Wednesday, September 8, 2010

மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.

ஜூலை 21, 2010
திரைப்படங்களை மிகத்துல்லியமாக நாம் வெள்ளித் திரையில்
மட்டுமல்ல கணினியிலும் பார்க்கலாம் என்று சொல்லும் அளவிற்கு
துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொண்டு ஒரு இணையதளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

பிரான்ஸ்-ல் இருந்து தோழி பூங்கோதை என்பவர் திரைப்படங்களை
துல்லியமான பார்க்க உதவும் இணையதளம் பற்றி கேட்டிருந்தார்
எத்தனையோ பல இணையதளங்கள் இருந்தாலும் அத்தனையிலுமே
ஆபாசம் தான் முதல் பக்கமாக இருந்து இரண்டு நாள் தேடலுக்குப்பின்
ஒரு இணையதளம் கிடைத்தது. இந்த இணையதளத்தில் துல்லியமான
திரைப்படங்கள் மட்டுமே உள்ளது.
இணையதள முகவரி : http://divxonly.com
புதிதாக எல்சிடி வாங்குபவர்கள் அதிகமான பேர் பார்க்க விரும்புவது
துல்லியமான திரைப்படங்களைத் தான். இவர்களுக்காகவே DIVX தரத்தில்
திரைப்படங்களை வழங்குகின்றனர். அத்தனை படங்களுமே DIVX
தரத்தில் தான் உள்ளது.  காமெடி படம், ஆக்சன் படம் , நாடகம் போன்ற
அனைத்துமே இங்கு துல்லியமான தரத்தில் காண்பிக்கப்படுகிறது.
திரைப்படங்களை விரும்பி பார்க்கும் நபர்களுக்கு இந்தத் தளம்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
ஞானம் அடைய எளிதான வழி , ஒரு மனிதன் இறந்த பின்
என்ன நடக்கிறது என்பதை யோசித்தால் எளிதாக ஞானம்
அடையலாம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ் நாடக உலகின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?
2.எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் படம் எது ?
3.ஜான்சிராணியின் பெயர் என்ன ?
4.செதில்களே இல்லாத மீன் எது ?
5.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது ?
6.’கிபாட்’ என்பது எந்த நாட்டு நாணயம் ?
7.சூரியகிரகணம் எந்தத்திதியில் ஏற்படும் ?
8.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
9.ஒளிசுழற்சி மாற்றியம் எது ?
10.வாத்துக்கள் எந்த நேரத்தில் முட்டையிடும் ?
பதில்கள்:
1.சங்கரதாஸ் சுவாமிகள், 2.நாடோடி மன்னன்,3.லட்சுமிபாய்,
4.நியூகினி,5.அஸிட்டிக் அமிலம்,6.பர்மா,7.அமாவாசை,
8.அஞ்சலி,9.மெண்டலிக் அமிலம்,10.அதிகாலையில் மட்டும்.
இன்று ஜூலை 20  
பெயர் : மார்க்கோனி,
மறைந்ததேதி : ஜூலை 20, 1937
வானொலியைக் கண்டு பிடித்தவர்.
"வானொலியின் தந்தை" எனப்படுபவர்.1909-ல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
கம்பியிலாத்தொலைத் தொடர்பில் ஆர்வம்
ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம்
வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில்
'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] மூலம்
தொடர்பு  ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo