Wednesday, September 8, 2010

அடோப் பிளாஷ் முப்பரிமானத்தில்(3D) மிரட்ட வருகிறது.

அடோப் நிறுவனத்திலிருந்து வெளிவர இருக்கும் பிளாஷ் இனி
முப்ப்பரிமானத்தில் நம்மை மகிழ்விக்க இருக்கிறது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.

அடோப் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த எல்லா மென்பொருளும்
கிராபிக்ஸ்-ல் தனக்கென்று தனி இடம் பிடித்து சிறப்பான
மென்பொருளாக வலம் வருகிறது. அடோப் -ன் இந்த கூட்டனிக்கு
மேலும் பலம் சேர்க்கும் விதமாக அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு
ஆயத்தமாக முப்பரிமானத்தை (3D) அடோப் பிளாஷ் மென்பொருளில்
சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்க்காக 3D முப்பரிமான
கண்ணாடி ஒன்றும் வெளியீட இருக்கிறது. பிளாஷ்-ல் 3D ஐ
சேர்ப்பதால் மேலும் பல முப்பரிமான கலைஞர்கள் உருவாகலாம்.

இதற்காக வித்தியாசமான 3D பிளாஷ் பிளேயர் பிளக்ன்ஸ் வர
இருக்கிறது இதை நம் உலாவியில் சேர்த்தால் முப்பரிமான
இணையதளங்களை பிரம்மாண்டமாக 3D- யிலே பார்க்கலாம்.
2010 அக்டோபர் மாதம் 27ம் தேதி  காலை 11:00AM மணிக்கு
அடுத்த தலைமுறைக்கான 3D API  சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
அடோப் பிளாஷ் பொறியியல் வல்லுனர்களின் தலைமையில்
நடக்க இருக்கிறது.

வின்மணி சிந்தனை
அதிகம் கோபம் கொள்ளாமல் இருப்பவன் தனக்கு
மட்டுமல்ல அடுத்தவர் மனதுக்கும் துன்பம் கொடுப்பதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே பனி ஆறுகள் அதிகம் பாயும் பகுதி எது ?
 அதன் நீளம் என்ன ?
2.பாரீஸ் பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது ?
3.உலகின் முதல் மருத்துவ பத்திரிகையின் பெயர் என்ன ?
4.குழந்தைகள் ஆரோக்கியமாக வளர எந்த சத்து அதிகமாக
  தேவை ?
5.அசோக சக்கரவர்த்தி எத்தனை புத்த ஆலயங்களை கட்டினார்?
6.ஆபாசமாக எழுதுவது,பிறரை கேவலமாக பேசுவது பழக்கமாக
 கொண்டவர்களுக்கு என்ன பெயர் ?  
7.இந்தியாவின் முழு பரப்பளவு என்ன ?
8.ஃபிஜி நாட்டின் தலைநகரின் பெயர் என்ன ?
9.பாலிற்க்கு வெண்மை நிறம் கொடுக்கும் பொருள் எது ?
10.உலகப் புகழ்பெற்ற ராயல் அகடமியின் முதல் தலைவர் யார்?
பதில்கள்:
1.இமயமலை, 2.கி.பி.1200, 3.மெடிசினா குரிஸோ,
4.புரோட்டீன்,5.84,000 கோயில்கள், 6.ஸ்கேவஞ்சர்,
7.3,2,87263 ச.கி.மீ, 8.சுவா,9.காரோட்டின்,10.ஜோஸ்வா
ரெய்னால்ட்ஸ்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மரங்களிளே மிக வேகமாக வளரும் மரம் எது?
2.இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன ?
3.உலகத்திலே அதிக உயரயத்தில் உள்ள சாலை எது ?
4.விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி யார் ?
5.பெண்கள் விடுதலை இயக்கத்தின் பெயர் என்ன ?
6.அலெக்ஸாண்டர் எப்போது இறந்தார் ?  
7.ஒரு நாட்டின் கடல் மைலின் தூரம் எவ்வளவு ?
8.காசுகள் தயாரிக்க என்னென்ன உலோகங்கள் பயன்படுகின்றன ?
9.கல்கத்தாவை உருவாக்கியவர் யார் ?
10.டெலிபோன் இந்தியாவில் முதன் முதலாக எப்போது
 ஆரம்பிக்கப்பட்டது ?
பதில்கள்:
1.யூகலிப்ட்ஸ், 2.36 தேசிய பூங்காக்கள்,3.லடாக்-கார்டங்
சாலை,4.வாலண்டினா டெரெஷ் கோவா,5.விமன்ஸ் லிப்,
6.கி.மு.323ல், 7.6080 அடி தொலைவு, 8.அலுமினியம்,
கப்ரோ நிக்கல்,ஸ்டெயின் லெஸ்ட் ஸ்டீல்,9.ஜாப் சார்னக்,
10.26-1-1888. 
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழில் தோன்றிய முதல் அகராதி எது ?
2.இந்தியாவில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்ச்சாலை எங்கு
  எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
3.ஜப்பானின் தேசிய விளையாட்டு என்ன ?
4.கண் இமைக்கும் நேரம் எவ்வளவு ?
5.வீனஸ் கோள் ஒரு சுற்றுக்கு எத்தனை நாள்
  எடுத்துக்கொள்கிறது ?
6.குளிக்கும் போது மனிதத்தோல் எவ்வளவு தண்ணிரை உறீஞ்சும்?
7.உலகிலேயே அதிக சிலைகள் யாருக்கு நிறுவப்பட்டது ?
8.நீக்ரோ நதி என்னும் நதி எந்த நாட்டில் ஒடுகிறது ?
9.இந்தியாவில் கடலை உற்பத்தியின் இதயம் எது ?
10.இந்தியாவின் முதல் இரயில் எப்போது ஓடத்தொடங்கியது?
பதில்கள்:
1.சதுரகராதி, 2.1921 -கல்கத்தாவில்,3.பேஸ்பால் ,
4.3/10 வினாடிகள்,5.243 நாட்கள், 6.50கிராம்,
7.லெனின், 8.கொலம்பியா,9.செளராஷ்டிரா,
10.26-1-1853. 
 
 
இன்று ஜூலை 8 
பெயர் : ராஜசேகர ரெட்டி,
பிறந்ததேதி : ஜூலை 8, 1949
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப்
பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.
இந்திய மக்களவைக்கு நான்கு முறையும்
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo