Saturday, May 1, 2010

பி.டி.எப்.பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க



பி.டி.எப். பைல்கள் நாம் உபயோகப்படுத்துவோம்.

மற்றவர்களுக்கும் தருவோம். அனைவரும்

பார்க்கும் பைல்கள் என்றால் ஓ.கே. ஆனால்

முக்கியமான பைல்கள் என்றால்..?

முக்கியமான பைல்களை பி.டி.எப்.பாக

மாற்றி அதை பாஸ்வேர்ட் கொடுத்து

சேமித்துவைத்துக்கொள்ளலாம். தேவை

படுபவர்களுக்கு அதை அனுப்பி பின்னர்

தனியே பாஸ்வேர்டை மெயிலிலோ -

போனிலோ தரலாம். இதனால் நமது

பைல்களின் ரகசியம் காப்பாற்றபடும்.

இனி பி.டி.எப்.பைலை எப்படி பாஸ்வேர்ட்

கொடுத்து பாதுகாக்கலாம்என பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் சென்று பி.டி.எப். பைலை

டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

நீங்கள் மாற்ற விரும்பும் பைலை திறந்து

கொள்ளுங்கள். பிரிண்ட் கட்டளை கொடுங்கள்.

உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன்

ஆகும். அதில் உள்ள Primo PDF கிளிக்

செய்யுங்கள்.




இதில் உள்ள ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Document Properties


எதிரில் உள்ள Change கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.



இறுதியாக ஓ.கே . கொடுங்கள்.மீண்டும் கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.


இதிலும் விவரங்கள் பூர்த்தி செய்து ஓகே கொடுங்கள்.

இறுதியாக உங்களுக்கு பி.டி.எப் . பைல் ஓப்பன் ஆகி

இந்த விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.



நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை அதில் கொடுத்து

ஓ.கே . கொடுங்கள். நீங்கள் தயார் செய்த பி.டி.எப்.

பைல் ஓப்பன் ஆவதை காண்பீர்கள்.

இதன் செயல்முறை விளக்கத்தை பவர்பாயிண்ட்

மூலம் விளக்கியுள்ளேன். அதை காண


பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo