Wednesday, September 8, 2010

நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்

நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை உலகத்தில் உள்ள அனைத்து
நண்பர்களும் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்-ல் நேரடியாக
ஒளிபரப்பு செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

பிரம்மாண்ட படங்களின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை நேரடி
ஒளிபரப்பு செய்த காலம் எல்லாம் மாறி இப்போது நம் வீட்டு திருமண
நிகழ்ச்சியைக் கூட உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
சொந்தங்களுக்கும் நேரடியாக இணையம் மூலம் காட்டலாம்.
பேஸ்புக் தன் பயனாளர்களுக்காக அவர்களது முக்கியமான
எல்லா நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பேஸ்புக்
லைவ் வீடியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் ஸ்டிரிம்
என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த நேரடி ஒளிபரப்பை
அனைத்து அனைத்து நண்பர்களும் நேரடியாக இருக்கும்
இடத்தில் இருந்தே பார்க்கலாம். இலவசமாக இந்த சேவையை
கொடுத்திருப்பதால் ஏற்கனவே சோசியல் நெட்வொர்க்-ல்
முன்னனியில் இருக்கும் பேஸ்புக் இனி யாரும் நெருங்க
முடியாத தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை. பேஸ்புக் லைவ்-ல் வீடியோ பார்க்க விரும்பும்
நபர்கள் இந்த முகவரியைச் சொடுக்கி பார்க்கலாம்.
http://apps.facebook.com/facebooklive

வின்மணி சிந்தனை
அடுத்தவர் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும்
நபர்களிடம் இருந்து எப்போதும் விலகி இருப்பது நன்று.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பறக்க இயலாத பறவை ?
2.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?
3.ஸ்பெயின் நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
4.செவ்வாய் கிரகத்துக்கு எத்தனை துனை கோள்கள் உள்ளன?
5.இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் ?
6.கடலில் கலக்காத நதி எது ?
7.விஜய நகரத்தை தாக்கி அழித்தவர்கள் யார் ?
8.கூடுகட்டாத பறவை எது ?
9.பிரமிடுகள் உள்ள நாடு எது ?
10.காமன்வெல்த் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
பதில்கள்:
1.நெருப்புக் கோழி,2.ஜார்ஜ் வாஷிங்டன் 3.எஸ்பானா,
4.இரண்டு, 5.கொல்கத்தா யுவபாரதி ஸ்டேடியம்,6.யமுனா,
7.பாமினி அரசர்கள் 8.குயில், 9.எகிப்து,10.54 நாடுகள்
இன்று ஆகஸ்ட் 13 
பெயர் : எடுவர்டு பூக்னர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 13, 1917
ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்
நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.
இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே
நொதிக்கச்செய்யும் முறையக் கண்டதற்காக,
1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo