Saturday, May 1, 2010

அனைத்துவிதமான பார்மட் போட்டாக்களையும் திருத்த

சில போட்டோக்கள் சில சாப்ட்வேர்களில்தான் ஓப்பன ஆகும். நம்மிடம் PSD பைல் இருக்குமானால் அது போட்டோஷாப் பில் தான் ஓப்பன :ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேரில் PSD உட்பட அனைத்து பார்மெட் படங்களும் ஓப்பன ஆகின்றது.2 எம்.பி்.க்கும் குறைவான இந்த சாப்ட் வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள்கணிணியில் இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் சின்ன சின்ன மெனுக்கள் வரிசையாக இருக்கும்.அதில் உள்ள 13 ஆவது மெனுவினை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதிலிருந்து புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்த புகைபடத்தின் போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் பார்க்க தம்ப்நெயில் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த மெனு கிளிக் செய்ய உங்களுக்கு படம் கீழ்கண்டவாறு வரும்.
இதிலிருந்து தேவையான புகைப்படங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.மேலும் படத்தை திருப்பும் வசதியும் உள்ளது. அதுபோல் அதை ரீ-டச்சிங் செய்யும் வசதி உள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு.
இதில் உள்ள ஒன்பதாவது மெனுவினை கிளிக் செய்ய உங்களுக்கு இடதுபுறம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள செட்டிங்ஸ் டேப்பில் படத்தின் அளவு மாற்றுதல் - கண்ணாடி பிம்பம் கொண்டுவருதல் தேவையான அளவு வெட்டுதல் போன்ற டூல்கள் உள்ளது.இதற்கு அடுத்து உள்ள டேப்பில் படத்தின் ஓளி அளவினை மாற்றும் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போல் இதில் பில்டர் வசதி உள்ளது .இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.படத்தில் வேண்டிய பில்டர் வசதி செய்து ப்ரிவியு பார்தது கொண்டு தேவைபட்டால் சேமிதது - பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
 சாதாரண படம் கீழே:-
பில்டர் எபெக்ட் கொடுத்தபின் வந்த புகைப்படம் கீழே:-
போட்டோக்களை பற்றிய பதிவுகள் கிணறு தோண்ட பூதம் வந்ததுபோல் வந்துகொண்டே இருக்கின்றது.தற்சமயம் பத்துக்கும் மேற்பட்ட சாப்ட்வேர்கள் போட்டோக்களை பற்றி இருக்கின்றது.அவைகளையும் இப்போழுதே போடுவதா - இல்லை சிறிது கால இடைவெளிவிட்டு போடுவதா என்று புரியவில்லை.பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.கருத்துரையில் வரும் உங்கள் கருத்துக்களை வைத்து போட்டோக்கள் பற்றிய பதிவினை தொடர்கின்றேன்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo