Monday, September 6, 2010

புதிர்கள் சில:

  1. அதை வாங்கியதும் வெளிப்புறத்தை துாக்கி எறிந்து விட்டு உட்புறத்தை சமைக்கிறோம். சமைத்த பிறகோ வெளிப்புறத்தைச் சாப்பிட்டு விட்டு உட்புறத்தைத் துாக்கி எறிகிறோம். அது என்ன?
  2. வாங்கும் போதோ அது கருப்பு வண்ணத்தில் இருக்கிறது. பயன்படுத்தும் போதோ சிவப்பாகிறது. பயன்படுத்திய பிறகு துாக்கி எறியும் போதோ வெணமையாய் இருக்கிறது. அது என்ன?
  3. அதன் பெயர் சொன்னாலே உடைந்து காணாமல் போகும் மென்மையான அது என்ன?
  4. சென்னையில் உள்ள மருத்துவரின் தம்பி கோவையில் வழக்குரைஞராக இருக்கிறார். கோவையில் உள்ள அந்த வழக்குரைஞரின் அண்ணன் சென்னையில் மருத்துவராக இல்லை. இது எப்படி முடியும்?
  5. அது ஓடும் ஆனால் நடக்காது. தலை இருக்கும் அழாது படுக்கை இருக்கும் துாங்காது. எது?
  6. எல்லாவற்றுக்கும் தொடக்கம் எது? முடிவு எது?
  7. அந்த மின்சாரத் தொடர்வண்டி மணிக்கு 70 கி.மீ வேகத்தில் தென்மேற்குத் திசையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது காற்று வடகிழக்குத் திசையில் 70 க,மீ வேகத்தில் வீசுமானால், வெளிப்படும் புகை எந்தத் திசையில் செல்லும்?
  8. மூன்று அடி ஆழம் ஆறு அடி விட்டத்தில் ஒரு பள்ளம் தோண்டுகிறீர்கள். அதில் எவ்வளவு மணல் இருக்கும்.
  9. 25லிருந்து 5ஐ எத்தனை முறை கழிக்கலாம்?
  10. அந்தப் பெண்ணின் இரண்டு பையன்களும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் ஒரே மணிப் பொழுதில் பிறந்தவரகள். ஆனால் அவர்கள் இரட்டையர் அல்ல. இது எப்படி சாத்தியம்?
  11. 1985ல அவனது வயது 15. 1990ல் அவன் வயது 10. இது எப்படி சாத்தியம்?
  12. எப்போதுமே தவறாக உச்சரிக்கப் படும் சொல் எது?
  13. மேலே செல்லும் கீழே வரும். பக்க வாட்டில் நகராது. எது?
  14. கூடையிலே மூன்று பழங்கள். இரண்டை எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் எத்தனை இருக்கும்?
  15. அது உங்களுக்குச் சொந்தமானது. ஆனால் அதைப் பிறர்தான் அதிகம் பயன்படுத்தகிறார்கள். பிறர் அதிகம் பயன்படுத்துவதில் தான் உங்களுக்கும் மகிழ்ச்சி. அது என்ன?

    புதிர் விடைகள்:
    1. சோளம்.
    2. நிலக்கரி
    3. அமைதி (மெளனம்)
    4 சென்னையில் இருப்பவர் அக்கா
    5. நதி
    6. தொடக்கம் 'எ' முடிவு 'ம்'
    7. மின்சாரத் தொடர்வண்டியில் புகையா?
    8. மணலை எடுத்தால் தானே பள்ளம்? பள்ளத்தில் காற்றுத்தான் இருக்கும்.
    9. ஒரே ஒரு முறை. அதன் பிறகு அது 20 ஆகி விடுமல்லவா.
    10. அவளுக்குப் பிறந்த மூவர் (அல்லது நால்வரில்) இருவர் அவர்கள்.
    11.கிறித்துவிற்கு முன் சாத்தியம்
    12. 'தவறாக'
    13. வெப்பநிலை
    14. இரண்டு
    15.உங்கள் பெயர்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo