Thursday, September 9, 2010

படத்திலுள்ள எழுத்துக்களை ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த எழுத்துகளாக மாற்றலாம்.

மே 2, 2010
ஆங்கிலநாளிதளின் செய்தி ஒன்றை தட்டச்சு செய்வதற்க்கு பதிலாக
நாம் அந்த பக்கத்தை படமாக சேமித்து வைத்து அதை ஆன்லைன்
மூலம் தட்டச்சு செய்த எழுத்தாக மாற்றலாம் இதைப்பற்றிய
ஒரு சிறப்பு பதிவு.

சிங்கப்பூரில் இருந்து தோழி ராகவி படத்திலிள்ள எழுத்துக்களை
பிரிப்பதற்க்கு ஆன்லைன் மூலம் ஏதாவது வழி இருக்கிறதா என்று
கேட்டிருந்தார் அவருக்காகவும் நம் நண்பர்களுக்காகவும் தான் இந்த
பதிவு. நாம் OCR என்று சொல்லக்கூடிய Optical character recognition
மென்பொருட்களைத்தான் படத்திலுள்ள எழுத்துக்களை பிரிப்பதற்க்கு
பயன்படுத்துகிறோம் ஆனால் எந்த மென்பொருள் துனையும்
இல்லாமல் நாம் ஒரு JPG படத்தையோ அல்லது BMP படத்திலுள்ள
எழுத்துக்களையோ தட்டச்சு செய்து வேர்ட்-ல் மாற்றியது போல்
செய்ய ஒரு வழி இருக்கிறது. நாம் எந்தப் படத்திலுள்ள எழுத்துக்களை
மாற்ற வேண்டுமோ அந்த படத்தை ocr@n1ne.net இந்த இமெயில்
முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஸ்கேன் செய்து வைத்துள்ள
படத்தில் எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் அனுப்பலாம்
எவ்வளவு பெரிய அளவு படமாக இருந்தாலும் அனுப்பலாம்
உடனடியாக நமக்கு சில மணி நேரங்களுக்குள் நாம் கொடுத்த
புகைப்படததை தட்டச்சு செய்த எழுத்தாக மாற்றி வேர்டு கோப்பாக
நமக்கு அனுப்பிவிடுகின்றனர். இதில் என்ன சிறப்பம்சம் என்றால்
எந்த கணக்கும் துவக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள்
கண்டிப்பாக இந்த சேவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
ஆங்கில மொழியில் உள்ள படங்களை சிறப்பாக மாற்றித் தருகிறது
தமிழ் மொழியில் உள்ள படங்களை அத்தனை சிறப்பாக மாற்றுவதில்லை.
வின்மணி சிந்தனை
அடுத்தவர் நலனில் அக்கறை எடுக்கும் யாரும் தன்
நலனை பற்றி கவலைப்பட தேவையில்லை எனென்றால்
அதை கடவுள் பார்த்துக்கொள்வார்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குளிர்காலத்தில் அதிக மழை பெறும் மாநிலம் எது ?
2.இந்தியாவில் முதல் அனுமின் நிலையம் எங்குள்ளது ?
3.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
4.தமிழ்நாட்டின் முதல் பெண்மேயர் யார் ?
5.கடல் மட்டத்திற்க்கு கீழே உள்ள நாடு எது ?
6.பெண்குதிரைக்கு எத்தனை பற்கள் ?
7.பைபிள் எந்த மொழியில் எழுதப்பட்டது ?
8.சர்வதேச உணவுப்பொருள் எது ?
9.நமது உடலில் வியர்க்காத பகுதி எது ?
10.முதல் கிரிக்கெட் நேர்முக வர்ணனை எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ? 
பதில்கள்:
1.தமிழ்நாடு,2.தாராப்பூர், 3.வன்மீகம்,4. தாரா செரியன்
5.டென்மார்க்,6.40 ,7.ஹீப்ரு, 8.முட்டைகோஸ்,9.உதடு,
10.1930-ல் 
இன்று மே 2 
பெயர் : லியொனார்டோ டாவின்சி
மறைந்த தேதி : மே 2, 1519
ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்
கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும்,
பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும்
ஆவார். ஒரு பல்துறை மேதையாகக்
கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான
ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி
விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa)
போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo