தனித்து நின்றவ
துளசிமாலையும் துலங்கிட நீவா
மனிவும் ஆடிட மலையில் வந்தவ
மார்கழி பூஜையில் மலர்ந்தொடிவா
விழியுடன் பேசும் தினதயாலா
விரதம்ம் காக்க  விரைந்தோடிவ
புன்னகை அணிந்த பரிமலவாச
எண்ணிய பொழுதே எழுந்தொடிவ

வன்புலிஎரும் கலியுகவரத
              புகுந்து வழங்க்கிடுவாயே
பந்தள மண்ணில் சிந்திய மலையே
சிந்தனையில் வந்து நிறைந்திடுவாயே
மகிஷ்சின் தலையி நர்த்தனம் செய்தாய்
மனதில் நுழைந்து நடம்மிடுவாயே
கரிமல யானையில் அமரும் தேவ
குருவெனஇருந்து  வலியினை காட்டு

காட்டில் கிடைத்த தையல் நீயே
வீட்டில் நுழைந்து விரைந்திடுவாயே
புலியுடன் பழகும் புண்ணியன் நீயே
எங்கள் உறவென வந்திடுவாயே
இருமுடி எடுத்த இறைவனும் நீயே
பலமுடிகக்க பரிவுடன் வருக
பொருவலி நடந்த குருவரன் நீயே
பலவளிதிறக்க புறப்புடுவாயே


பேரூர் தோடே  போய்யானதியே
வாரும்  என்றிட  வந்திடுவாயே
அழுத நதியே ஆண்மைவிலகே
தொளுதவன் கையில் எழுந்திடுவாயே
கல்லிடும் குன்றே  கரிமலை தோடே
சொல்லும் சரணத்தில் கிடைதிடுவையே
ஆளைவட்ட சேனாதிபதியே
அடிமைகள் எங்களை வாலவைப்பாயே

கோட்டை படியே கோமள வடிவே
நாட்டமெல்லாம் உந்தன் மடியே
பாச்ம குலமே பகவதி மகனே
அஷ்டயோகமும் நீதான் எமக்கே
மாளிகபுரமே மங்கள வடிவே
காநிகைஎல்லாம் எங்கள் மனமே
கும்பலதொடே குலவளிபாடே
உண்பலத்தாலே வலுகிரோமே

அச்சன் கோவில் அரசன் நீயே
இச்சைகொண்டோம் உந்தன் மேலே
ஆரியங்காவு பெரியலந்திரையே
 ஓரிடம்வேண்டும்  உந்தன் அடியில்
குலத்துபுலையில் தவழும் கநீயே
ஆளைக்கும்போதே அபயம் தருக்க
எரிமேலி வாழும் ஏகாந்த வாசா
எமபயம் தனை எரித்திடுவீடுக




வாவரின் தோழா வன்புலிவாச
வறுமை திற விரைந்தே வருக
கடுத்த்சாமியே கற்பூர ஒளியே
எடுத்தகாரியத்தில் நீயே நிறைக்க
சபரிபீடமே சந்தனருபாமே
தவறு செய்யாத மனநிளைதருக
அப்பாச்சி மேடே இப்பச்சி குழியே
எப்போதும் எம்மை அனத்தருல்வாயே

சந்தனவிரும்பும் சன்முகநேச
வந்தனம் செய்யும் வக்கினைதருக
இருமுடிவிரும்பும் ஈசனின் மைந்த
பலப்படி உயர பக்குவம் தருக்க
கற்புரபிரியனே கனபதிநேச
பாதகமலங்கள் பரியுடன் தருக்க
கதளிபலமாய் கனியும் தேவா
சித்ரா மனமே சடுதில் தருக்க


இருமுடி கட்டில் கலக்கும் தேவ
பற்றையருக்கும் பதமலர் தருக்க
காணி பொன்னில் கரையும் தேவ
கழகமில்லா வளமே தருக்க
முத்திரைகாய்யில் புலரும் இறைவா
முகத்தில் உன்பெயர் மட்டுமே தருக்க
நெய்யில் உருகும் நெடுமான் மகனே
கை அதைபிடித்து கரைசெர்பாயே

அன்னதானமே ஆருயிர் மருந்தே
பொன்னும் பொருளையும் வலமாக தருக்க
கண்ணிசாமியே கருணை மொழியே
என்னும் செயலில் ஜெயமாய் வருக
துளசியில் வாழும் துய்மநிமார்பா
சிந்தனையி கசடு சேராது காக்க
கற்பூர ஒளியே கானகமருந்தே
தப்பாமல் எம்மைகாத்திடுவாயே

மார்கழியில் மலரும்  மாமலைவாச
பொய்யும் புரட்டும் நிக்கிடுவாயே
பொங்கலில் மலரும் திங்கள் ஒளியே
பொறுத்திடும் குணமது எடுத்தேதருக
பனிமலை சிறந்த பரம தாலே
பணியும் குணமது பண்புடன் தருக்க
சபரியில் தவழும் சர்வேஸ்வரனே
உயிர்களை ஆனைக்கும் உள்ளமே தருக்க

மோகினி பெற்ற  மாதவன் முனியே
மோகம் அறுப்பது உந்தன் வேலை
அரியவன் பெற்ற பெரியவன் நீயே
ஆசை அறுப்பது உந்தன் வேலை
வாபரனை அணைத்த வன்புலிநேச
  விளவினை அறுப்பது உந்தன் வேலை
பந்தள வளந்த பலவிநேத
பாவம் பொறுப்பது உந்தன்பாதம்

பகவான் வடிவே பகவதி மடியே
பனிமலை கடந்திட பணிவுடன் வருக
தேவன் வடிவே தேவிமடியே
தேகபலமத்தை திடமாய் தருக்க
கட்டும் கட்டே கட்டின் நிறையே
கரிமலை கடந்திட கனிவுடன் வருக
பதினெட்டு படியே பரமனின் உருவே
பாதபலதனை பலமாய் தருக்க

சர்குருவடிவே சந்தன சிலையே
சபரி கடந்திட சடுதியில் வருக
அரனார் ஒளியே ஆதிசிவன் நிறையே
சரணம் சொல்லும் வாக்கில் நிறைக்க
நீல நிற ஆடை சூடும் கனியே
நீலிமலை கடந்திட விரைவா வருக
மாலைவிளக்கே மங்கள முடியே
விரதம் காக்க விரைந்தே வருக

மூவாறு படியே நாவார சொன்னோம்
பாதார பிந்தம் படியென தருவாய்
கற்பூர ஆழியை கனியுடன் சொன்னோம்
பொற்பாதம் இரண்டும் இப்போதே வேண்டும்
கொடிமரதனை கதியென கொண்டோம்
அடிகள் இரண்டும் அவசியம் தருக்க
சன்னதி நடையே  சகலமும் என்றோம்
நிம்மதி நிம்மதி தந்தருள்வாயே

குருவின் குருவே அய்யப்ப  உன் திருவடி சரணம் அய்யப்ப


Leia mais...

Wednesday, November 24, 2010

ஒன்னாம் திருப்படிக்கு

 
 
ஒன்னாம்  திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
ஜெவ்வது சந்தானம் குங்குமம தான் சுட்டினோம்
நாளும்  எங்கள் வாழ்வில் வாசம் காண செய்வாயே

2 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
நெய்விழக்கு ஏற்றினோம் நெய்யுருக்க பாடினோம்
பாடு எங்கள் வீடுவாசல் காப்பாய் நீதானே

3 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
புமலை சுட்டிநேம் துபங்கள் காட்டினோம்
நாணம்  கல்வி செல்வம்  யாவும் தருவாய் நீதானே

4 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
தேங்காய் உடச்சதும் ஆரத்தி காட்டிநேம்
வினைகள் யாயும் விலகுது இங்கே எல்லாம் உன்னாலே

5 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
புவளே அர்ச்சித்து சொன்னோமே மந்திரம்
உன்னைகாணும் ஆவல்தானே ஓடிவந்தோம்

6 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
படியை தொட்டு கும்பிட்டோம் சரணம் சொல்லி குப்பிட்டோம்
வரணும் வரணும் வரணும் நீயே  எதிரில் நீயே  ஐயப்பா

7 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
வேதங்கள்  நாளும் சொல்லியே திருபடிகள்  ஏறினோம்
எங்கள் சந்ததி வாழ வைக்கும் சாஸ்தா நீதானே  

8 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
வில்லாளி வீரனே வீரமணி கண்டனே
நாளும் நல்ல எண்ணம் தந்து காப்பாய் நீதானே

9 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
ஆதாரம் நீதானே அவதாரம் என்றோமே
காலம் நேரம் மாறும் போதும் காப்பாய் நீதானே

10 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
எந்நாளும் பாலகன் ஆனாலும் நாயகன்
பாசம்நேசம் காட்டும் தாயாய் ஆனாய் நீ தானே

11 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
எல்லாமே நீ என்று கண்டோமே நாம் இன்று
சொல்லும்  பொருளும் சுவையு எல்லாம்   நீயே ஐயப்பா

12 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
கண்நீசாமி  முன்னாலே நங்கவரோ பின்னாலே
உன்னை காண  இன்னும் கோடி எங்கள் பின்னாலே  

13 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
சண்டை ஒழிகேக்குது கோவில் மணி சேருது
அய்யன் நாமம் தேனாய் மாறி காதில் பாயுது

14 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
சந்நிதானம் வாசலில் சந்தானம் குங்குமம் மணக்குது
இருமுடிஎல்லாம் கோபுரம் போல எதிரே தெரிகிறது  

15 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
சாமிகளில் காவிதான்  அய்யன் கொடி யகுது
காமாக்ரோத மோகமேல்லாம் தானே மாயுது

16 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
அய்யன் திரு சந்நீதி  போன்னம்பலமாகுது
மின்னும் திரு ஆபரணம் தானே சாட்ச்சி  ஆகுது

17 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
ஞான வடிவாகவே அய்யன் முகம் மின்னுதே
கணக்கான கண்கள் பம்பா வெள்ளம்மானதே  

18 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா  
கற்பூர ஆரத்தி கண்முன்னே காண்கிறோம்
அய்யன் நேரில் வந்தான் இங்கே   சரணம் சொல்லுங்க

சாமியே சரணம் ஐயப்பா



Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo