Friday, November 19, 2010

ayyappan songs (tamil )



பிள்ளையார்

உமாபதியே உலகம் என்றாய். ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்.

இவர் நம்ம பிள்ளையார்..


பிள்ளையார் பிள்ளையார்  பெருமைவாய்ந்த  பிள்ளையார்
ஆற்றங்கரை  அருகிலும் அரசமரத்து  நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார்  வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார் - நேரும்
துன்பம் யாயுமே தீர்த்து வைக்கும் பிள்ளையார்
மஞ்சளால செய்யணும்  மண்ணினால செய்யணும்
ஜந்து  தெழுத்து மந்திரத்தை  நெஞ்சில்  ஆழ்த்தும்  பிள்ளையார்
அவள் பொறி  கடலையும்  அரிசி மாவு  கொளுகட்டையும்
கவலையின்றி  தின்னுவர் கவலைகளை போக்குவர்
கலியுகத்தின் விந்தைதனை காணவேண்டி அனுதினம்
எலியின்  மீது ஏறியே  இஷ்டம்  போல  சுற்றுவர்

தந்தனதாம்




தந்தனதாம்  பாட்டுபாடி  கன்னிசாமி  -நாங்க
திந்தகதேம்  ஆட்டமாடி துள்ளுவோம்  சாமி  -2
கந்தசாமி  தம்பி நம்ம  சொந்தசாமி
நம் சிந்தனயில்  வந்திடுவார்  ஜய்யப்ப  சாமி

சரணகோஷம்  போட்டுவிட்டால்  ஜய்யப்ப  சாமி
பரவசம் கொண்டிடுவர்  ஜய்யப்ப  சாமி
எரிமேனி  பேட்டைதுள்ளி  வந்தவர்க்கெல்லாம்
அருள்  வழியை காட்ட வந்தார் ஜய்யப்ப  சாமி

குலத்து புழையில் குடியிருக்கும்   ஜய்யப்ப  சாமி
நம் பிழைகளை பொறுத்திடுவர்  ஜய்யப்ப  சாமி
அச்சங்கோவில்  ஆண்டவனம் ஜய்யப்ப  சாமி
ஆரியங்காவு  அய்யவம்  ஜய்யப்ப  சாமி

அழகு  மலை  சபரியிலே  ஜய்யப்ப  சாமி
எழிலுடனே  காட்சிதந்தார் என்  அப்பா  சாமி
ஏழுலகம் ஆட்சி செய்வர்  என்  அப்பா  சாமி
குவும் வினை  திர்திடுவர்  என்  அப்பா  சாமி

வட்ட நெல்ல

வட்ட நெல்ல பொட்டு வைத்து  வடிவழக  இருப்பவனே
வரிபுலி  வாகனனே அய்யாப்பா  வந்து  உன்ன  பாக்கவறோம்  மெய்யப்ப

எத்தனையே  மலையிருக்க  அத்தனையும் தான்  கடந்து
சபரி மலை ஆண்டவனே  அய்யாப்பா
சந்நியசயாய்  நின்றவனே மெய்யப்ப

உச்சிமலை தனிலே  ஒய்யாரமாய் அமர்ந்தவனே
பச்சைமால்  வடிவழக  அய்யாப்பா
பரதேசியாய்  நங்கவறோம்  மெய்யப்ப

கண்ணனும் சிவனும் சேர  கைதனிலே  பிறந்தவேனே
ஜய்யப்ப  தெய்வமான  ஜய்யப்ப
காந்தமல  ஜோதி  ஆனாய்  மெய்யப்ப

எரிமேனி பேட்டை துள்ளி பம்பையிலே  திர்த்தம்  ஆடி
நீலி மலை எத்ததிலே  ஜய்யப்ப
நிக்க வச்சி சொக்க வைப்பாய் மெய்யப்ப

கொடினடைய

கொடினடைய  கொடினடைய  போவது தென்ன இருமுடிய
கொடினடைய கொடினடைய  போவதெல்லாம் இருமுடித

கொட்டைபடியின் வழியே புகுந்து
போகும் பயணம்  சபரிக்கு  விருந்து 
காட்டுல  காட்டில  கட்டுமுடி
காவலுக்கு சாமி உண்டு சரணம் விழி

அடைமலையோ  கடுங்குளிரோ  நடப்பது  யாரு சாமிகள
அடைமலையோ  கடுங்குளிரோ  நடப்பது  எல்லை சாமிகளே
அலுதமேடு  அலறவைதலும் 
உச்சிகரிமலை  உரிடிவிட்டலும்
ஜய்யான  குப்பிட்டு   சரணத்தில
 பத்திரமா செர்திடுவர்  பம்பையில

நீலிமல நெடிய மல  ஏறியது  யாரால
நீலிமல நெடிய மல  ஏறியது அய்யநல

சபரி பீடம் தாண்டினவேகம் 
சன்னதிவசலில்  தரிசன கோலம்
கண்ணிலே அய்யனின் போன்னுமுகம் 
இனிமேல் யாருக்குவேண்டும்  வரம்


சரணங்களே சரணங்களே  சமிபதம் சரணங்களே


கன்னிசாமி கவனம் சாமி

கன்னிசாமி கவனம் சாமி
கார்த்திகையில் மாலை போட்ட கன்னிசாமி
மார்கழியில் கட்டும் தாங்கி கன்னிசாமி
 மனிகன்ன்டனை பார்கபோறாய்  கன்னிசாமி

அச்சகோவில் ஆண்டவனை கன்னிசாமி
 அச்சம்மின்றி தரிசிப்பாய் கன்னிசாமி
ஆரியங்காவு  ஈசனை  கன்னிசாமி
  ஆனந்தமாய்  தரிசிப்பாய் கன்னிசாமி

எரிமேனி நாதனைய  கன்னிசாமி 
ஏகாந்தமாய் தரிசிப்பாய் கன்னிசாமி
காளைகட்டி நாதனையே கன்னிசாமி
கண்குலீர தரிசிபாய் கன்னிசாமி

அழுத நதியிலே கன்னிசாமி
  ஆனந்தமாய் நீராட்டு  கன்னிசாமி
அழுத்தாமல ஏற்ரதிலே  கன்னிசாமி
அழுதுகொண்டு  ஏறுறையே கன்னிசாமி

கரிமலை ஏற்ரதிலே கன்னிசாமி
 கண்ணீரை சிந்துரையே  கன்னிசாமி
பம்பா நதியிலே கன்னிசாமி
பாவங்களை போக்கிடுவாய் கன்னிசாமி

நீலி மலை ஏற்ரதிலே கன்னிசாமி
நிக்காம ஏறவேண்டும் கன்னிசாமி
சபரி பிடதையே கன்னிசாமி
 சந்தேஷமாக காணவேண்டும் கன்னிசாமி

சரம் குன்றியளிநேலே  கன்னிசாமி
அம்புசரம் இடவேண்டும் கன்னிசாமி
18 படுயிலே கன்னிசாமி
பதறாமல் ஏறவேண்டும் கன்னிசாமி

கருப்பு சாமியே கன்னிசாமி
கலங்காமல் தரிசிப்பாய் கன்னிசாமி
காந்தமல ஜோதியே கன்னிசாமி
கண்குளிர தரிசிப்பாய் கன்னிசாமி

 தள்ளாடி தள்ளாடி

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து  நாங்க
சபரிமளைநோக்கிய  வந்தொமைய்யா

கார்த்திகை நல்லநாளில்  மாலையும் போட்டுக்கிட்டு
காலையிலும் மாலையிலும்  சரணங்கள் சொல்லிக்கிட்டு

இருமுடியை கட்ட வேண்டி  இன்பமாக பாடிகிட்டு
ஈசன்மகனே  உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு

பேட்டைகளும் துள்ளிக்கிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
 நாங் வேடிக்கையாக  வந்தொம்மைய்யா

காணாத காட்ச்சி  எல்லாம் கன்னாரா  கண்டுகிட்டு
காடு மலையெல்லாம்  கால் நடையா  நடந்துக்கிட்டு

பம்பையிலே  குளித்துவிட்டு  பாவங்களை துளைத்துவிட்டி
பக்தர்களெல்லாம்  குடிநின்று  பஜனைகன் பாடிகிட்டு

படியேறி போகும்போது பக்கம் ஒரு காய் உடைத்து
பாலனே உன்னை பார்த்து பார்த்து சொக்கிகிட்டு 

நெய்யிலே குளிக்கும் போது நேரிலே பார்த்துக்கிட்டி
ஜய்யப்ப  சரணம்  என்று அற்பெடுது  பாடிக்கிட்டி

சுழிபோட்டு


சுழிபோட்டு  செயலேதுவும்  தொடங்கு  பிள்ளையார்
சுழிபோட்டு  செயலேதுவும்  தொடங்கு

அதன் துனையலே சுகம் குடும் தொடர்ந்து
அழியாத பெரும் செல்வம்  அவனே - தில்லை
ஆனந்த  குட்டத்தின் மகனே

வழியின்றி வேலன் அவன் திகைத்தான்
குறவள்ளி அவள் கைபிடிக்க துடித்தான்

மறந்துவிட்ட அண்ணனையே  நினைத்தான்
மறு கணத்தினிலே  மகில்சியிலே திகைத்தான்

கேட்டதெல்லாம்  கொடுத்துவரும்  பிள்ளை
அவன தீர்த்தி செல்ல வார்த்தைகளேயில்லை இல்லை

ஆட்டம் மென்ன பாட்டம் மென்ன அனைத்தும்
அவன் நாட்டம் இன்றி எவ்வாறு நடக்கும்

தும்பிக்கை நம்பிக்கை  கொடுக்கும் -வரும்
துன்பம்யவும் முன்னின்று தடுக்கும்

அன்ஜெயின்  ஒருபதம் எடுக்கும்  -அவன்
அசைந்துவர  அருள் மணிகள் ஒலிக்கும்

சரணமப்பா





சரணமப்பா  சரணமப்பா சாமியே
 சாமியப்ப சரணமப்பா சாமியே

கார்த்திகையில் மாலையிட்டோம்

நேர்த்தியுடன் மண்டலமும்
நினையுடனே விரதம்ப்பா சாமியே 
தினம் இருந்துவந்தோம் உன்னைக்கான சாமியே

காலைமாலை வேலையெல்லாம் கருத்துடனே
புஜையப்பா கலியுகத்து தெய்வமே  சாமியே
நாங்க கானதினம் வேண்டிநேமே   சாமியே

குருவருள நம்பிகிட்டு இருமுடியை ஏந்திக்கிட்டு 
ஒருமனச வந்தோமே சாமியே
உன் திருமுகத்த பாக்கத்தானே சாமியே

                                                                                     சரணமப்பா

எரிமேலி  பெட்டியிலே அருமையாக துள்ளி ஆடி

திந்தகத்தோம் கொசம்யிட்டோம் சாமியே -அட
ஆனந்த  வேஷம் மீட்டோம் சாமியே

வேட்டுசத்தம் கேக்கையிலே காட்டுக்குள்ள பாக்கையிலே 
கொட்டைவவர்  நடந்து சென்றார் சாமியே
அந்த தரிசனத்த  என்னசொல்ல சாமியே

போருர்தொடு காட்டு வழி தேவதைகள் குட்டதுக்கு
 பொறியை போட்டு வணங்கிவந்தோம்  சாமியே
அங்கே புதிய காற்று விசுதைய சாமியே
                                                                                          சரணமப்பா

அழுகை நதிகுளிக்கையிலே  பளையவினை 
களிவிபுட்டோம்    பழுது என்று  எதுவும்யில்ல சாமியே -அட
பக்திவந்து செர்ந்ததப்ப  சாமியே

கல்லெடுத்து மேட்டினிலே எரிந்தபோது எங்களுக்கு
 ராமாயண  நினைப்புவன்தது சாமியே
அணைகட்டி அணில்  நடக்கும் சாமியே

கரிமலை ஏற்ரதிலே காலும் கையும்   நினைப்பு மறந்து
காந்தமலை  நினைச்சு வந்தோம் சாமியே
கரிமலையின் உச்சியில் நின்றோம் சாமியே 

                                                                                    சரணமப்பா

ஆனவட்டம் புளிவட்டம் காட்டுக்குள்ள அத்தனையும்

  அய்யன் சொன்ன திட்டவட்டம்  சாமியே
விரத சட்டதிட்டம் அவன் போட்டது சாமியே

பம்பை நதி திரத்திலே  பந்தளத்து அய்யனுக்கு
 பம்பை விளக்கு எத்திவச்சொம் சாமியே
அந்தபாலனுக்கு தீர்த்தி செய்தோம் சாமியே

நிலிமலை  சாரலிலே பம்பை நதி கரையிலே 
கண்ணிமுல கணபதிக்கு சாமியே 
நாங்க தோப்புகரணம் போட்டு வந்தோம் சாமியே

                                                                                         சரணமப்பா

நிலிமலை தாண்டி விட்டோம் சன்னிதானம்

பாத்துப்புட்டோம் நிசுமந்த பயனச்சி சாமியே
எங்க நெஞ்சமெல்லாம் நிரந்துபோச்சி சாமியே

சத்யமான  போன்னுபடிகள் 18 எரிவந்தோம்
சாஸ்தாவின் சன்னதிக்கு சாமியே
அந்த மகரதிபம் பார்திடதன் சாமியே

லோகத்திலே ஒரு கோலம் வானத்திலே ஒரு
கோலம்  நாணத்திலே திருகோலம் காட்டினாய்
மவுனத்தில புன்னகையை காட்டினான்
                                                                                சரணமப்பா

எங்ககருப்பசாமி





எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தன் அவன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

முன்கொண்டைகரன் அவன் முன்கொவகரன் அவன்

சந்தன போட்டுக்கற சபரிமலை காவல்காரன்
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

சடைமுடிகாரன் அவன் சாமிகளை காத்திடுவான்

சல்லடையை கட்டிவறான் சாஞ்சி சாஞ்சி ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


வில்லுபாட்டு பாடிவறான் விதவிதமா ஆடிவர

பந்தம் கையில் புடிச்சிவரன் பாடிவேட்டை ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


அச்சகொவில் ஆண்டவனுக்கு எதிராக இருப்பவராம்

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


காட்சியை  கட்டிவர கையருவ காட்டிரா

மிசையை முரிக்கிவரன் முச்சந்தில் நடந்து வரா

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


விள்ளளிவீரனுக்கு வீரமணிகண்டனுக்கு

இருமுடியை சுமக்கும் போது பாது காக்க வருபவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


கற்பூர ஆளிமுன்னே கடவுளாக நின்றிடுவார்

கருப்பு வெட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


எங்ககருப்ப  வார  எங்க கருப்பசாமி

கார்மேகம் போல்வர
அந்தாவர இந்தவர
நாகமல்லி கொண்டுவர
முன்கொவகாரன்வர
அருவலு தூக்கிவர
செவ்வது வசக்கரன்
வெள்ளி பிரம்பு கொண்டுவர
வேகமாக ஆடிவர
வேகமாக ஓடிவர
வட்டசட்டமாக வர
பம்பா நதி திரத்திலே
கருப்பன் வரும் வேளையிலே
பம்பா நதி குளிச்சுவரன்
கருப்பசாமி ஆடிவரன்
கரண்டளவு  தண்ணியிலே  
தள்ளிக்கொண்டு வாறனப்ப
முட்டியளவு தண்ணியிலே
முளிகிகொண்டுவரணப்ப
அரை அளவு தண்ணியிலே
துள்ளி கொண்டு ஓடிவர
கழுத்தளவு தண்ணியிலே
கருப்ப சாமி நிந்திவர
எங்க கருப்ப ஓடிவர
பம்பையிலே குளிச்சிவர
பங்காக வரனைய
அந்தவர இந்தவர
பெரியான வட்டம் வர
சிரியன வட்டம் வர
கரிமளையும் ஏறிவர
பகவதியை வணங்கிவர
 கரியிலதொடு வர
ஏலவங்க்கவல் கடந்து வர
முக்குளியை தண்டிவரன்
அழுத மேடி உச்சிவரா
அலுதையிலே குளிச்சிவர
காலைகட்டி தொட்டு வர
புங்கவனம் புகுந்து வர
எரிமேலி வாரானையா
வாவர் சாமி குட வர
உச்சந்தல கட்டிவர
புலியாட்டம் ராஜவர
சபரிமலை காவல் காரன்
ஆங்காரமாய் ஓடிவர
தமிழ் நாட்டு எல்லையிலே
தாண்டி தாண்டி வரனைய
செங்காட்ட கருப்பவர
தென்காசி சுடலை வர
ஆங்காரமாய் வரனையா
ஆவேசமாய் வரரையா
காவலாளி வாராராய்ய
பாபநாச கோட்டை குள்ளே
வனபெச்சி குடவர
எங்க கருப்ப சாமி
கருப்ப வர கருப்ப வர
ஆங்காரமாய் ஓடிவர
ஆவேசமாய் தேடிவர 



சபரிமலை போகபோறோம்

சபரிமலை போகபோறோம்  தன்னானே நானே
நாங்க சாஸ்தாவ பாக்க போறோம்   தில்லாலே லேலோ

அரசமர சாமிகிட்ட
நாங்க அய்யன் மாலை போடப்போறோம்
கால மாலை குளிக்க போறோம்
நாங்க கறுப்புவேட்டி கட்டப்போறோம்
இரவுபகல் முழிக்க போறோம்
நாங்க ஈசன் அடி நினைக்க போறோம்
உரை எல்லாம் அலைக்கப்போறோம்
நாங்க உயரப்பந்தால் போடப்போறோம் 


இருமுடிகள் கட்டுரைத்த
நாங்க திருவிலவ நடத்த  போறோம்
அய்யப்பமார் சாமி நாங்க
நாங்க பேரு அன்னதானம் நடத்தப்போறோம்
அய்யப்ப சாமி ஊர்வலத்தில
நாங்க திருவிளக்க என்திவறோம் 

காரு பஷ்சுனு எடுத்துகிட்டு
நாங்க கட்டுகள நிறைக்கப்போறோம்
300  பேர் சாமி நாங்க
நாங்க மோட்டார் வண்டியில ஏறப்போறோம்
ஆறுகுளம் எல்லாம் பாக்கபோறோம்
எல்லா ஆளையமும் பாக்கபோறோம்

பழனி மலசாமிகிட்ட
நாங்க பஞ்சாமிர்தம் வாங்கப்போறோம்
பெருவலியில் நடக்கப்போரோன்
நாங்க பேட்டைதுள்ளி ஆடப்போறோம்
பம்பையில முளுகப்போறோம் நாங்க
செய்த பாவங்கள கழுவப்போறோம்
பதினெட்டாம் படி ஏறப்போறோம்
நாங்க பக்தியில திளைக்கப் போறோம்


கடாலும் ராஜா நீ

கடாலும் ராஜா நீ  கரிமலை வாசநீ 
களையவும் தந்திட நீ வா
நாடாளும் பந்தணனும்  கொண்டாடும்  பாலன் நீ
எமையாளும் பெருமானே நீவா

கீதங்கள் இசைத்தொமே பாதங்கள்
பணிந்தோமே ஞனத்தின் ஒளியே நீவா
விராதங்கள் கொண்டோமே உன்புஜை
 கண்டோமே சாமியே சரணமப்ப

ஜெயமுண்டு பலமுண்டு  நலமுண்டு   வழமுண்டு
வில்லுண்டு வினையில்லையே  - எங்க
குருசாமி  அருள் உண்டு மணிகண்டன்  பாதம்முண்டு
தயமுண்டு பயம்மில்லையே  ( எங்க )

பணிஉண்டு துனிஉண்டு  அன்போடு முடிகொண்டு
நோப்புண்டு உனைகனவே  - நெய் கொண்டு
வரும் மாந்தர்  நெஞ்சினிலே நீ உண்டு
கண்மணியே பொன்மணியே நீவா

பக்திக் ஒரு அழுகாமலை முக்திக்கொரு அருள்மாமலை
சக்திக்கொரு  சபரிமலை தேவா
சித்தனருள் சித்த நீ  பித்தன் மகிழ் புத்ரா நீ
தத்துவத்தின்  மணியே நீ வா

காடுண்டு  மேடுண்டு கல்லுன்டு முல்லுண்டு
குடவரும் உன்துனைதனே
குணமுண்டு  தான முண்டு குளம்வாழ  வழியுண்டு
குடவரும்  உன்துணை தானே





 

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo