Monday, May 10, 2010

வேலன்:-டெக்ஸ்ட் பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற - படிக்க

படிக்கும் பாடத்தை படிப்பதை விட காதால் கேட்டு பின்பு படித்தால் மனதில் சீக்கிரம் படியும்.மாணவர்களுக்கு இதுமிகவும் பயன்உள்ளதாகும். .நம்மிடம் டெக்ஸ்ட்,பிடிஎப் மற்றும் எச்.டி.எம்.எல். பைல்களை படித்துகாட்ட,ஆடியோ பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.3 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் விரும்பினால் இதில்உள்ள டெக்ஸ்டையே படிக்க சொல்லிக்கேட்கலாம்.
வித்தியாசமான குரல் வேண்டுபவர்கள் இதில் நான்கு பேர் குரல்களை பதிவேற்றி உள்ளார்கள். இதில் யார் குரலைவேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புதிய பைலினை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இருந்தும ்தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல் படிக்கும் டெக்ஸ்டின் பிட்ச்,படிக்கும் வேகம்,ஒலி ஆகியவற்றை தேவையான அளவு நீங்களே இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல் பைல்களை பிரிக்கும் வசதியும் இதில் உள்ளது . கேபி அளவில் பைல்களை பிரித்து தேவையான இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள டெக்ஸ்டை மொத்தமாகவோ - கர்சர் தேர்வுசெய்த இடத்தில்  இருந்தோ படிக்க கேட்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.பிளே மற்றும் ஸ்டாப் பட்டன்களும் உள்ளது்.
இதே டெக்ஸ்டையே நாம் ஆடியோ பைல்களாகவும சேமித்து வைத்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Speak to File கிளிக் செய்ய கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.சேமிக்க தேவையான இடத்தை பூர்த்தி செய்யுங்கள். பின்னர் ஓ.கே. கொடுங்கள். 
உங்கள் டெக்ஸ்டின் ஆடியோ பைலானது நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் இருப்பதை காணலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்
.வாழ்க வளமுடன்,

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo