Friday, November 26, 2010

sannathiyil kattum katti

  சபரியில் வாழும் சிவகரி பால
சரணம் சொல்லும் நாவில் வாவ
மலை முடியில்  வாழும் மாதவ செல்வா
மாலை அணிந்த மார்பில் நீ வா
கரிமலையாலும்  கானகவாச
கருநீல ஆடையில் குடிபுக நீவ
தினசரிபுஜையில்  தரிசனம் நீதா

குருவீன் குருவே அய்யப்ப  உன் திருவடி சரணம் ஐயப்பா

கண்ணிமுலையின் காவல் தெய்வமே
கண்ணிமார்களின் பூஜையில் நீவா
பொன்னம்பலத்தில் மின்னும் விளக்கே
எங்கள் வீட்டு ஜோதியில் நீவா
காந்தமலையில் தவழும் மனமே
சந்தானம் அணிந்த சிந்தனையில் நீவா
நீலி மலையின் நித்யவாசமே
நீல ஆடையில் நித்தமும் நீவா


தவசியகவே தனித்து நின்றவ
துளசிமாலையும் துலங்கிட நீவா
மனிவும் ஆடிட மலையில் வந்தவ
மார்கழி பூஜையில் மலர்ந்தொடிவா
விழியுடன் பேசும் தினதயாலா
விரதம்ம் காக்க  விரைந்தோடிவ
புன்னகை அணிந்த பரிமலவாச
எண்ணிய பொழுதே எழுந்தொடிவ

வன்புலிஎரும் கலியுகவரத
              புகுந்து வழங்க்கிடுவாயே
பந்தள மண்ணில் சிந்திய மலையே
சிந்தனையில் வந்து நிறைந்திடுவாயே
மகிஷ்சின் தலையி நர்த்தனம் செய்தாய்
மனதில் நுழைந்து நடம்மிடுவாயே
கரிமல யானையில் அமரும் தேவ
குருவெனஇருந்து  வலியினை காட்டு

காட்டில் கிடைத்த தையல் நீயே
வீட்டில் நுழைந்து விரைந்திடுவாயே
புலியுடன் பழகும் புண்ணியன் நீயே
எங்கள் உறவென வந்திடுவாயே
இருமுடி எடுத்த இறைவனும் நீயே
பலமுடிகக்க பரிவுடன் வருக
பொருவலி நடந்த குருவரன் நீயே
பலவளிதிறக்க புறப்புடுவாயே


பேரூர் தோடே  போய்யானதியே
வாரும்  என்றிட  வந்திடுவாயே
அழுத நதியே ஆண்மைவிலகே
தொளுதவன் கையில் எழுந்திடுவாயே
கல்லிடும் குன்றே  கரிமலை தோடே
சொல்லும் சரணத்தில் கிடைதிடுவையே
ஆளைவட்ட சேனாதிபதியே
அடிமைகள் எங்களை வாலவைப்பாயே

கோட்டை படியே கோமள வடிவே
நாட்டமெல்லாம் உந்தன் மடியே
பாச்ம குலமே பகவதி மகனே
அஷ்டயோகமும் நீதான் எமக்கே
மாளிகபுரமே மங்கள வடிவே
காநிகைஎல்லாம் எங்கள் மனமே
கும்பலதொடே குலவளிபாடே
உண்பலத்தாலே வலுகிரோமே

அச்சன் கோவில் அரசன் நீயே
இச்சைகொண்டோம் உந்தன் மேலே
ஆரியங்காவு பெரியலந்திரையே
 ஓரிடம்வேண்டும்  உந்தன் அடியில்
குலத்துபுலையில் தவழும் கநீயே
ஆளைக்கும்போதே அபயம் தருக்க
எரிமேலி வாழும் ஏகாந்த வாசா
எமபயம் தனை எரித்திடுவீடுக




வாவரின் தோழா வன்புலிவாச
வறுமை திற விரைந்தே வருக
கடுத்த்சாமியே கற்பூர ஒளியே
எடுத்தகாரியத்தில் நீயே நிறைக்க
சபரிபீடமே சந்தனருபாமே
தவறு செய்யாத மனநிளைதருக
அப்பாச்சி மேடே இப்பச்சி குழியே
எப்போதும் எம்மை அனத்தருல்வாயே

சந்தனவிரும்பும் சன்முகநேச
வந்தனம் செய்யும் வக்கினைதருக
இருமுடிவிரும்பும் ஈசனின் மைந்த
பலப்படி உயர பக்குவம் தருக்க
கற்புரபிரியனே கனபதிநேச
பாதகமலங்கள் பரியுடன் தருக்க
கதளிபலமாய் கனியும் தேவா
சித்ரா மனமே சடுதில் தருக்க


இருமுடி கட்டில் கலக்கும் தேவ
பற்றையருக்கும் பதமலர் தருக்க
காணி பொன்னில் கரையும் தேவ
கழகமில்லா வளமே தருக்க
முத்திரைகாய்யில் புலரும் இறைவா
முகத்தில் உன்பெயர் மட்டுமே தருக்க
நெய்யில் உருகும் நெடுமான் மகனே
கை அதைபிடித்து கரைசெர்பாயே

அன்னதானமே ஆருயிர் மருந்தே
பொன்னும் பொருளையும் வலமாக தருக்க
கண்ணிசாமியே கருணை மொழியே
என்னும் செயலில் ஜெயமாய் வருக
துளசியில் வாழும் துய்மநிமார்பா
சிந்தனையி கசடு சேராது காக்க
கற்பூர ஒளியே கானகமருந்தே
தப்பாமல் எம்மைகாத்திடுவாயே

மார்கழியில் மலரும்  மாமலைவாச
பொய்யும் புரட்டும் நிக்கிடுவாயே
பொங்கலில் மலரும் திங்கள் ஒளியே
பொறுத்திடும் குணமது எடுத்தேதருக
பனிமலை சிறந்த பரம தாலே
பணியும் குணமது பண்புடன் தருக்க
சபரியில் தவழும் சர்வேஸ்வரனே
உயிர்களை ஆனைக்கும் உள்ளமே தருக்க

மோகினி பெற்ற  மாதவன் முனியே
மோகம் அறுப்பது உந்தன் வேலை
அரியவன் பெற்ற பெரியவன் நீயே
ஆசை அறுப்பது உந்தன் வேலை
வாபரனை அணைத்த வன்புலிநேச
  விளவினை அறுப்பது உந்தன் வேலை
பந்தள வளந்த பலவிநேத
பாவம் பொறுப்பது உந்தன்பாதம்

பகவான் வடிவே பகவதி மடியே
பனிமலை கடந்திட பணிவுடன் வருக
தேவன் வடிவே தேவிமடியே
தேகபலமத்தை திடமாய் தருக்க
கட்டும் கட்டே கட்டின் நிறையே
கரிமலை கடந்திட கனிவுடன் வருக
பதினெட்டு படியே பரமனின் உருவே
பாதபலதனை பலமாய் தருக்க

சர்குருவடிவே சந்தன சிலையே
சபரி கடந்திட சடுதியில் வருக
அரனார் ஒளியே ஆதிசிவன் நிறையே
சரணம் சொல்லும் வாக்கில் நிறைக்க
நீல நிற ஆடை சூடும் கனியே
நீலிமலை கடந்திட விரைவா வருக
மாலைவிளக்கே மங்கள முடியே
விரதம் காக்க விரைந்தே வருக

மூவாறு படியே நாவார சொன்னோம்
பாதார பிந்தம் படியென தருவாய்
கற்பூர ஆழியை கனியுடன் சொன்னோம்
பொற்பாதம் இரண்டும் இப்போதே வேண்டும்
கொடிமரதனை கதியென கொண்டோம்
அடிகள் இரண்டும் அவசியம் தருக்க
சன்னதி நடையே  சகலமும் என்றோம்
நிம்மதி நிம்மதி தந்தருள்வாயே

குருவின் குருவே அய்யப்ப  உன் திருவடி சரணம் அய்யப்ப


0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo