Saturday, May 1, 2010

வீடியோ கன்வட்டர்


ULTRA MOBILE 3 GP VIDEO CONVERTER

இப்போது செல்போன் இல்லாத மனிதர்களே

இல்லை என்று சொல்லலாம். ஆயிரம் ரூபாய் முதல்

முப்பதாயிரம் வரை அவரவர் வசதிக்கு செல்போன்

வைத்துள்ளார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு

பிடித்த பாடல்களை பதிவிறக்கம் செய்ய அவதிப்

படுவார்கள். அவர்களுக்காகவே இந்த இலவச

சாப்ட்வேர் உள்ளது. இதில் உங்களிடம் உள்ள

AVI,MPEG,WMV,MOV,RM ஆகிய பைல்களை 3GP

பைல்களாக சுலபமாக மாற்றிவிடலாம். 3 GP

பைல்களை உங்கள் செல்போனில் சுலபமாக

பதிவேற்றி படங்களை பார்த்து மகிழலாம்.





முதலில் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து

கணிணியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் இந்த சாப்ட்வேரை திறந்தவுடன் அதில்

உள்ள Try கிளிக் செய்து உள் நுழையுங்கள்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் மேல்புறம் பார்த்தீரகளேயானல் இந்த மாதிரி தோன்றும்.



 இதில் முதலில் உள்ள் Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.

உங்கள் வீடியோ பைல் உள்ள டிரைவை தேர்ந்தேடுங்கள்.





வீடியோ பைல்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்ய அதில்

உள்ள கட்டங்களில் பைல்கள் வந்து அமர்ந்துகொள்ளும்.


நீங்கள் தேர்வு செய்த வீடியோவை Preview பார்க்க வேண்டுமா?

நீங்கள் வீடியோவை டபுள் கிளிக் செய்யுங்கள்.பின் இடது

மூலையில் உள்ள Play பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு

படம் ஓட ஆரம்பிக்கும்.



அடுத்து நீங்கள் 3 GP யாக மாற்றம் செய்த பைல்களை சேமித்து

வைக்க ஏதாவது ஒரு டிரைவை தேர்ந்தேடுங்கள் .( டிரைவ்

நீங்கள் தேர்ந்தேடுக்கவில்லையென்றால் அந்த படம் ஆனது

சி-டிரைவில் அமர்ந்துகொள்ளும். சி-டிரைவில் அதிகபடியான

பைல்கள் சேமிப்பது கணிணியின் வேகத்தை மட்டுப்படுத்தும்)




உங்களுக்கு தேவையான டிரைவ் தேர்ந்தேடுத்து ஓகே 

கொடுங்கள். அடுத்து உள்ளது Profile. இதில் உங்களிடம்

உள்ள பைல் எது - நீங்கள் மாற்ற விரும்பும் பைல்வகை

களை இங்கு தேர்ந்தெடுக்கலாம்.


அடுத்து உள்ள Settings. இதில் உள்ள Video Quality யில்


 உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.

அடுத்தது Resulation. இதில் உங்களுக்கு வேண்டிய

பிரேம் அளவை தேர்ந்தேடுக்கலாம்.



அடுத்து Audio Settings. இதிலும் உங்களுக்கு விருப்பமானதை

தேர்வுசெய்து கொள்ளுங்கள். 



ஆடியோ செட்டிங்ஸ் கீழ் உள்ளது Volume கன்ட்ரோல்.

இதன் மூலம் நீங்கள் விரும்பிய ஒலியை அதிக

படுத்திக்கொள்ளலாம். 



இவை அனைத்தும் முடிந்ததும் நீங்கள் மேலே உள்ள

Convert கிளிக் செய்யுங்கள். உங்கள் வீடியோவானது

Convert ஆக ஆரம்பிக்கும். இப்போது கீழே உள்ளவாறு


 உங்கள் வீடியோ கன்வர்ட் ஆக ஆரம்பிக்கும். 

வீடியோ கன்வர்ட் ஆகும் பணிணை அது முடிந்ததும்

நீங்கள் விருப்பப்பட்டால் கணிணியை ஆப் செய்யும்

 வசதியும் இதில் உள்ளது. உங்கள் விருப்பமான

வீடியோ பதிவு செய்து முடிந்ததும் உங்களுக்கு இந்த

மாதிரி விண்டோதோன்றும்.



 அதன் பின் நீங்கள் Output Folder சென்று அங்குள்ள

வீடியோ பதிவை உங்கள் செல்போனுக்கு மாற்றிக்

கொள்ளுங்கள்.  இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்கமால்

ஓட்டுப்போடுங்கள்.


வாழ்க வளமுடன்,

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo