Saturday, May 1, 2010

வேலன்:-புகைப்படத்தில் டிவிடி தயாரிக்க


நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். ஒவ்வோரு புகைப்படமும் ஒவ்வோரு சூழ்நிலையில் எடுத்திருப்போம். அந்த புகைப்படங்களை பெயரிட்டு பொருத்தமான பாடல்கள் சேர்த்து டிவிடியாக மாற்றி வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அதுபோல் போட்டோ ஸ்டுடியோ வைத்திரு்க்கும் நண்பர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி புகைப்டங்களை டிவிடி ஆல்பமாக மாற்றிக்கொடுக்கலாம்.இந்த சாப்ட்வேர் 25 எம்.பி.கொள்ளவு.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி நமது கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் புகைப்படம் இருக்கும் டிரைவை தேர்வுசெய்ததும் மேல்புறம் அனைத்து புகைப்படங்களும் தெரியவரும்.
இப்போது கீழ்புறம் புதிய ஆல்பம் ஒன்றை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.

புதிய ஆல்பத்திற்கு பொருத்தமான பெயர் வைத்து ஒ.கே.தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இப்போது Album Photo என்பதனை தேர்வு செய்து உங்கள் புகைப்படங்களை Addசெய்து கொள்ளவும். 
புகைப்படங்களை தேர்வு செய்துவிட்டோம். இப்பொது அதற்கு தேவையான பாடல்களை சேர்க்க வேண்டாமா..? Transition & Music கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.இதில் உள்ள ADD கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்யுங்கள்.
சிலருக்கு பாடல் பிடிக்கும். சிலருக்கு இசை மட்டும் பிடிக்கும். சிலருக்கு பாடலில் சில வரிகள் பிடிக்கும் .உங்கள் விருப்பம் ஏதுவேண்டுமானாலும் இதில் உள்ள டிரிம் கிளிக் செய்து தேவையான பகுதியை மட்டும் தேர்வு செய்யலாம்.
இப்போது வலதுபுறம் ஆல்பம் செட்டிங்ஸ் இருக்கும்.அதில் உள்ள அளவுகளை தேவையான படி செட் செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
அதைப்போலவே ஒரு படத்திற்கும் இன்னும் ஒரு படத்திற்கும் இடையில் எபெக்ட் களை சேர்க்கலாம்.அதனையும் நமது விருப்பபடி சேர்க்கலாம். இல்லை அதன் விருப்பத்திற்கு விட்டுவிடலாம்.நமது விருப்பபடி சேர்ப்பதானால் எபெக்ட்டை தேர்வு செய்து இரண்டு படங்களுக் குஇடையில் இழுத்துவந்து விடவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து ஆல்பம் தீம். இதில் வேண்டிய மாடலை தேர்வு செய்யலாம். அதைப்போலவே ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் வேண்டிய வார்த்தைகளை இதில சேர்க்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக ஆல்பம் ப்ரிவியு. இதை கிளிக் செய்து நாம் நம்முடைய படத்தை ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம். மாற்றங்கள் செய்யவேண்டுமானால் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படங்கள் ரெடி. இப்போது மீண்டும் மேலே வாருங்கள். இதுவரையில் நாம் 1.Organize Photos தான் பார்த்தோம். இப்போது 2.Choose Menus பார்க்கலாம். அதை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான மெனுவினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அதைப்போலவே நாம் விரும்பிய புகைப்படத்தையும் பேக்கிரவுண்ட்டாக வைத்துக்கொள்ளலாம்.இனி மூன்றாவதாக உள்ள Burn Disc கிளிக்செய்யுங்கள்.அதில் உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மட்டை கிளிக் செய்யுங்கள்.
இப்போது கீழே செட்டிங்ஸ் இருக்கும். தேவையான செட்டிங்குகளை அமைத்து்க்கொள்ளுங்கள்.
இறுதியாக Burn Now கிளிக் செய்து உங்கள் டிவிடியை தயார் செய்து கொள்ளுங்கள்.இனி நீங்க்ளே உங்கள் புகைப்படங்களில் டிவிடி ஆல்பம் சுலபமாக தயாரிப்பீர்கள் இல்லையா...

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo