Wednesday, September 8, 2010

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நெடுந்தொகை எனக் கூறப்படும் நூல் எது ?
2.குறிஞ்சிப்பாட்டு யாரால் எழுதப்பட்டது ?
3.சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் எப்போது
 தொடங்கப்பட்டது ?
4.இந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு
 தடைவிதிக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?
5.புறா பந்தயத்தின் தாயகம் எது ?
6.’பத்மஸ்ரீ’ பட்டம் வாங்க மறுத்த பத்திரிகை ஆசிரியர் யார் ?
7.டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பிறந்த ஊர் எது ?
8.2001 - 2002 ஆம் ஆண்டை மத்திய அரசு என்ன ஆண்டாக
  அறிவித்தது ?
9.சென்னையில் சிறிய சட்டமன்றத் தொகுதி எது ?
10.நமது உடலில் கனமான உறுப்பு எது ? 
பதில்கள்:
1.அகநானுறு, 2.கபிலர்,3.பிப்ரவரி 17,2001
4.கேரளா, 5.பெல்ஜியம்,6.ஏ.என். சிவராமன்,7.மோவு,
8.அகிம்சை ஆண்டு,9.சேப்பாக்கம்,10.மூளை.
 
 
இன்று ஆகஸ்ட் 6   
பெயர் : அலெக்சாண்டர் பிளெமிங்
பிறந்த தேதி : ஆகஸ்ட் 6, 1881
நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக்
கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர்
கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம்
நொடேடம் என்ற பூஞ்சையிலிருந்து
பிரித்தெடுத்தவர்.
 
சிந்தனை
நாம் எந்த தவறும் செய்யாமல் அடுத்தவர் நம்மை திட்டினாலும்
அதை காதில் வாங்காமல் செல்லுங்கள். தன்னை அறியாமல்
பிழை செய்யும் அவர்களை நாம் தான் மன்னிக்க வேண்டும்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo