Thursday, September 9, 2010

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி

மே 12, 2010
விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான
முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம்
அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
படம் 1
விண்டோஸ் எக்ஸ்பியில் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிப்பது
பற்றிய பதிவுக்கு கிடைத்த ஆதரவும் சராசரியாக 100 மேற்பட்டவர்கள்
பின்னோட்டம் மூலமும் இமெயில் மூலமும் விண்டோஸ் 7 -ல்
இணைப்பு வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கேட்டிருந்தனர்.
உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட்
இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.
படம் 2
முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து
அதில் படம் 1-ல் காட்டியபடி system.ini என்று கொடுத்து ok
பொத்தானை அழுத்தியதும் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்.
இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள்
கொடுக்கப்பட்டிருக்கும்.  கோடிங் வரிகள் முடிந்ததும் படம் 2-ல்
காட்டியபடி நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ
காப்பி செய்து அங்கு சேர்க்கவும்.
page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு
கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும்.  இப்போது
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
யார் மனமும் புண்படாமல் பேசும் நல்லவர்கள்
எக்காலத்திலும் துன்பப்படமாட்டார்கள் அவர்களின்
பெயர்களையும் காலத்தால் அழிக்க முடியாது. 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மயில்களின் சரணாலயம் எது ?
2.2004 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ?
3.கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ?
4.பேஃபின் தீவு எங்கே உள்ளது ?
5.இந்திய தேசியக்கொடியில் இருக்கும் அசோகசக்கரத்தின்
  நிறம் என்ன ?
6.நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த ஆண்டு எது ?
7.பெங்களூரில் பெண்களுக்காக நடத்தப்படும்
  புத்தக்கடையின் பெயர் என்ன ?
8.சாதரன உப்பின் இரசாயன பெயர் என்ன ?
9.அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன ?
10.யஜூர் வேதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு ?
பதில்கள்:
1.விராலிமலை,2. ஏதன்ஸ், 3. கோபாலன்
4.ஆர்டிக்கடல்5.நீலம்,6. 1990, 7.ஸ்திரீலேகா,
8. சோடியம் குளோரைடு 9.கம்பர்,10.இரண்டு
இன்று மே 12 
பெயர் : புளோரன்ஸ் நைட்டிங்கேல்,
பிறந்த தேதி : மே 12, 1820
நவீன தாதியியல் முறையை உருவாக்கிய
இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட
வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர்.
தாதிகளுக்கான பயிற்சிப்பள்ளியையும் இவரே
முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய
காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.
இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo