Wednesday, September 8, 2010

நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்

ஆகஸ்ட் 15, 2010
இந்தியாவின் சுதந்திர தின இந்நாளில் நம் தேசத்தின் விடுதலைக்காக
பாடுபட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அனைத்து தமிழ்மக்களின்
சார்பில் என்றும் மறவாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்ட அத்தனை நல்ல
உள்ளங்களையும் நினைவு கொள்ளும் இந்த நாளில் பெற்ற சுதந்திரத்தை
சத்தியமான வழியிலும் நேர்மையான வழியிலும் கொண்டு செல்லும்
ஒரு மனிதரைப்பற்றிய சிறப்புப்பதிவு.

மக்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்கும் பலன்கள் இடைத்தரகர்கள்
யாரும் இல்லாமல் நேரடியாக செல்ல வேண்டும் என்பதில் இவருடைய
முயற்சி தெரிகிறது. ஆங்கிலம் பேசிக்கொண்டு வருபவரிடம் தான்
பேசுவோம் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு விவசாயி
கூட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக பேசலாம் என்ற
பாதையை வகுத்தவர். லஞ்சம் என்ற ஒன்று தன் மாவட்டத்தில்
எங்குமே காணமல் செய்ய வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக
திகழ்பவர். ஒரு மாவட்டத்தில் நடக்கும் அத்தனை புகார்களையும்
ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தன் கவனத்துக்கு கொண்டு வர
வேண்டும் என்ற நோக்கில் இணையதளம் மூலம் புகார் செய்யும்
முறையை அறிமுகப்படுத்தி புதுமைக்கு வித்திட்டவர் மட்டும்
அல்லாமல் 1450 புகார்களுக்கு தீர்வும் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட மக்கள் ஆன்லைன் -ல் புகார் அளிக்க
வேண்டிய இணையதள முகவரி : http://namakkalcollector.net
தன் வங்கி சேமிப்பு 7,172 ரூபாய் என்பதை வெட்ட வெளிச்சமாக
அனைவருக்கும் காட்டியவர். விவசாயிகளிடம் சென்று அவர்களிடம்
நேரடியாக பேசி பிரச்சினைகளை தீர்க்க வழி செய்வது இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம் இத்தனை புகழுக்கும் சொந்தகாரர்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சகாயம் அவர்கள், எளிமை,
அன்பு ,பணிவு , கனிவு என்ற மூன்றும் நாம் இவரிடம் இருந்து
கற்றுக்கொள்ள வேண்டியது. இந்த சுதந்திர தின நாளில் சத்தியத்தையும்,
நேர்மையையும், தேசப்பக்தியையும் வாழ்வின் ஆதாரமாக கொண்டு
வாழும் இந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வின்மணியின் சார்பிலும்
நம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் சல்யூட். நன்றி ஐயா என்றும்
நாங்கள் உங்களோடு வேராக இருந்து உங்களின் அனைத்து
முயற்சிக்கும் பக்கபலமாக இருப்போம்.
வின்மணி சிந்தனை
உண்மைக்காகவும் நியாத்துக்காகவும் போராடும் ஒவ்வொருவரும்
கடவுளின் அன்பான குழந்தைகள் தான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?
2.இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?
3.கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?
4.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
5.முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?
6.சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?
7.சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது ?
8.இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ?
9.ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
10.வேகமாய் வளரும் மரம் எது ?
பதில்கள்:
1.கரிசல் மண்,2.ஆகஸ்ட் 10 , 1948, 3.கேரளா,
4.மெக்ஸிகோ வளைகுடா, 5.ரஷ்யா,6.1931 ஆம் ஆண்டு,
7.இங்கிலாந்து, 8.கிரேட் நிக்கோபார், 9.கி.மு.753
10.யூக்லிப்டஸ்
இன்று ஆகஸ்ட் 15 
பெயர் : இந்திய சுதந்திர தினம்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 15, 1947
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து
இந்தியா தனி சுதந்திர நாடான நாள். இந்நாளில்
நம் தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட
அத்தனை மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
என்றும் உங்களை நம் தேசம் மறவாது.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo