Thursday, September 9, 2010

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

April 29, 2010
லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
படம் 1
கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.
முகவரி :  http://www.caffinc.com/files/monpwr/monpwr.exe
இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக
Double Click  செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
நல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும்  தீங்கு செய்ய
மனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு
கெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?   
5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?  
6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
9.அம்ரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
பதில்கள்:
1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,
5.88.9%,6.குடியரசுத்தலைவர்,7.அமெரிக்கா,8.6 கி.மீ,
9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ
இன்று ஏப்ரல் 29 
பெயர் : ரவி வர்மா,
பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848
நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்
வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி
ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ்
பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo