Wednesday, September 8, 2010

RaKa _TNPSC பாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம்,கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்.

 


மே 27, 2010
கணினி விட்டு கணினி தகவல்களை பாதுகாப்பாகவும் வேகமாகவும்
அனுப்பலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
படம் 2
இமெயில் மூலமும் ரேபிட்ஷேர் இன்னும் பல இணையதளங்கள்
மூலமும் நாம் தகவல்களை அனுப்பி இருக்கிறோம் ஆனால்
ஒருவருக்கு மட்டும் தகவல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம் இதற்க்கு டீம்வியூவர்,ரெட்மின் போன்ற தளங்கள்
இருந்தாலும் இந்தத்தளத்தில் நாம் தகவல்களை அப்லோட் செய்ய
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இப்படி எந்தப்பிரச்சினையும்
இல்லாமல் நம் தகவல்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம்.
இணையதள முகவரி :  http://isendr.com
இந்தத்தளத்திற்க்கு சென்று படம் 1-ல் காட்டியபடி send file என்ற
பொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய கோப்பை தேர்ந்தெடுக்கவும்
கடவுச்சொல் வேண்டுமால் கூட கொடுத்துக்கொள்ளலாம். இப்போது
படம் 2 ல் காட்டியபடி ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த
முகவரியை நாம் யாருக்கு கோப்பு அனுப்ப வேண்டுமோ அவருக்கு
கொடுக்கவும் இப்போது peer to peer protocol மூலம் நம் கணினியில்
நாம் தேர்ந்தெடுத்த கோப்பை அவர் நேரடியாக தரவிரக்க முடியும்.
தரவிரக்கி முடிந்ததும் அந்த இணையதள முகவரி தன் பயன்பாட்டை
முடித்துக்கொள்ளும்.கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
 
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை ?
2.பனிக்கட்டியின் உருகுநிலை எத்தனை டிகிரி செல்சியஸ்?
3.சிலந்தி நண்டு எங்கே அதிகம் காணப்படுகிறது ?
4.எகிப்து நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன ?
5.பொன் கோபுர நாடு எனப்படுவது எது ?
6.’யோக சூத்திரம்’ எழுதியவர் யார் ?
7.ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினம் எது ?
8.உலகில் பெருமளவில் கிடைக்கும் வாயு எது ?
9.ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எந்த ஆண்டில்
  அரசுடமைக்காகப்பட்டது ?
10.’கருட பஞ்சமி ‘ யாரால் கொண்டாடப்படும் நாள் ?
பதில்கள்:
1.133, 2.0 டிகிரி, 3.அமெரிக்கா, 4.பவுண்ட்,5.பர்மா,
6.ஸ்ரீ பதஞ்சலி முனிவர்,7.ஜூலை 4, 8.நைட்ரஜன்,
9.1.1.1949,10. பெண்களால்
 
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலக நாடக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
2.எந்த நோய் பாக்டீரியாவால் பரவுவதில்லை ?
3.ஜூபிடர், பூமி இதில் எது பெரியதாக இருக்கும் ?
4.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் ?
5.ராஜ நாகத்தின் ஆயுட்காலம் எவ்வளவு ?
6.இயற்கையான வெந்நீர் ஊற்றுக்கு என்ன பெயர் ?
7.காஷ்மீர் மாநிலத்தின் மாநில மிருகம் எது ?
8.13 மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்த இந்திய
  பிரதமர் யார் ?
9.இந்தியா சுதந்திரம் அடைந்த போது எத்தனை
  மன்னர்கள் இருந்தனர் ?
10.செவ்வாய் கிரகத்தில் இறங்கிய முதல் விண்கலம் எது ?
பதில்கள்:
1.மார்ச் 27, 2.பெரியம்மை, 3.ஜூபிடர்,
4. ஹால்,5.14 ஆண்டுகள், 6.கெய்சர்,7.கஸ்தூரிமான்,
8. பி.வி.நரசிம்மராவ்,9.552 ,10. மார்ஸ் 3 


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.வாசுகி, 2.விழுப்புரம், 3.லிட்டில்பாய்,
4.காபூல்,5.தியாகம், 6.கிரான்ஸ்டட்,7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,9.பங்காளதேஷ்,10.கே.ஆர்.நாராயணன்
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வெனீஸ் பட விழாவில் ஏழு பரிசுகளை வென்றப்படம் எது ? 
2.முசோலினி எந்த நாட்டின் சர்வதிகாரியா இருந்தார் ?
3.வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் இடம் தமிழகத்தில்
  எங்குள்ளது ?
4.லாட்டரியை அறிமுகப்படுத்திய நாடு எது ?
5.இந்தியாவின் இயற்கை அரண் எது ?
6.அமீபா எத்தனை செல் உயிரினம் ?
7.பழனிக்கு பண்டைய கால பெயர் எது ?
8.குடிக்கும் சோடாவில் கலந்துள்ள வாயு எது ?
9.உத்திரப்பிரதேசத்தின் இரண்டாவது பெண் முதல்வர் யார் ?
10.முதலை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் ? 
பதில்கள்:
1.செவன் சாமுராய், 2.இத்தாலி, 3.குன்னூர்,
4.இங்கிலாந்து,5.இமயமலை, 6.ஒரே செல்,7.வையாபுரி,
8.கார்பன்டைஆக்சைடு,9.மாயாவதி,10.100 ஆண்டுகள் 
 

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்.

ஜூன் 4, 2010
கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும்
ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம். எப்படி
என்பதை பற்றி தான் இந்த பதிவு.
படம் 1

கணினி துறையில் எந்த மொழி படிக்க வேண்டும் என்றாலும்
கடையில் சென்று புத்தகம் தேடவேண்டாம் அதே போல்
பல இணையதளங்ககிற்கு சென்றும் தேட வேண்டாம். இந்த
இணையதளத்திற்க்கு சென்று நாம் அனைத்து வகையான
புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.ebookpdf.net
இந்த தளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியது போல்
அங்கு இருக்கும் தேடுபொறியில் நமக்கு கணினியில் பிடித்த
புத்தகத்தின் பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில
நிமிடங்களில் நாம் தேடிய புத்தகத்தை எளிதாக காட்டும்
உடனடியாக தரவிரக்கிக்கொள்லலாம். ஒவ்வொரு துறைவாரியாக
பல தரப்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளது. சில தினங்களுக்கு
முன் வரை வெளியான அனைத்து புத்தகங்களையும் நாம்
கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.
 

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது ?
2.இந்தியத் திட்டக்கமிஷன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
3.சுயிங்கம் தயாரிக்கப்பயன்படும் மரம் எது ?
4.ஆஃப்செட் அச்சு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?
5.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ?
6.விடுபடும் திசைவேகத்திற்க்கு உதாரணம் என்ன ?
7.உலகத்திரை உலகின் திகில் மனிதர் யார் ?
8.கிருஷ்ணன் குடையாக தூக்கிய மலை எது ?
9.மெளஃளேன் என்றால் என்ன ?
10.டில்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண்முதல்வர் யார் ?
பதில்கள்:
1.எறும்புகளால், 2.1950, 3.சயோடில்லா,
4.ரபேல்,5.ரேடியம், 6.ராக்கெட்,7.ஹிட்சாக்,
8.கோவர்த்தனகிரி,9.காட்டு வெள்ளாடு,10.சுஷ்மா சுவராஜ்
 
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மரகத கல்லின் நிறம் என்ன ?
2.இந்தியாவின் எலக்ட்ரானிக் நகரம் எது ?
3.பாதரச சல்பேட்டின் நிறம் என்ன ?  
4.கல்பாக்கம் அணு உலையின் பெயர் என்ன ?
5.பிளாஸி யுத்தம் எந்த ஆண்டு நிகழ்ந்தது ?
6.மகான் அரவிந்தரின் தாய் மொழி எது ?
7.அதிகப்பால் தரவல்ல செம்மறி ஆடு எது ?
8.பாராசூட்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது ?
9.ஸ்ரீராமானுஜரின் வேத ஆசிரியர் யார் ?
10.’மாதங்கம்’ என்பது எந்த மிருகத்தை குறிக்கின்றது ?
பதில்கள்:
1.பச்சை, 2.பெங்களூர், 3.கருப்பு,
4.பூர்ணிமா,5.1757, 6.மலையாளம்,7.பீட்டல்,
8.நைலான்,9.யாதவப் பிரகாசர்,10.யானை  

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சரஸ்பூர் எந்த மாநிலத்தில் உள்ளது ?
2.தொழுநோயை போக்கும் தன்மை கொண்ட மருந்து எது ?
3.சந்திரனில் ஒலியை ஏன் கேட்க முடியாது ?
4.இந்தியாவின் கடற்படை தலமையகம் எங்குள்ளது ?
5.1995 ஆம் ஆண்டு பெப்ஸி கோப்பையை வென்ற நாடு எது ?
6.இரவில் மலரும் அற்புத மலர் எது ?
7.’கருப்பு ஈயம் எனப்படும் தாது எது ?
8.’டிக்பாய்’ என்பது என்ன ?
9.மைக்டைசன் எந்த விளையாட்டுடன் தொடர்புள்ளவர் ?
10.’நாகசாகி’ நகரம் எந்த நாட்டில் உள்ளது ?
பதில்கள்:
1.அஹமதாபாத், 2.கந்தகம், 3.காற்று இல்லாததால்,
4.டெல்லி,5.இந்தியா, 6. நிஷகந்தி,7.கிராபைட்,
8.பெட்ரோலியம் தொழிற்சாலை,9.பாக்ஸிங்,10.ஜப்பான் 
 
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’இரண்டாம் உலகப்போர்’ குறிப்புகள் என்ற நூலை
   எழுதியவர் யார் ?
2.’நந்தி மலை’ எங்குள்ளது ?
3.காற்றின் வேகத்தை அளக்கும் கருவி ?
4.’நீலப்புரட்சி’ எதனோடு தொடர்புடையது ?
5.மரண தண்டனையை தடுக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு ?
6.’கொல்லி மலை’ எந்த மாவட்டத்தில் உள்ளது ?
7.இந்திய எல்லைக்கோட்டை உருவாக்கியவர் யார் ?
8.பழங்குடி ’நாகர்கள்’ எந்த இடத்தில் வசிக்கின்றனர் ?
9.விண்வெளிக்கலம் ஆரியப்பட்டா எங்கு தயாரிக்கப்பட்டது ?
10.’தான் சேன்’ என்பவர் எந்தத்துறையில் சிறந்தவர் ?
பதில்கள்:
1.சர்ச்சில், 2.மைசூர், 3.அனிமா மீட்டர்,
4.மீன்,5.ஜனாதிபதி, 6.நாமக்கல்,7.ஹேன்றி மக்மகான்,
8.நாகாலாந்து,9.தும்பா,10.இசை 

இன்று ஜுன் 4 
பெயர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் ,
பிறந்த தேதி : ஜுன் 4, 1946
புகழ்பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்தியத்
திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966 இல்
ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி
திரைப்படங்களில் பாடத் தொடங்கப்பட்டார்.
1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.
 
வின்மணி சிந்தனை
அடுத்தவர் உழைப்பினால் விழையும் எந்த பொருளுக்கும்
ஆசைப்படாதவன் மன அளவில் கூட பாதிக்கப்பட மாட்டான். 

 சிந்தனை
நல்ல நண்பர்கள் இறைவன் நமக்கு கொடுத்த வரம்
தீயநண்பர்கள் நாம் செய்த பாவம்.
 
 இன்று ஜுன் 2 
பெயர் : இளையராஜா ,
பிறந்த தேதி : ஜுன் 2, 1943
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்
பாளர்களுள் ஒருவர்.அன்னக்கிளி என்ற தமிழ்த்
திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம்
1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார்.
இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம்,
கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில்
மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம்
ஆண்டு அளிக்கப்பட்டது. ஆன்மிக நாட்டம் உள்ளவர்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’சாங்கி’ விமான நிலையம் எங்குள்ளது ?
2.மணநூல் என்றழைக்கப்படும் காப்பியம் எது ?
3.கொசுவுக்கு எத்தனை பற்கள் உண்டு ?
4.எந்த ஊரில் ஒன்றைக்கல் ரதம் அமைந்துள்ளது ?
5.காலில் கண் உள்ள பிராணி எது ?  
6.ஆங்கிலேயர் அளித்த ’சர்’பட்டத்தை திருப்பி கொடுத்தவர் யார்?
7.பார்சி இனத்தவரின் அமைதி கோபுரம் எங்குள்ளது ?
8.உலகிலேயே அதிகமாக எந்த நாட்டு பசு பால் கொடுக்கிறது ?
9.கேஸ் ஸ்டவ்வை கண்டுபிடித்தவர் யார் ?
10.’கலாபம் எனப்படுவது எது  ?
பதில்கள்:
1.சிங்கப்பூர், 2.சீவக சிந்தாமணி, 3. 47 பற்கள்  ,
4.மாமல்லபுரம் ,5.வெட்டுக்கிளி, 6.ரவீந்தரநாத்தாகூர்,
7.மும்பை, 8.அமெரிக்கா,9.ஜேம்ஸ் ஷார்ப்,10.மயில் தோகை 

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மத்திய ரேகையின் நீளம் என்ன ?
2.சத்தம் போடாத விலங்கு எது ?
3.தண்டுவடத்தின்  நீளம் எவ்வளவு ?
4.’ப்ரகதி’ மைதானம் எங்குள்ளது ?
5.பூனை எத்தனை மாதங்களில் குட்டி ஈனும் ?
6.கவிஞர் கண்ணதாசன் எந்த ஊரில் காலமானார் ?
7.’யூதர்கள்’ என்போர் யார் ?   
8.குதிரையின் மேல் அமர்ந்தபடி விளையாடப்படும்
  விளையாட்டு எது ?
9.இந்திரா காந்தியை சுட்டு கொண்றவன் பெயர் என்ன ?
10.அருணகிரி நாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
பதில்கள்:
1.39891 கி.மீ, 2.ஒட்டகச்சிவிங்கி, 3.சுமார் 18 அங்குலம்,
4.புதுடெல்லி ,5.மூன்று, 6. சிகாகோ,7.பாலஸ்தீன நாட்டை
சேர்ந்தவர்கள், 8.போலோ,9.சத்வந்த் சிங்,10.திருவண்ணாமலை
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’ஐங்கடல் நாடு’ என்று அழைக்கப்படுவது எது ?
2.தமிழில் முதல் பேசும் படம் எது ?
3.ஒரு நிமிடத்திற்க்கு 200 முறை சுவாசிக்கும் உயிரினம் எது ?
4.சரிஸ்கா புலி பூங்கா எங்கே உள்ளது ?
5.அக்பர் பின்பற்றிய ஷெர்ஷாவின் சீர்திருத்தம் எது ?
6.இந்தியாவின் முதல் பெண் குதிரைப் பந்தய வீராங்கனை யார்?
7.வாத்து இனங்கள் எத்தனை ?
8.’வால்ட் டிஸ்னி’எத்தனை ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது?
9.முதன்முதலில் கட்டுமான கோவில்களை கட்டிய மன்னர் யார்?
10.முதன்முதலாக கேள்விக்குறி பயன்படுத்தப்பட்ட மொழி எது?
பதில்கள்:
1.ஆசியா, 2. காளிதாஸ், 3.எலி, 4.மத்தியப்பிரதேசம்,
5.நில வருவாய் சீர்திருத்தம்,6.ஆயிஷா காப்டன்,7.180,
8. 32 , 9.ராஜசிம்மன்,10.லத்தீன் மொழி 

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் மிக பழமையான பொது அஞ்சலகம் எங்குள்ளது?
2.வைட்டமின் உலோகம் எனப்படுவது எது ?
3.பறவைகளை பற்றிய அறிவியல் பிரிவு எது ?
4.திரிபுராவின் தலைநகரம் எது ?
5.எந்த நாளை உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடுகிறோம்?
6.இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக பதவி வகித்தவர் யார்?
7.ஐ.ஜீ.கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட விருது எது ?
8.தண்ணிரை விட லேசான உலோகம் எது ?
9.நெம்புகோல் தத்துவத்தை கண்டுபிடித்தவர் யார்?
10.கோபால்ட் உலோகம் தீர்க்கும் நோய் எது ?
பதில்கள்:
1.சென்னை, 2.வனாடியம், 3.ஆர்ட்னிதாலஜி, 4.அகர்தலா,
5.டிசம்பர் 1, 6.சர்தார் வல்லபாய் படேல்,7.ராமன் மகசேசே,
8.லித்தியம், 9.ஆர்க்மெடிஸ்,10.இரத்த சோகை

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo