Wednesday, September 8, 2010

பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி


ஆகஸ்ட் 31, 2010
பேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை
பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை
நம் கணினியில் எப்படி சேமித்து வைப்பது என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
பேஸ்புக்-ல் தினமும் பல்லாயிரக்கணக்கான வீடியோ உலாவருகிறது
இதில் பல வீடியோக்கள் பயனுள்ளதாகவும், பொழுதுபோக்கு
நிறைந்துள்ளதாகவும் உள்ளது இப்படி பட்ட வீடியோக்கள் பேஸ்புக்-ல்
ஃபிளாஸ் பிளேயர் துனையுடன் இயங்குகிறது. இந்த வீடியோவை
நம் கணினியில் எளிதாக தரவிரக்கலாம்.பேஸ்புக்-ல் வரும் வீடியோ
முகவரியுடன் “down” என்ற வார்த்தையை முன்னால் சேர்த்தால்
போதும் உடனடியாக நம் கணினியில் சேமிக்கலாம்.
உதாரணமாக  பேஸ்புக் வீடியோ முகவரி :
http://www.facebook.com/video/video.php?v=1179930101321
இதில் facebook எனபதற்கு முன் down என்ற வார்த்தையை
சேர்த்துள்ளோம்.
http://www.downfacebook.com/video/video.php?v=1179930101321
படம் 2
ஃபிளாஷ் பிளேயர் அப்டேடட் வெர்சன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பிரச்சினை இல்லாமல் தரவிரக்கலாம். முகவரியை சொடுக்கியதும்
வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது. Download link  என்பதில்
http என்பதிலிருந்து தொடங்கி html வரை தேர்வு செய்து படம் 2-ல்
உள்ளபடி காப்பி செய்து புதிய tab திறந்து இந்த முகவரியை கொடுத்து
நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக இந்ததகவல்
நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
2.இந்தியாவின் தேசிய மரம் எது ?
3.முதல் தமிழ் பத்திரிகை எது ?
4.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
5.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
6.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
7.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
8.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
9.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
10.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
பதில்கள்:
1.குறிப்பறிதல்,2.ஆலமரம்,3.சிலோன் கெஜட்,4.சுதேசமித்திரன்,
5.சரோஜினி அரிச்சந்திரன்,6.பாத்திமா பீவி,7.பெங்களூர்,
8.சகாப்தம்,9.Postal Index Code,10.1498 -ல்.


இன்று ஆகஸ்ட் 31  
பெயர் : ஜோர்ஜெஸ் பிராக் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 31, 1963
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியரும்,
சிற்பியும் ஆவார். கியூபிசம் எனப்படும் ஓவியப்
பாணியை உருவாக்கியோராகக் கருதப்படுபவர்
-களுள் இவரும் ஒருவர். மற்றவர் பாப்லோ
பிக்காசோ.


சிந்தனை
லஞ்சம் வாங்கும் மக்களின் குழந்தைகள் மட்டுமல்ல ,
தந்தையும் செய்த பாவத்தை தொலைத்தே ஆக வேண்டும்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo