Saturday, May 1, 2010

பேசும் கால்குலேட்டர்



நமது குழந்தைகளுக்கு நாம் விளையாட வீடியோகேம்ஸ்
வாங்கித்தருவோம். ஆனால் அதை தவிர்த்து அவர்களுக்கு
அறிவு வளர இந்த கால்குலேட்டரை பதிவிறக்கி
அவர்களுக்கு கொடுத்தால் கணித அறிவு சிறிதாவது உயரும்
என்பது நிச்சயம் இது 3 முதல் 7 வயது வரை உள்ள குழந்தை
களுக்கான கால் குலேட்டர்.

இதில் நாம் எண்களை தட்டச்சுசெய்கையில் அது அந்தஎண் பற்றி
குறிப்பிடும். அதைப்போல்எண்குறியிடுகளை சொல்வதுமட்டும் அல்லாதுவிடையையும்சொல்லும். ஆங்கிலத்துடன் சேர்த்து
மேலும்இதர மொழிகள் அதில் நான்கு உள்ளன.

முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.

இப்போது இதை டவுண்லோடு செய்து இன்ஸ்டால்
செய்ததும் உங்கள் கால் குலேட்டரானது டாக்ஸ்க்பாரில்
அமர்ந்துகொள்ளும்.



இதில் நாம் கணக்கிணை செய்கையில் அதில் உள்ள
விண்டோவில் எண்கள் ஒலியுடன் வரும். = அழுத்த
விடை கீழே உள்ள விண்டோவில் வரும்.



இதில் Speak Question,Speak Answer,Copy Question,Paste Question,
Question History & Paste answer and question ஆகிய வசதிகள்
இதில் உளளது.


இதில் உள்ள Preferences கிளிக் செய்வதால் மேற்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். அதில் குறிப்பிட்டுள்ள ரேடியோ பட்டனை
கிளிக் செய்து உங்களுக்கு தேவையான வசதிகளை பெறலாம்.
அதன் கீழே Conversions உள்ளது. அதில் உள்ள சிறிய அம்புக்
குறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.


இதில் எந்த அளவினை எந்த அளவிற்கு மாற்ற வேண்டுமோ
அந்த அளவினை மாற்றி காணலாம். இந்த சாப்ட்வேர்
3 எம்.பி. அளவிற்குதான் வரும். பயன்படுத்தி பாருங்கள்.
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo